மிரளவிட்டாப்ல.. ரூ.27,370 பட்ஜெட்ல SONY கேமரா.. 6400mAh பேட்டரி.. 12GB ரேம்.. 80W சார்ஜிங்.. எந்த மாடல்?
கேமிங் மற்றும் கேமரா பிரியர்களை தட்டித்தூக்கும்படி ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் மற்றும் சோனி எல்ஒய்டி சென்சார் கொண்ட கேமரா சிஸ்டம், இம்மார்டலிஸ் கிராபிக்ஸ் கார்டு, 80W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 6400mAh பேட்டரி போன்ற பீச்சர்களுடன் ஐக்யூ இசட்9 டர்போ பிளஸ் (iQOO Z9 Turbo Plus) போன் வெளியாகி இருக்கிறது. 1.5K ரெசொலூஷன் அமோலெட் டிஸ்பிளே, 12 ஜிபி ரேம் போன்ற மற்ற பீச்சர்களும் பிரீமியமாக இருக்கின்றன. இந்த டர்போ மாடலின் முழு பீச்சர்கள் இதோ.
ஐக்யூ இசட்9 டர்போ பிளஸ் அம்சங்கள் (iQOO Z9 Turbo Plus Specifications): இந்த ஐக்யூ போனில் 1.5K ரெசொலூஷன் கொண்ட 6.78 இன்ச் (2800 × 1260 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 480Hz டச் சாம்பிளிங் ரேட் வருகிறது. மேலும், 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 3840Hz PWM டிம்மிங் பேக் செய்யப்பட்டுள்ளது.

இதுபோக டிசி டிம்மிங் (DC Dimming), எச்டிஆர்10பிளஸ் (HDR10+) மற்றும் டால்பி விஷன் (Dolby Vision) சப்போர்ட் வருகிறது. ஆகவே, வீடியோ மற்றும் கேமிங் அவுட்புட் அல்ட்ரா பிரீமியமாக எதிர்பார்க்கலாம். ஓர்ஜின் ஓஎஸ் 4 (Origin OS 4) மற்றும் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) வருகிறது. இம்மார்டலிஸ் ஜி720 ஜிபியு (Immortalis-G720 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.
கேமிங் பர்ஃபாமென்ஸ் கொண்ட ஆக்டா கோர் டைமன்சிட்டி 9300பிளஸ் 4என்எம் எஸ்ஓசி (Octa Core Dimensity 9300+ 4nm SoC) சிப்செட் பேக் செய்யப்பட்டுள்ளது. இந்த ஐக்யூ டர்போ மாடலில் 4 வேரியண்ட்கள் விற்பனைக்கு வருகின்றன. 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் ஆர்டருக்கு கிடைக்கின்றன.
அதேபோல 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி + 512 ஜிபி மெமரி கொண்ட ஹை-எண்ட் மாடல்களும் ஆர்டருக்கு கிடைக்கின்றன. ஆகவே, ரேம் மற்றும் சிப்செட் கேமிங் பிரியர்களுக்கு ஏற்ப லாக்-ப்ரீ அவுட்புட் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை. இதுபோக கேமரா பீச்சர்களிலும் இந்த ஐக்யூ இசட்9 டர்போ பிளஸ் போன் அதிரடி காட்டி இருக்கிறது.

மிட்-ரேஞ்ச் போன்களில் அதிகம் கொடுக்கப்படும் சோனி எல்ஒய்டி 600 (Sony LYT-600) சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா வருகிறது. கேலக்ஸிகோர் ஜிசி08ஏ3 (GlaxyCore GC08A3) சென்சாருடன் 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா வருகிறது. இந்த டூயல் கேமராவில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் வருகிறது.
இந்த ஐக்யூ இசட்9 டர்போ பிளஸ் போனில் 16 எம்பி செல்பீ கேமரா வருகிறது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) மட்டுமல்லாமல், இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) பேக் செய்யப்பட்டுள்ளது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் டைப்-சி ஆடியோ (Type-C Audio) போர்ட் வருகிறது. 7.98 எம்எம் தடிமன் மட்டுமே வருகிறது.
இந்த அல்ட்ரா ஸ்லிம் பாடியிலும் 6400mAh பேட்டரி சிஸ்டம் பேக் செய்யப்பட்டுள்ளது. 80W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்டிருக்கிறது. எடையை பார்க்கையில் 196 கிராம் வருகிறது. IP65 டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் வருகிறது. மூன் ஷேடோ டைட்டானியம் (Moon Shadow Titanium), ஸ்டார்லைட் ஒயிட் (Starlight White), மிட்நைட் பிளாக் (Midnight Black) கலர்கள் உள்ளது.
12 ஜிபி + 256 ஜிபி மாடலின் விலை ரூ.27,370ஆகவும், 12 ஜிபி + 512 ஜிபி மாடலின் விலை ரூ.30,940ஆகவும், 16 ஜிபி + 256 ஜிபி மாடலின் விலை ரூ.29,750ஆகவும் இருக்கிறது. மேலும், 16 ஜிபி + 512 ஜிபி மாடலின் விலை ரூ.34,510ஆகவும் இருக்கிறது. இப்போது சீனாவில் வெளியாகி விற்பனை தொடங்கி இருக்கிறது. இந்தியாவில் விரைவில் வெளியாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications