Home
Mobile

தெறிக்க விடும் விலை.. 12GB ரேம்.. 64MP கேமரா.. 120W சார்ஜிங்.. 6,000mAh பேட்டரி.. எந்த மாடல்?

பட்ஜெட் விலையில் 12ஜிபி ரேம், 64எம்பி கேமரா போன்ற பட்டையை கிளப்பும் அம்சங்களுடன் ஐக்யூ நிறுவனத்தின் ஐக்யூ இசட் 8 (iQoo Z8) மற்றும் ஐக்யூ இசட் 8 எக்ஸ் (iQoo Z8X) ஆகிய 2 புதிய போன்கள் வெளியாக இருக்கின்றன.

ஐக்யூ இசட் 8 அம்சங்கள் (iQoo Z8 Specifications): இந்த புதிய ஐக்யூ மாடல் 6.64 இன்ச் (2388 x 1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டி பிளஸ் (FHD+) எல்சிடி (LCD) டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது.

12GB ரேம்.. 64MP கேமரா.. 120W சார்ஜிங்.. 6000mAh பேட்டரி.. எந்த மாடல்?

ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) மற்றும் ஓர்ஜின்ஓஎஸ் 3.0 (OriginOS 3.0) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8200 எஸ்ஓசி (Octa Core Mediatek Dimensity 8200 SoC) சிப்செட் கொண்டுள்ளது. அதோடு மாலி - ஜி610 எம்சி6 ஜிபியு (Mali - G610 MC6 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.

இந்த ஐக்யூ போன் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்டிருக்கிறது. இந்த போனில் டூயல் ரியர் கேமரா செட்டப் வருகிறது. அந்த வகையில், 64 எம்பி மெயின் கேமரா (OIS) + 2 எம்பி டெப்த் கேமரா வருகிறது. 16 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.

120W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட 5,000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், சைடு பேஸிங் பிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side Facing Fingerprint Scanner), 3.5 மிமீ ஆடியோ ஜாக் (3.5mm Audio Jack), டூயல் ஸ்பீக்கர்கள் (Dual Speakers), விசி லிக்விட் கூலிங் (VC Liquid Cooling) டெக்னாலஜி போன்ற அம்சங்கள் வருகின்றன.

அதோடு எக்ஸ்-ஆக்சிஸ் மோட்டார் (X-Axis Motor), , என்ஃஎப்சி (NFC), வை-பை 6 (Wi-Fi 6) மற்றும் ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3) சப்போர்ட் இருக்கிறது. இந்த போன் பிளாக் (Black), ப்ளூ (Blue) மற்றும் கிரீன் (Green) ஆகிய மூன்று ஷேட் (Shade) கலர்களில் விற்பனைக்கு வருகிறது.

ஐக்யூ இசட் 8 எக்ஸ் அம்சங்கள் (iQoo Z8X Specifications): இந்த போனும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.64 இன்ச் (2388 x 1080 பிக்சல்கள்) டிஸ்பிளே கொண்டுள்ளது. இது ஒரு ஃபுல்எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளேவாகும். இந்த மாடலில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் மற்றும் ஓர்ஜின்ஓஎஸ் 3.0 கொண்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 (Qualcomm Snapdragon 6 Gen 1) சிப்செட் கொண்டுள்ளது.

இதிலும் மாலி - ஜி610 எம்சி6 ஜிபியு கிராபிக்ஸ் கார்டு வருகிறது. இந்த போன் 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா என்னும் டூயல் ரியர் செட்டப் கொண்டுள்ளது. 8 எம்பி செல்பீ கேமரா வருகிறது. இந்த மாடலில் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொடுக்கப்பட்டுள்ளது.

44W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 6,000mAh பேட்டரி வருகிறது. மற்ற அம்சங்களும் ஐக்யூ இசட் 8 மாடலில் கொடுக்கப்பட்டதை போலவே இருக்கின்றன. இந்த போனும் ப்ளூ, பிளாக் மற்றும் யெல்லோவ் ஆகிய கலர்களில் விற்பனைக்கு வருகிறது. இந்த 2 மாடல்களும் செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யப்படுகின்றன.

முதலில் சீனாவில் விற்பனைக்கு வருகின்றன. அதன்பின்பு மற்ற நாடுகளில் விற்பனைக்கு வரும். இந்த போன்களின் விலையை பொறுத்தவரையில் ரூ.20,000 பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்பட வாய்ப்புள்ளது. பட்ஜெட் விலையில் பக்காவான பர்பாமென்ஸ் கொண்ட போன் வாங்கவேண்டுமென்றால், இந்த மாடல் நல்ல தேர்வாக இருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
iQoo Z8 With 12GB RAM, Dimensity 8200, 64MP Camera Specifications Leaked Expected Price Launch Date
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X