Home
Mobile

அமேசான் அதிரும்.. ரூ,9,498 பட்ஜெட்ல சோனி கேமரா.. 5000mAh பேட்டரி.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?

அமேசான் (amazon) தளத்தில் ஐக்யூ இசட்9 லைட் 5ஜி (QOO Z9 Lite 5G) ஸ்மார்ட்போன் ஆனது தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக 50எம்பி சோனி கேமரா, டைமன்சிட்டி சிப்செட், 5000mAh பேட்டரி உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்தது. இப்போது ஐக்யூ இசட்9 லைட் 5ஜி போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.

அமேசான் தளத்தில் ஐக்யூ இசட்9 லைட் 5ஜி (iQOO Z9 Lite 5G) போனுக்கு 28 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.10,498 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த போனை ரூ.9,498 விலையில் வாங்கிட முடியும்.

அமேசான் அதிரும்.. ரூ,9,498 பட்ஜெட்ல சோனி கேமரா.. எந்த மாடல்?

ஐக்யூ இசட்9 லைட் 5ஜி அம்சங்கள் ( iQOO Z9 Lite 5G specifications): 6.56-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி (HD+ LCD) டிஸ்பிளே உடன் ஐக்யூ இசட்9 லைட் 5ஜிவெளிவந்தது. மேலும் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 840 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இதன் டிஸ்பிளே.

50எம்பி சோனி ஏஐ கேமரா + 2எம்பி பொக்கே கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது இந்த ஐக்யூ இசட்9 லைட் 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இதில் உள்ளன.

ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான ஃபன்டச் ஓஎஸ் 14 மூலம் ஐக்யூ இசட்9 லைட் 5ஜி போன் இயங்குகிறது. ஆனால் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். பின்பு IP64 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant)உடன் இந்த
அசத்தலான ஸ்மார்ட்போன் வெளிவந்தது.

குறிப்பாக 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்டுள்ளது இந்த ஐக்யூ இசட்9 லைட் 5ஜி மாடல். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது. பின்பு சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (side-mounted fingerprint sensor) ஆதரவும் இந்த போனில் உள்ளது.

மீடியாடெக் டைமன்சிட்டி 6300 5ஜி (MediaTek Dimensity 6300 5G) சிப்செட் வசதியை அடிப்படையாக கொண்டு இந்த ஐக்யூ இசட்9 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்தது. பின்பு கிராபிக்ஸ்காக மாலி-ஜி57 ஜிபியு ஆதரவும் இந்த போனில் உள்ளது. எனவே கேமிங் பயனர்கள் இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம்.

5000mAh பேட்டரியை கொண்டுள்ளது ஐக்யூ இசட்9 லைட் 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 15W சார்ஜிங் வசதியும் உள்ளது. பின்பு 3.5மிமீ ஹெட்ஃபோன் ஜாக், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த ஐக்யூ இசட்9 லைட் 5ஜி போன் வெளிவந்தது. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் கம்மி விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
iQOO Z9 Lite 5G with 4GB RAM price slashed on amazon: check new price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X