Home
Mobile

மிரண்டு போவீங்க.. 6000mAh பேட்டரி.. 12ஜிபி ரேம்.. 50எம்பி கேமரா.. பட்ஜெட் விலை.. எந்த மாடல்?

ஐக்யூ நிறுவனம் தனது ஐக்யூ இசட் 8 எக்ஸ் (iQOO Z8x) போனை நாளை (ஆகஸ்ட் 31) அறிமுகம் செய்ய உள்ளது. இந்த போன முதலில் சீனாவில் அறிமுகம் செய்யப்படுகிறது. சில வாரங்களுக்குப் பின்பு இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளிலும் இந்த புதிய ஐக்யூ இசட் 8 எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும்.

இந்நிலையில் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பு ஐக்யூ இசட் 8 எக்ஸ் போனின் சிப்செட், கேமரா, பேட்டரி உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் ஆன்லைனில் வெளியாகி உள்ளன. இப்போது இந்த புதிய ஐக்யூ போனின் விலை மற்றும் என்னென்ன சிறப்பு அம்சங்கள் இதில் இருக்கிறது என்பதைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

6000mAh பேட்டரி.. 50எம்பி கேமரா.. பட்ஜெட் விலை.. எந்த மாடல்?

ஐக்யூ இசட் 8 எக்ஸ் அம்சங்கள்: குவால்காம் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 (Qualcomm Snapdragon 6 Gen 1) சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது இந்த ஐக்யூ இசட் 8 எக்ஸ் போன். மேலும் இந்த போனில் அட்ரினோ ஜிபியு ஆதரவும் உள்ளது. எனவே ஐக்யூ இசட் 8 எக்ஸ் ஸ்மார்ட்போன் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தைக் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகும்.

12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவுடன் ஐக்யூ இசட் 8 எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.

50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது அசத்தலானஐக்யூ இசட் 8 எக்ஸ் ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டு வெளிவரும் இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

அதேபோல் எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களைக் கொண்டு இந்த போன் அறிமுகமாகும். குறிப்பாக யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio) மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களை (Stereo speakers) கொண்டுள்ளது. . எனவே இந்த ஸ்மார்ட்போன் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

44 வாட்ஸ் ஃபாஸ்ட் பிளாஷ் சார்ஜிங் வசதி கொண்ட 6000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது இந்த ஐக்யூ இசட் 8 எக்ஸ் ஸ்மார்ட்போன். எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். அதேபோல் இந்த போனை சில நிமிடங்களில் முழு சார்ஜ் செய்துவிட முடியும். மேலும் பாஸ்ட் சார்ஜிங் வசதிக்குத் தகுந்தபடி சிறந்த பாதுகாப்பு வசதியும் இந்த போனில் உள்ளது.

6000mAh பேட்டரி.. 50எம்பி கேமரா.. பட்ஜெட் விலை.. எந்த மாடல்?

ஐக்யூ இசட் 8 எக்ஸ் ஸ்மார்ட்போன் ஆனது 6.64-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்சிடி (Full HD+ LCD) டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. மேலும் 2388×1080 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate), எச்டிஆர் 10 பிளஸ் (HDR10+) ஆதரவு, 1000 நிட்ஸ் ப்ரைட்னஸ் உள்ளிட்ட பல்வேறு டிஸ்பிளே அம்சங்களுடன் இந்த புதிய ஐக்யூ போன் அறிமுகமாகும்.

இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் (In-display fingerprint sensor) வசதி இந்த ஐக்யூ இசட் 8 ஸ்மார்ட்போனில் உள்ளது. மேலும் 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 6 802.11 ஏஎக்ஸ், புளூடூத் 5.3, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் கொண்டுள்ளது ஐக்யூ இசட் 8 எக்ஸ் போன். ரூ.20,000-க்குள் இந்த ஐக்யூ இசட் 8 எக்ஸ் போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
iQOO Z8x smartphone will be launched tomorrow: Chipset, camera, battery details revealed : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X