Home
Mobile

போட்டி போட்டு வாங்குவாங்களே! ரூ.9999-க்கு இப்படி ஒரு 5G Phone-ஆ! 12GB ரேம், 50MP Sony AI கேமரா, IP64 ரேட்டிங்!

2024 ஜூலை மாதத்தை.. புதிய 5ஜி போன்களின் அறிமுகத்திற்கான குத்தகை விட்டது போல இருக்கிறது. இம்மாத்தில்.. சிஎம்எப் போன் 1 (CMF Phone 1), ரெட்மி 13 5ஜி (Redmi 13 5G), மோட்டோ ஜி85 5ஜி (Moto G85 5G), லாவா பிளேஸ் எக்ஸ் 5ஜி (Lava Blaze X 5G) போன்ற பட்ஜெட்-விலை 5ஜி போன்கள் இந்தியாவில் அறிமுகமாகி உள்ள நிலையில்.. ஐக்யூ நிறுவனமும் தனது புதிய 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. அது என்ன மாடல்? என்ன விலை? என்னென்ன அம்சங்கள்? எப்போது விற்பனை? இதோ விவரங்கள்:

என்ன மாடல்? ஐக்யூ நிறுவனம் ஐக்யூ இஸட்9 லைட் 5ஜி (iQOO Z9 Lite 5G) என்கிற புதிய ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. முன்னதாக வெளியான ஐக்யூ இஸட்9எக்ஸ் (iQOO Z9x) மாடலுக்கு கீழே அமரும் இந்த ஸ்மார்ட்போன் , விவோ டி3 5ஜி லைட் (Vivo T3 Lite 5G) ஸ்மார்ட்போனின் ரீபிராண்டட் வெர்ஷனாக தெரிகிறது, ஏனெனில் இது அதே அம்சங்கள் மற்றும் மற்றும் விலை நிர்ணயத்தை பகிர்ந்து கொள்கிறது.

போட்டி போட்டு வாங்குவாங்களே.. ரூ.9999-க்கு இப்படி ஒரு 5G Phone-ஆ!

என்ன விலை? இந்தியாவில், ஐக்யூ இஸட்9 லைட் 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.10,499 க்கும், மறுகையில் உள்ள 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.11,499 க்கும் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

அறிமுக சலுகைகளை பொறுத்தவரை ஐசிஐசிஐ (ICICI) மற்றும் எச்டிஎப்சி (HDFC) கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மற்றும் இஎம்ஐ பரிவர்த்தனைகளுக்கு ரூ.500 உடனடி தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மேற்கண்ட 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் விலைகளை முறையே ரூ.9,999 மற்றும் ரூ.10,999 ஆக குறைக்க முடியும்.

எப்போது முதல் விற்பனை? ஐக்யூ இஸட்9 5ஜி ஸ்மார்ட்போனின் முதல் விற்பனை வருகிற ஜூலை 20 ஆம் தேதியன்று நடக்கும்படி திட்டமிடப்பட்டுள்ளது. இது ஆக்வா ப்ளோ (Aqua Flow) மற்றும் மோச்சா பிரவுன் (Mocha Brown) என்கிற 2 கலர்களில்,பிரபல இ-காமர்ஸ் வலைத்தளமான அமேசான் இந்தியா மற்றும் ஐக்யூவின் ஆன்லைன் ஸ்டோர் வழியாக வாங்க கிடைக்கும். அதாவது இது அமேசான் பிரைம் டே விற்பனையின் முதல் நாளில் விற்பனைக்கு வரும்.

என்னென்ன அம்சங்கள்? டிஸ்பிளேவை பொறுத்தவரை, இது 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.56-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. ப்ராசஸரை பொறுத்தவரை, இது கிராபிக்ஸ்காக மாலி-ஜி57 ஜிபியு உடனான மீடியாடெக் டைமன்சிட்டி 6300 5ஜி சிப்செட் மூலம் இயங்குகிறது.

ரேம் மற்றும் ஸ்டோரேஜை பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போன் 6ஜிபி வரையிலான ரேம் உடன் வருகிறது. இருப்பினும் விர்ச்சுவல் ரேம் தொழில்நுட்பம் வழியாக கூடுதலாக 6ஜிபி பெற்று, ஸ்மார்ட்போனின் மொத்த ரேம்-ஐ 12ஜிபி ஆக அதிகரிக்க முடியும். இதேபோல மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 1டிபி வரை மெமரியை விரிவாக்க முடியும்.

கேமராக்களை பொறுத்தவரை, இதில் 50எம்பி சோனி ஏஐ கேமரா + 2எம்பி பொக்கே கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் உள்ளது. முன்பக்கத்தில் 8எம்பி செல்பீ கேமரா உள்ளது. சாஃப்ட்வேரை பொறுத்தவரை, இது ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான ஃபன்டச் ஓஎஸ் 14 உடன் அனுப்பப்படுகிறது. இது 2 வருட ஆண்ட்ராய்டு அப்டேட்களையும், 3 வருட செக்யூரிட்டி அப்டேட்களையும் பெறும்.

பேட்டரியை பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போன் 15W சார்ஜிங் ஆதரவு கொண்ட 5,000mAh பேட்டரியை கொண்டுள்ளது. கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை, இதில் நீர் மற்றும் தூசி எதிர்ப்பிற்கான ஐபி64 ரேட்டிங், 3.5மிமீ ஹெட்ஃபோன் ஜாக் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர் பிரிண்ட் சென்சார் ஆகியவைகள் உள்ளன.

More from GizBot

Best Mobiles in India

English summary
iQOO Z9 Lite 5G Launched in India at Offer Price Rs 9999 First Sale on July 20
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X