வெளுத்து விட்டாச்சு! பட்ஜெட்ல 6400mAh பேட்டரி.. Turbo-க்கு லாங் பேட்டரி.. AMOLED டிஸ்பிளே.. SONY கேம்.. மாடல்?
கேமிங் பிரியர்களுக்கான பட்டையை கிளப்பும் பீச்சர்களுடன் வெளியான ஐக்யூ இசட்9 டர்போ (iQOO Z9 Turbo) போனின் லாங் பேட்டரி லைஃப் எடிஷன் (Long Battery Life Edition) களமிறங்க இருக்கிறது. இந்த ஐக்யூ எடிஷனின் பேட்டரி கேபாசிட்டி மற்றும் சிப்செட் பீச்சர்கள் வெளியாகி இருக்கின்றன. புது கலரிலும் கிடைக்க இருக்கிறது. என்னென்ன பீச்சர்களை எதிர்பார்க்கலாம்? எப்போது வெளியாகிறது? விலை எப்படி இருக்கும்? முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ஐக்யூ நிறுவனத்தின் இசட்9 டர்போ மாடலானது, கேமிங் பிரியர்களுக்கான பிரீமியம் டிஸ்பிளே மற்றும் பேட்டரி பீச்சர்கள் மட்டுமல்லாமல் சிப்செட்டிலும் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்படி வெளியானது. இதுபோக கேமரா பீச்சர்களிலும் குவாலிட்டி சென்சார்கள் கிடைத்ததால், மார்கெட்டில் மிகப்பெரும் வரவேற்பு பெற்றது. இதில், 6000mAh பேட்டரி கிடைத்தது.

இப்போது, 6400mAh பேட்டரியாக அப்கிரேட் செய்யப்பட்ட வர இருக்கிறது. இந்த பேட்டரியுடன் ஃபிளைங் ப்ளூ (Flying Blue) என்னும் புதிய கலரிலும் கிடைக்க இருக்கிறது. சிப்செட்டை பார்க்கையில், ஆக்டா கோர் 4என்எம் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 3 (Octa Core 4nm Snapdragon 8s Gen 3) கொடுக்கப்படுகிறது. இது ஏற்கனவே வெளியான வெர்ஷனில் கிடைத்த சிப்செட் மாடலாகும்.
ஆகவே, பேட்டரி மற்றும் கலர் அப்கிரேட் மட்டுமே புதிதாக கிடைக்க இருக்கிறது. மற்ற பீச்சர்கள் முந்தைய வெர்ஷனில் இருந்ததைபோல இருக்கப்போகிறது. இந்த ஐக்யூ இசட்9 டர்போ லாங் பேட்டரி லைஃப் எடிஷன் வரும் ஜனவரி மாதம் சீன மார்கெட்டில் வெளியாகிறது. அதன் பிறகு மற்ற நாடுகளில் கிடைக்கும். இப்போது முந்தைய வெர்ஷனின் பீச்சர்களை பார்ப்போம்.
ஐக்யூ இசட்9 டர்போ அம்சங்கள் (iQOO Z9 Turbo Specifications): அப்கிரேட் செய்யப்பட்ட பீச்சர்களை தவிர மற்ற பீச்சர்கள் ஒரே மாதிரியாகவே இருக்கும். ஆகவே, அதை பார்த்துவிடுவோம். இந்த ஐக்யூவில் 6.78 இன்ச் (2800 × 1260 பிக்சல்கள்) அமோலெட் டிஸ்பிளே, 1.5K ரெசொலூஷன், 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது.
மேலும், 480Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 3840Hz டிம்மிங் ஃபிரிகொன்சி வருகிறது. எச்டிஆர்10பிளஸ் (HDR10+), டால்பி விஷன் (Dolby Vision), டிசி டிம்மிங் (DC Dimming) கிடைக்கிறது. ஆக்டா கோர் 4என்எம் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 3 சிப்செட் மட்டுமல்லாமல், கேமிங் அவுட்புட் கொடுக்கும் அட்ரினோ 735 ஜிபியு (Adreno 735 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.
பழைய வெர்ஷனில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) இருக்கிறது. ஆனால், வரப்போகும் வெர்ஷனில் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. ஓர்ஜின் ஓஎஸ் 4 (Origin OS 4) வருகிறது. 50 எம்பி ரியர் கேமரா, கூடவே 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா உள்ளது. சோனி எல்ஒய்டி 600 சென்சார் பேக் செய்துள்ளது.
மேலும், ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் கிடைக்கிறது. சாம்சங் சென்சாருடன் 16 எம்பி செல்பீ ஷூட்டர் இருக்கிறது. பழைய மாடலில் 80W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வந்தது. இந்த மாடலிலும் அதையே எதிர்பார்க்கலாம். இன்பிராரெட் சென்சாரும், அண்டர்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சாரும் உள்ளது.
கேமிங் வெர்ஷனாக இருப்பதால், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) கிடைக்கின்றன. டைப்-சி ஆடியோ, IP64 ரெசிஸ்டன்ட் மற்றும் 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ கனெக்டிவிட்டி வருகின்றன. ரூ.23000 பட்ஜெட்டில் வெளியாகிறது. ஆகவே, வர இருக்கும் லாங் பேட்டரி எடிஷனின் விலை ரூ.25000 பட்ஜெட்டுக்குள் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.


Click it and Unblock the Notifications








