படம் காட்டும் பட்ஜெட்.. மாஸ் காட்டும் டிசைன்.. 12GB ரேம்.. 120W சார்ஜிங்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
பிரீமியம் லுக்கும் வேண்டும், பட்டையை கிளப்பும் அம்சங்களும் வேண்டும், ஆனால், பட்ஜெட் விலை போனாக இருக்க வேண்டும் என்று சொல்பவர்களுக்கு பெஸ்ட் சாய்ஸ் போனாக ஐக்யூ (iQoo) நிறுவனத்தின் ஐக்யூ இசட் 8 (iQoo Z8) போன் வெளியாக இருக்கிறது. இதுகுறித்த விவரம் இதோ.
இந்தியாவில் பட்ஜெட் விலையில் நல்ல நல்ல அம்சங்கள் கொண்ட போன்களை வெளியிடுவதில் ஐக்யூ நிறுவனமும் தனி இடம்பிடித்து விட்டது. இந்த நிறுவனத்தின் இசட் சீரிஸ் போன்கள் பட்ஜெட் மற்றும் மிட்-ரேஞ்ச் விலையில் வெளியாக இருக்கின்றன. இவற்றில் ஐக்யூ இசட் 7 (iQOO Z7), ஐக்யூ இசட் 8 (iQOO Z8), ஐக்யூ இசட் 8 எக்ஸ் (iQOO Z8x) ஆகிய மூன்று போன்களும் டிசைனுக்காவே மிகப்பெரும் எதிர்பார்ப்பை கிளப்பிவிட்டுள்ளன.

இதில் பட்ஜெட் விலையில் வெளியாகும் போனாக, ஐக்யூ இசட் 8 மாடல் இருக்கிறது. இந்த போனின் அம்சங்கள் பல முறை கசிந்து, ஸ்மார்ட்போன் பிரியர்களை மூக்கில் விரல் வைக்க செய்துள்ளது. இப்போது, இந்த போனின் பேட்டரி மற்றும் ஃபாஸ்ட் சார்ஜ் அம்சங்களை ஐக்யூ நிறுவனமே உறுதி செய்துள்ளது.
இந்த போனில் 120W அல்ட்ரா ஃபாஸ்ட் ஃப்ளாஷ் சார்ஜிங் சப்போர்ட் வருகிறது. வெறும் 10 நிமிடங்களில் 100 சதவீம் சார்ஜ் செய்துகொள்ள முடியும். மொத்தமாக 1,460 முறை லைப் டைம் சார்ஜிங் சைக்கிள் வருகிறது. இந்த போனின் முழு அம்சங்கள், விலை, அறிமுக தேதி உள்ளிட்ட விவரங்களை இப்போது தெரிந்துகொள்வோம்.
ஐக்யூ இசட் 8 அம்சங்கள் (iQoo Z8 Specifications): இந்த ஐக்யூ மாடல் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8200 எஸ்ஓசி (Octa Core Mediatek Dimensity 8200 SoC) சிப்செட் கொண்டுள்ளது. அதோடு ஓர்ஜின்ஓஎஸ் 3.0 (OriginOS 3.0) மற்றும் மாலி - ஜி610 எம்சி6 ஜிபியு (Mali - G610 MC6 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த போனின் டிஸ்பிளேவை பொறுத்தவரையில், 6.64 இன்ச் (2388 x 1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டி பிளஸ் (FHD+) எல்சிடி (LCD) ஸ்கிரீன் வருகிறது. இதில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் எச்டிஆர்10 பிளஸ் (HDR10+)சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஐக்யூ போன் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி ஆகிய 2 வேரியண்ட்களில் விற்பனைக்கு வரவிருக்கிறது. இந்த போனில் டூயல் ரியர் கேமரா சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, 64 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா வருகிறது. இதுவொரு ஓஐஎஸ்(OIS) கேமராவாகும். அதேபோல 16 எம்பி செல்பீ கேமரா வருகிறது.
இந்த போனில் பெரிதும் பேசப்படும் அம்சமாக 120W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5,000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், சைடு பேஸிங் பிங்கர்பிரிண்ட் சென்சார் (Side Facing Fingerprint சென்சார்), டூயல் ஸ்பீக்கர்கள் (Dual Speakers), 3.5 மிமீ ஆடியோ ஜாக் (3.5mm Audio Jack), விசி லிக்விட் கூலிங் டெக்னாலஜி (VC Liquid Cooling Technology) போன்ற அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
அதுமட்டுமல்லாமல் ப்ளூடூத் 5.3, என்ஃஎப்சி, வை-பை 6 கனெக்டிவிட்டி அம்சங்கள் வருகின்றன. இந்த ஐக்யூ இசட் 8 மாடல் ப்ளூ (Blue) மற்றும் வைட் (White) ஆகிய இரண்டு கலர்களில் விற்பனைக்கு வருகிறது. வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி சீனாவில் அறிமுகம் செய்யப்படயிருக்கிறது. அடுத்த சில வாரங்களில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும். இந்த போனின் பட்ஜெட்டை பொறுத்தவரையில், ரூ.18,000 அல்லது ரூ.20,000 பட்ஜெட்டில் வெளியாக அதிக வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications








