தலைவன் வேற ரகம்.. பட்ஜெட்ல OLED டிஸ்பிளே.. 6000mAh பேட்டரி.. 16GB ரேம்.. 80W சார்ஜிங்.. எந்த மாடல்?
சோனி கேமரா, டைமன்சிட்டி 7200 சிப்செட், 5000mAh பேட்டரி போன்ற பீச்சர்களுடன் விற்பனைக்கு வந்து மிகப்பெரும் வரவேற்பு பெற்ற ஐக்யூ இசட்9 போனை தொடர்ந்து, அதைவிட கூடுதல் பீச்சர்களுடன் ஐக்யூ இசட்9 டர்போ (iQOO Z9 Turbo) போன் வெளியாக இருக்கிறது.
இந்த டர்போ வேரியண்ட்டின் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங், ரேம் பீச்சர்கள் மார்கெட்டில் கசிந்து மிரளவிட்டுள்ளது. இருப்பினும், பட்டஜெட்டில் விற்பனைக்கு வர இருப்பதால், எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது. இந்த மாதம் வெளியாகும் என்று மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முதலில் கசிந்த பீச்சர்களை பார்ப்போம்.

ஐக்யூ இசட்9 டர்போ அம்சங்கள் (iQOO Z9 Turbo Specifications): இந்த ஐக்யூவில் 6.78 இன்ச் ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு 2டி பிளாட் டிஸ்பிளே (2D Flat Display) மாடலாகும். இந்த டிஸ்பிளேவில் 1.5K ரெசொலூஷன், 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி வருகிறது.
ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கொண்ட ஓர்ஜின்ஓஎஸ் 4 (OriginOS 4) வருகிறது. இசட்9 மாடலில் ஆக்டா கோர் டைமன்சிட்டி 7200 எஸ்ஓசி கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த டர்போ மாடலில் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 3 (Octa Core Snapdragon 8s Gen 3) சிப்செட் வருகிறது. 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்டிருக்கிறது.
அதேபோல 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட ஹை-எண்ட் வேரியண்ட் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த ரேம் சிஸ்டம் போலவே பேட்டரி சிஸ்டமும் பிரீமியமாக இருக்கிறது. 80W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 6000mAh பேட்டரி வருகிறது. ஆகவே, பக்கா பேக்கப், ஃபாஸ்ட் பவர் பிக்கப் மிரளவிடும்படி இருக்கும்.
இந்த டர்போ போனில் 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) வருகிறது. முந்தைய மாடலை போலவே மெயின் கேமாவில் சோனி சென்சார் வர வாய்ப்புள்ளது. அதேபோல அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமராவில் மேக்ரோ அல்லது டெப்த் சப்போர்ட் கொடுக்கப்பட வாய்ப்புள்ளது.
16 எம்பி செல்பீ கேமரா வருகிறது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (In-display Fingerprint Scanner) வருகிறது. பிளாஸ்டிக் பிரேம் (Plastic Frame) உடன் வெளியாகிறது. இதுவொரு 5ஜி மாடலாகும். ஆகவே, 5ஜி என்எஸ்ஏ, டூயல் 4ஜி வோஎல்டிஇ கனெக்டிவிட்டி கொடுக்கப்பட வாய்ப்புள்ளது.
முதலில் சீனாவில் வெளியாக இருக்கிறது. அதன்பின், இந்தியா உள்பட மற்ற நாடுகளில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த போனின் விலை பட்ஜெட்டில் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஏனென்றால், ஐக்யூ இசட்9 5ஜி போனின் 128 ஜிபி மெமரி வேரியண்ட் ரூ.17,999 பட்ஜெட்டில் இருந்தது.
அதேபோல 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட ஹை-எண்ட் வேரியண்ட்டும் ரூ.21,999 பட்ஜெட்டிலேயே விற்பனைக்கு வந்தது. ஆகவே, இந்த போன் ரூ.25,000 பட்ஜெட்டுக்குள் இருக்கும். இந்த பட்ஜெட்டில் ஓஎல்இடி டிஸ்பிளே, 6000mAh பேட்டரி, 12 ஜிபி மெமரி வருவதால், நல்ல வரவேற்பு பெற வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications








