கொஞ்சம் பொறுங்க.. சோனி கேமரா.. 44W சார்ஜிங்.. மார்ச்.12-ல் இந்தியாவுக்கு வரும் ஐக்யூ 5ஜி போன்.. எந்த மாடல்?
ஐக்யூ நிறுவனம் தனது ஐக்யூ இசட்9 5ஜி ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது. டூயல் ரியர் கேமரா, அமோலெட் டிஸ்பிளே மற்றும் தனித்துவமான வடிவமைப்பு உடன் இந்த ஐக்யூ இசட்9 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் இப்போது இந்த போனின் அறிமுக தேதி மற்றும் அம்சங்களைப் பார்ப்போம்.
ஐக்யூ இசட்9 5ஜி அம்சங்கள்(iQOO Z9 5G specifications): சக்திவாய்ந்த மீடியாடெக் டைமன்சிட்டி 7200 சிப்செட் (MediaTek Dimensity 7200 SoC) வசதியுடன் ஐக்யூ இசட்9 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த போனில் கேமிங் மற்றும் வீடியோஎடிட்டிங் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும். சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால் டைமன்சிட்டி 7200 சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.

6.64 இன்ச் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வசதியுடன் இந்த ஐக்யூ இசட்9 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும். பின்பு இதன் டிஸ்பிளே 1.5K ரெசல்யூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1000 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.
50 எம்பி சோனி ஐஎம்எக்ஸ்882 (Sony IMX882) மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ஐக்யூ இசட்9 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா உடன் ஐக்யூ இசட்9 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஐக்யூ நிறுவனம்.
8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் ஐக்யூ இசட்9 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.
6000எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் ஐக்யூ இசட்9 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 44 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. குறிப்பாக இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும்.

5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு கனெக்விட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த போன் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14) மூலம் இயங்கும்.
எப்போது அறிமுகம்? வரும் மார்ச் 12-ம் தேதி இந்தியாவில் ஐக்யூ இசட்9 5ஜி அறிமுகம் செய்யப்படும். பின்பு இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.20,000-க்கு கீழ் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications