மிரட்டிவிட்டாப்ல.. ரூ.22,320 போதும்.. 6400mAh பேட்டரி.. SONY கேமரா.. 12GB ரேம்.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
எப்போ வரும், எப்போ வரும்னு ஐக்யூ பிரியர்களை மரண வெயிட்டிங் மோடில் போட்டுவைத்த ஐக்யூ இசட்9 டர்போ லாங் பேட்டரி லைப் எடிஷன் ( iQOO Z9 Turbo Long Battery Life Edition) பட்ஜெட்டில் வெளியாகி இருக்கிறது. 6400mAh பேட்டரி மட்டுமல்லாமல், 80W ஃபாஸ்ட் சார்ஜிங், 1.5K ரெசொலூஷன் கொண்ட அமோலெட் டிஸ்பிளே, சோனி எல்ஒய்டி சென்சார் 50 மெயின் கேமரா, சாம்சங் சென்சார் கொண்ட செல்பீ கேமரா போன்ற பிரீமியம் பீச்சர்களை பேக் செய்துள்ளது.
இந்த ஐக்யூ மாடலானது, ஐக்யூ இசட்9 டர்போ போனில் அப்கிரேட் வெர்ஷனாகும். வெறும் ரூ.22,320 பட்ஜெட்டில் 12 ஜிபி ரேம் வேரியண்ட்டில் இருந்து கிடைக்கிறது. சீன மார்கெட்டில் விற்பனைக்கு வந்திருக்கும், இந்த போனுக்கு இந்திய மார்கெட்டிலும் எதிர்பார்ப்பு இருக்கிறது. ஆகவே, அடுத்த சில வாரங்களில் இங்கு எதிர்பார்க்கலாம். இப்போது முழு பீச்சர்களை பார்ப்போம்.

ஐக்யூ இசட்9 டர்போ லாங் பேட்டரி லைப் எடிஷன் அம்சங்கள் (iQOO Z9 Turbo Long Battery Life Edition Specifications): இந்த ஐக்யூவில் 6400mAh பேட்டரி மற்றும் 80W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. ஆகவே, கேமிங் பிரியர்களுக்கு பக்கா பேக்கப் கொடுக்கும் மாடலாக இது இருக்கிறது. இவ்வளவு பெரிய பேட்டரி இருந்தும், 7.98 மிமீ தடிமனில் அல்ட்ரா ஸ்லிம் பாடியை கொடுத்து இருக்கிறது.
பர்ஃபாமென்ஸ் முந்தைய மாடலை போலவே இருக்கிறது. ஆகவே, அட்ரினோ 735 ஜிபியு (Adreno 735 GPU) கிராபிக்ஸ் கார்டுடன் ஆக்டா கோர் 4என்எம் ஸ்னாப்டிராகன் 8எஸ் 3 (Octa Core 4nm Snapdragon 8s Gen 3) சிப்செட் கிடைக்கிறது. இருப்பினும், யுஐ (UI) அப்கிரேட் செய்யப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மற்றும் ஓர்ஜின் ஓஎஸ்5 (Origin OS 5) கிடைக்கிறது.
டிஸ்பிளேவில் எந்தவித குறையும் இல்லை என்றே சொல்லலாம். 6.78 இன்ச் (2800 × 1260 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 1.5K ரெசொலூஷன், 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 4500 பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. மேலும், 480Hz டச் சாம்பிளிங் ரேட், 3840Hz டிம்மிங் ஃபிரிகொன்சி மற்றும் டால்பி விஷன் (Dolby Vision) கிடைக்கிறது.
இதுபோக எச்டிஆர்10பிளஸ் (HDR10+) மற்றும் டிசி டிம்மிங் இருக்கிறது. இப்போது, கேமரா பீச்சர்களுக்கு வருவோம். வழக்கமான டூயல் ரியர் செட்டப்பில் 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கிடைக்கிறது. சோனி எல்ஒய்டி 600 (Sony LYT 600) கேமரா சென்சார் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் வீடியோ சப்போர்ட் கிடைக்கிறது.
சாம்சங் சென்சாருடன் 16 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. மேலும், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), டைப்-சி ஆடியே (Type-C Audio) மற்றும் IP64 டஸ்ட்/ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. இந்த ஐக்யூ இசட்9 டர்போ லாங் பேட்டரி லைப் எடிஷன் 4 வேரியண்ட்களில் கிடைக்கிறது. 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.22,320 ஆக இருக்கிறது.
16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.24,670ஆகவும், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.25,845ஆகவும் இருக்கிறது. 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட ஹை-எண்ட் வேரியண்ட்டின் விலை ரூ.28,200ஆக இருக்கிறது. சீனாவில் விற்பனை தொடங்கிவிட்டது. இந்தியாவில் விரைவில் எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








