Home
Mobile

தர லோக்கலுக்கு இறங்கியது ஐக்யூ.. 50MP கேமரா.. 5000mAh பேட்டரி.. மலிவு விலையில் வரும் புது 5ஜி போன்..

ஐக்யூ நிறுவனம் தனது புதிய ஐக்யூ இசட்9 லைட் 5ஜி (QOO Z9 Lite 5G) ஸ்மார்ட்போனின் இந்திய அறிமுகம் தேதியை வெளியிட்டுள்ளது. குறிப்பாக இந்த போன் டூயல் ரியர் கேமரா, மீடியாடெக் டைமன்சிட்டி சிப்செட், ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி மற்றும் பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்தியாவுக்கு வரும் இந்த போன். இப்போது ஐக்யூ இசட்9 லைட் 5ஜி ஸ்மார்ட்போனின் தேதி மற்றும் அம்சங்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஐக்யூ இசட்9 லைட் 5ஜி அம்சங்கள் ( iQOO Z9 Lite 5G specifications): 6.56-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி (HD+ LCD) டிஸ்பிளே உடன் ஐக்யூ இசட்9 லைட் 5ஜி அறிமுகம் செய்யப்படும். மேலும் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 900 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இதன் டிஸ்பிளே. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.

தர லோக்கலுக்கு இறங்கியது ஐக்யூ.. மலிவு விலையில் வரும் புது 5ஜி போன்..

சக்திவாய்ந்த மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட் (MediaTek Dimensity 6300 SoC) வசதியுடன் இந்த புதியஐக்யூ இசட்9 லைட் 5ஜி போன் வெளிவரும். அதேபோல் இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேபோல் ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு ஐக்யூ இசட்9 லைட் 5ஜி போன் அறிமுகம் செய்யப்படும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் ஐக்யூ இசட்9 லைட் 5ஜி போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

தர லோக்கலுக்கு இறங்கியது ஐக்யூ.. மலிவு விலையில் வரும் புது 5ஜி போன்..

OIS ஆதரவு கொண்ட 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஐக்யூ இசட்9 லைட் 5ஜி போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.

செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா உடன் இந்த போன் அறிமுகமாகும். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இதில் உள்ளன. குறிப்பாக இந்த ஐக்யூ இசட்9 லைட் 5ஜி ஸ்மார்ட்போனில் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner) உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தர லோக்கலுக்கு இறங்கியது ஐக்யூ.. மலிவு விலையில் வரும் புது 5ஜி போன்..

இந்த ஐக்யூ இசட்9 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் 5000எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது. எனவே இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 15 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் (15W fast charging) வசதியும் உள்ளது. எனவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும். அதேபோல் 5ஜி, ஜிபிஎஸ், வைஃபை, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.

எப்போது அறிமுகம்? வரும் ஜூலை 15-ம் தேதி ஐக்யூ இசட்9 லைட் 5ஜி போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. குறிப்பாக இந்த புதிய ஸ்மார்ட்போன் ரூ.10,000-க்குள் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்தியச் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த புதிய போன்.

More from GizBot

Best Mobiles in India

English summary
iQOO Z9 Lite 5G will be launched in India on July 15: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X