Home
Mobile

ஜன.3 குறிச்சாச்சு.. பட்ஜெட்ல iQOO லாங்-பேட்டரி வெர்ஷன்.. 6400mAh பேட்டரி.. எஸ்டி 8எஸ் ஜென் 3.. எந்த மாடல்?

ஐக்யூ (iQOO) பிரியர்கள் எதிர்பார்த்து கொண்டிருந்த தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. ஐக்யூ இசட்9 டர்போ லாங் பேட்டரி லைப் வெர்ஷன் (iQOO Z9 Turbo Long Battery Life Version) ஜனவரி 3ஆம் தேதி முதல் விற்பனைக்கு வர இருக்கிறது. இது ஏற்கனவே வெளியான ஐக்யூ இசட்9 டர்போ மாடலின் புது வெர்ஷனாகும். 6400mAh பேட்டரியுடன் களமிறங்க இருக்கும் இந்த புது வெர்ஷனுக்கு ஏன் இவ்வளவு எதிர்பார்ப்பு இருக்கிறது? முழு பீச்சர்கள் மற்றும் விலை விவரங்கள் எப்படி?

ஐக்யூ இசட்9 டர்போ லாங் பேட்டரி லைப் வெர்ஷனில் பேட்டரி, கலர் மற்றும் ஜிபிஎஸ் பீச்சர்கள் அப்கிரேட் செய்யப்பட்டு இருக்கிறது. ஆகவே, 6000mAh பேட்டரியானது, இப்போது 6400mAh கேபாசிட்டியில் கிடைக்க இருக்கிறது. அதேபோல பிளாக், ஒயிட் மட்டுமல்லாமல், ஃபிளைங் ப்ளூ (Flying Blue) கலரில் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது.

ஜன.3 குறிச்சாச்சு.. பட்ஜெட்ல iQOO லாங்-பேட்டரி வெர்ஷன்.. எந்த மாடல்?

கனெக்டிவிட்டியில் டூயல் ஃபிரிகொன்சி ஜிபிஎஸ் (Dual Frequency GPS) அப்கிரேட் செய்யப்பட்டுள்ளது. இந்த பீச்சர்களை தவிர மற்ற பீச்சர்கள் முந்தைய வெர்ஷனில் கிடைத்ததை போல இருக்கப் போகிறது. இல்லையென்றால், வரும் நாட்களில் அப்டேட் செய்யப்பட வாய்ப்புள்ளது. ஆகவே, முந்தைய வெர்ஷனில் கிடைத்த பீச்சர்களை தெரிந்து கொள்வோம்.

ஐக்யூ இசட்9 டர்போ அம்சங்கள் (iQOO Z9 Turbo Specifications): இந்த ஐக்யூவில் கேமிங் பிரியர்களுக்கான பட்டையை கிளப்பும் அவுட்புட் கொடுக்கும் 4என்எம் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 3 எஸ்ஓசி (4nm Octa Core Snapdragon 8s Gen 3 SoC) சிப்செட் பேக் செய்யப்பட்டுள்ளது. அதேபோல அட்ரினோ 735 ஜிபியு (Adreno 735 GPU) கிராபிக்ஸ் யூனிட் கிடைக்கிறது.

இந்த சிப்செட் பர்ஃபாமென்ஸ் மட்டுமல்லாமல், 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.78 இன்ச் (2800 × 1260 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. பிளாட் டிஸ்பிளே டிசைனில் 1.5K ரெசொலூஷன் கொடுக்கிறது. மேலும், 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 480Hz டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது. இதுபோக 3840Hz PWD டிம்மிங் ஃபிரிகொன்சி வருகிறது.

கேமிங் பிரியர்களுடன் ஓடிடி பிரியர்களுக்கும் பிரீமியம் அவுட்புட் கொடுக்க எச்டிஆர்10பிளஸ் (HDR10+) மற்றும் டால்பி விஷன் (Dolby Vision) சப்போர்ட் கிடைக்கிறது. ஆகவே, டிஸ்பிளே மற்றும் சிப்செட் பர்ஃபாமென்ஸ் பட்ஜெட்டுக்கு ஏற்ப பக்காவாகவே இருக்கும். பேட்டரி பீச்சர்கள் பற்றி சொல்ல வேண்டியதில்லை, 6000mAh கேபாசிட்டி கிடைத்தது.

ஆனால், இப்போது வர இருக்கும் ஐக்யூ இசட்9 டர்போ லாங் பேட்டரி லைப் வெர்ஷனில் 6400mAh பேட்டரி வருகிறது. ஃபாஸ்ட் சார்ஜிங் 80W இருக்கிறது. புது வெர்ஷனில் அப்கிரேட் செய்யப்பட வாய்ப்புள்ளது. அதேபோல, ஏற்கனவே இருக்கும் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) ஆனது ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) ஆக அப்கிரேட் செய்யப்படலாம்.

இருப்பினும், அதே ஓர்ஜின் ஓஎஸ் 4 (Origin OS 4) யுஐ கிடைக்கும். இந்த லாங் பேட்டரி லைப் வெர்ஷனில் டூயல் ரியர் கேமரா வருவது உறுதியாகிவிட்டது. டிசைனிலும் எந்தவித மாற்றம் இல்லை. ஆகவே, அதே 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா கிடைப்பது உறுதியாகும். சோனி சென்சாரும், ஓஐஎஸ் சப்போர்ட் கிடைக்கும்.

16 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்க இருக்கிறது. மேலும், டூயல் ஃபிரிகொன்சி ஜிபிஎஸ் கனெக்டிவிட்டியுடன் 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA), டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE) மற்றும் வை-பை 6 (Wi-Fi 6) வர இருக்கிறது. முந்தைய வெர்ஷனின் விலை ரூ.25000 பட்ஜெட்டில் இருக்கிறது. ஆகவே, இந்த போன் ரூ.30000 பட்ஜெட்டுக்குள் வெளியாக வாய்ப்புள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
iQOO Z9 Turbo With 6400mAh Battery Sale From January 3 in China Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X