பரபரப்பு பட்ஜெட்.. ரூ.20,000 போதும்.. 120W சார்ஜிங்.. 12GB ரேம்.. 5000mAh பேட்டரி.. OIS கேமரா.. எந்த மாடல்?
வெறும் ரூ.20,000 பட்ஜெட்டில் 12 ஜிபி ரேம், ஓஐஎஸ் (OIS) கேமரா, டைமன்சிட்டி 8200 சிப்செட், 120W ஃபாஸ்ட் சார்ஜிங், 5000mAh பேட்டரி போன்ற பிரீமியம் அம்சங்களுடன் ஐக்யூ இசட் 8 (iQOO Z8) போன் விற்பனைக்கு வரவிருக்கிறது. இதுகுறித்த விவரம் இதோ.
ஐக்யூ இசட் 8 அம்சங்கள் (iQOO Z8 Specifications): இந்த ஐக்யூ போன் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8200 எஸ்ஓசி (Octa Core Mediatek Dimensity 8200 SoC) சிப்செட் கொண்டுள்ளது.

அதோடு ஓர்ஜின்ஓஎஸ் 3.0 (OriginOS 3.0) மற்றும் மாலி - ஜி610 எம்சி6 ஜிபியு (Mali - G610 MC6 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. இந்த மாடலில் 6.64 இன்ச் (2388 x 1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ஐபிஎஸ் எல்சிடி (IPS LCD) டிஸ்பிளே கொண்டுள்ளது.
இதில் 360Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது. அதோடு எச்டிஆர்10 பிளஸ் (HDR10+) சப்போர்ட் கொண்டிருக்கிறது. இந்த ஐக்யூ போனில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி ஆகிய 3 வேரியண்ட்கள் உள்ளன.
இந்த போனில் டூயல் ரியர் கேமரா செட்டப் (Dual Rear Camera Setup) வருகிறது. ஆகவே, 64 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் சென்சார் கேமரா வருகிறது. அதோடு எல்இடி பிளாஷ் இடம் பெற்றுள்ளது. இதுவொரு ஓஐஎஸ் (OIS) கேமராவாகும்.
அதேபோல 16 எம்பி செல்பீ கேமரா வருகிறது. இந்த போனில் வியக்கும் அம்சமாக 120W ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) சப்போர்ட் கொண்ட 5,000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரியில் விசி லிக்விட் கூலிங் டெக்னாலஜி (VC Liquid Cooling Technology) பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஆகவே, கேமிங் பிரியர்கள் பேட்டரி ஹீட்டை உணராமல், விளையாடலாம். இந்த போனில் சைடு பேஸிங் பிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side Facing Fingerprint Scanner) மற்றும் இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) கொடுக்கப்பட்டுள்ளன. இந்த ஐக்யூ மாடலில் டூயல் ஸ்பீக்கர்கள் (Dual Speakers) வருகின்றன.
மேலும், ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3), வை-பை 6 (Wi-Fi 6), 3.5 மிமீ ஆடியோ ஜாக் (3.5mm Audio Jack), என்ஃஎப்சி (NFC) மற்றும் ஜிபிஎஸ் (GPS) போன்ற கனெக்டிவிட்டி அம்சங்கள் இருக்கின்றன. இந்த ஐக்யூ இசட் 8 போன் போர்ஸ்லைன் வைட் (Porcelain White), பிளாக் (Black) மற்றும் ப்ளூ (Blue) ஆகிய மூன்று கலர்களில் விற்பனைக்கு வருகிறது.
செப்டம்பர் 7ஆம் தேதி முதல் சீனாவில் விற்பனைக்கு வந்து மிகப்பெரும் வரவேற்பை பெற்றுவருகிறது. இந்த போனின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ. 19,350ஆகவும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.20,490ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதே போல 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.24,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த போனின் விலையைவிட அம்சங்கள் பிரீமியமாக இருப்பதால், மற்ற நாடுகளில் இருக்கும் ஐக்யூ பிரியர்கள் அந்த போனின் அறிமுகத்துக்காக ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
இந்த சூழலில் அந்த போனின் குளோபல் வேரியண்ட் (Global Variant) கூகுள் பிளே கன்சோலில் (Google Play Console) இடம்பெற்றுள்ளது. இதனால், இந்தியா உள்பட மற்ற நாடுகளில் அடுத்த சில வாரங்களில் வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட் விலையில் 12 ஜிபி ரேம், 120W ஃபாஸ்ட் சார்ஜிங் போன் கிடைப்பதால், நல்ல வரவேற்பு பெற வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications