Home
Mobile

மிரள விட்டாச்சு.. ரூ.20000 போதும்.. SONY கேமரா.. MTD 7200 சிப்செட்.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?

ஐக்யூ பிரியர்கள் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் பிரியர்களுமே நினைத்துகூட பார்க்காத பட்ஜெட்டில் சோனி சென்சார் கேமரா, டைமன்சிட்டி 7200 சிப்செட், அமோலெட் டிஸ்பிளே, 16 ஜிபி ரேம் போன்ற அம்சங்களுடன் ஐக்யூ இசட்9 5ஜி (iQOO Z9 5G) வெளியாக இருக்கிறது.

ஐக்யூ இசட்9 5ஜி அம்சங்கள் (iQOO Z9 5G Specifications): இந்த ஐக்யூ போனில் 6.67 இன்ச் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் (Refresh Rate) மற்றும் 300Hz டச் சாம்பிளிங் ரேட் (Touch Sampling Rate) வருகிறது. இதுவொரு ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) டிஸ்பிளே மாடலாகும்.

ரூ.20000 போதும்.. SONY கேமரா.. MTD 7200 சிப்செட்.. AMOLED டிஸ்பிளே!

1800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 1.5K ரெசொலூஷன் கொண்டிருக்கிறது. இந்த ஐக்யூ இசட்9 5ஜி போனில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14) மற்றும் ஃபன்டச் ஓஎஸ் 14 (Funtouch OS 14) வருகிறது. 8 ஜிபி ரேம் + 8 ஜிபி விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) சப்போர்ட் கொண்டிருக்கிறது.

ஆகவே, 16 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட 2 மாடல்கள் விற்பனைக்கு வர இருக்கிறது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வருகிறது. டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) கொண்டுள்ளது.

சோனி ஐஎம்எக்ஸ்882 (Sony IMX882) சென்சார் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா வருகிறது. அதோடு 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா (Ultra Wide Camera) வருகிறது. ஓஐஎஸ் (OIS) டெக்னாலஜி சப்போர்ட் கொண்டிருக்கிறது. அதேபோல 16 எம்பி செல்பீ கேமரா கொண்டிருக்கிறது.

ரூ.20000 போதும்.. SONY கேமரா.. MTD 7200 சிப்செட்.. AMOLED டிஸ்பிளே!

இந்த ஐக்யூ இசட்9 5ஜி போனில் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7200 எஸ்ஓசி (Octa Core MediaTek Dimensity 7200 SoC) சிப்செட் வருகிறது. 44W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் (Fast Charging Support) கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. யுஎஸ்பி டைப்-சி (USB Type-C) சார்ஜிங் சப்போர்ட் உள்ளது.

இந்த பேட்டரியோடு 7.83 மிமீ தடிமன் வருகிறது. ஆகவே, ஸ்லிம் டிசைனில் (Slim Design) எதிர்பார்க்கலாம். இதுவொரு 5ஜி மாடலாக வெளியாகிறது. ஆகவே, 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA) மற்றும் டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE) கனெக்டிவிட்டி சப்போர்ட் கொண்டிருக்கிறது.

இந்த ஐக்யூ இசட்9 5ஜி போனானது, பிரஷ்டு கிரீன் (Brushed Green) மற்றும் கிராபெனின் ப்ளூ (Graphene Blue) ஆகிய 2 கலர்களில் விற்பனைக்கு வர இருக்கிறது. அமேசான் (Amazon) மற்றும் ஐக்யூ இந்தியா (iQOO India) ஆகிய தளங்களில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. வரும் மார்ச் 12ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

இந்த போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட மாடலின் விலை ரூ.20,000 பட்ஜெட்டுக்குள் இருக்கும் என்று மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆகவே, இந்த செக்மெண்ட்டில் சோனி ஐஎம்எக்ஸ்882 சென்சார், டைமன்சிட்டி 7200 கொண்ட முதல் மாடலாக இந்த போன் இருக்க வாய்ப்புள்ளது.

மேற்கூறிய அம்சங்களில் கேமரா, சிப்செட் மற்றும் கலர் ஆகிய விவரங்களை மட்டுமே ஐக்யூ இந்தியா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்திருக்கிறது. மற்ற அம்சங்கள் மார்கெட்டில் கசிந்தவை மட்டுமே. இருப்பினும், அந்த அம்சங்களே அடுத்தடுத்த அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோன்ற மொபைல் செய்திகளுக்கு எங்களை பின்தொடருங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
iQOO Z9 5G With Dimensity 7200, Sony Camera Launch on March 12 Sale From Amazon Specification Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X