Home
Mobile

மிரளுது மார்கெட்.. பட்ஜெட்ல OIS கேமரா.. SONY சென்சார்.. AMOLED டிஸ்பிளே.. எந்த போன்?

ஐக்யூ நியோ 9 ப்ரோ போனின் கடைசி நாள் ப்ரீ-புக்கிங் பட்டையை கிளப்பி கொண்டிருக்கும் நேரத்தில், ஐக்யூ நிறுவனமானது, சோனி சென்சார் கேமரா, டைமன்சிட்டி 7200 சிப்செட் கொண்ட ஐக்யூ இசட்9 5ஜி (iQOO Z9 5G) போனின் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஐக்யூ இசட்9 5ஜி அம்சங்கள் (iQOO Z9 5G Specifications): இந்த ஐக்யூ மாடலில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.64 இன்ச் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. 1.5K ரெசொலூஷன் வருகிறது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (In-display Fingerprint Scanner) வருகிறது.

பட்ஜெட்ல OIS கேமரா.. SONY சென்சார்.. AMOLED டிஸ்பிளே.. எந்த போன்?

இந்த போனில் டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) வருகிறது. 64 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா வருகிறது. இந்த மெயின் கேமராவில் சோனி ஐஎம்எக்ஸ்882 (Sony IMX882) சென்சார் வருகிறது. அதோடு ஓஐஎஸ் (OIS) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14) வருகிறது. 8 ஜிபி ரேம் வருகிறது. ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7200 எஸ்ஓசி (Octa Core MediaTek Dimensity 7200 SoC) சிப்செட் கொண்டிருக்கிறது. 44W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. 7.83 மிமீ தடிமன் கொண்டிருக்கிறது.

இந்த அம்சங்கள் மட்டுமே மார்கெட் வட்டாரங்களில் கசிந்துள்ளன. இதில் சோனி ஐஎம்எக்ஸ்882 சென்சார் கேமரா, ஓஐஎஸ் டெக்னாலஜி, ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7200 எஸ்ஓசி சிப்செட் மற்றும் கிரீன் (Green) கலர் டிசைன் ஆகியவற்றை ஐக்யூ இந்தியா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது.

பட்ஜெட்ல OIS கேமரா.. SONY சென்சார்.. AMOLED டிஸ்பிளே.. எந்த போன்?

அதுமட்டுமல்லாமல், இந்த ஐக்யூ இசட்9 5ஜி போன் விரைவில் வெளியாகும் என்றும் குறிப்பிட்டுள்ளது. இந்த போனின் விலை ரூ.25,000 பட்ஜெட்டுக்குள் இருக்கும் என்று மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த போனானது, அடுத்த சில வாரங்களில் வெளியாக வாய்ப்புள்ளது. ஏனென்றால், ஐக்யூ நியோ 9 ப்ரோ வரும் பிப்ரவரி 22ஆம் தேதி வெளியாகிறது.

ஆகவே, இந்த போனின் வெளியீடு மற்றும் விற்பனைக்கு பிறகு ஐக்யூ இசட்9 5ஜி போனின் அறிமுகம் இருக்கும். ஐக்யூ நியோ 9 ப்ரோ (iQOO Neo 9 Pro) போனுக்கான ப்ரீ-புக்கிங் இன்றோடு முடிவடைகிறது. இதனால், ஐக்யூ பிரியர்கள் போட்டிப்போட்டு கொண்டு புக்கிங் செய்து வருகின்றனர்.

ஆகவே, இந்த போனின் முக்கிய அம்சங்கள் மற்றும் விலையை சுருக்கமாக இப்போது தெரிந்து கொள்வோம். இந்த ஐக்யூ போனில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் கொண்ட ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 எஸ்ஓசி (Snapdragon 8 Gen 2 SoC) சிப்செட் வருகிறது. அதோடு கேமிங் பிரியர்களுக்காக கியூ1 சிப் (Q1 Chip) வருகிறது.

பட்ஜெட்ல OIS கேமரா.. SONY சென்சார்.. AMOLED டிஸ்பிளே.. எந்த போன்?

ஆகவே, டூயல் சிப் கொண்ட போனாக ஐக்யூ நியோ 9 ப்ரோ மாடல் இருக்கிறது. அதேபோல 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட 6.78 இன்ச் டிஸ்பிளே வருகிறது. 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா கொண்ட டூயல் சிஸ்டம் கொண்டுள்ளது.

மெயின் கேமராவில் சோனி ஐஎம்எக்ஸ் 920 (Sony IMX 920) சென்சார் வருகிறது. 120W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5160mAh பேட்டரி வருகிறது. இந்த போனில் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட 2 மாடல் இருக்கிறது. அமேசானில் ப்ரீ-புக்கிங் நடக்கிறது.

Best Mobiles in India

English summary
iQOO Z9 5G With Sony Camera, Dimensity 7200 To Launch in India Soon Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X