Home
Mobile

மிரளுது பட்ஜெட்.. ரூ.20,000 போதும்.. 120W சார்ஜிங்.. 12GB ரேம்.. 64MP கேமரா.. 5000mAh பேட்டரி.. எந்த போன்?

வெறும் ரூ.20,000 பட்ஜெட்டில் 12 ஜிபி ரேம், 64 எம்பி ஓஐஎஸ் கேமரா, 120W அல்ட்ரா ஃபாஸ்ட் சார்ஜிங், 5000mAh பேட்டரி, ஃபுல்எச்டிபிளஸ் டிஸ்பிளே போன்ற பிரீமியம் அம்சங்கள் உடன் ஐக்யூ இசட் 8 (iQoo Z8) போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஐக்யூ இசட் 8 அம்சங்கள் (iQoo Z8 Specifications): இந்த ஐக்யூ மாடலில் 6.64 இன்ச் (2388 x 1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) எல்சிடி (LCD) டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 360Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் எச்டிஆர்10 பிளஸ் (HDR10+) சப்போர்ட் வருகிறது.

ரூ.20,000 போதும்.. 12GB ரேம்.. 5000mAh பேட்டரி.. எந்த போன்?

இந்த மாடல் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) மற்றும் ஓர்ஜின்ஓஎஸ் 3.0 (OriginOS 3.0) கொண்டுள்ளது. ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8200 எஸ்ஓசி (Octa Core Mediatek Dimensity 8200 SoC) சிப்செட் மற்றும் மாலி - ஜி610 எம்சி6 ஜிபியு (Mali - G610 MC6 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.

இந்த ஐக்யூ போன் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி ஆகிய 2 மாடல்களில் விற்பனைக்கு வருகிறது. இந்த போனில் டூயல் ரியர் கேமரா செட்டப் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், 64 எம்பி (OIS) மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா வருகிறது.

16 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போனில் 120W அல்ட்ரா- ஃபாஸ்ட் பிளாஷ் சார்ஜிங் (Ultra Fast Flash Charging) சப்போர்ட் கொண்ட 5,000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு விசி லிக்விட் கூலிங் டெக்னாலஜி (VC Liquid Cooling Technology) வருகிறது.

மேலும், சைடு பேஸிங் பிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side Facing Fingerprint Scanner), இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor), டூயல் ஸ்பீக்கர்கள் (Dual Speakers) வருகின்றன. அதோடு 3.5 மிமீ ஆடியோ ஜாக் (3.5mm Audio Jack), ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3), என்ஃஎப்சி (NFC), வை-பை 6 (Wi-Fi 6) மற்றும் ஜிபிஎஸ் (GPS) போன்ற கனெக்டிவிட்டி அம்சங்கள் வருகின்றன.

இந்த ஐக்யூ இசட் 8 மாடல் பிளாக் (Black), ப்ளூ (Blue) மற்றும் வைட் (White) ஆகிய மூன்று கலர்களில் விற்பனைக்கு வருகிறது. நேற்று (ஆகஸ்ட் 31) சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் 7 ஆம் தேதி விற்பனைக்கு வருகிறது.

அதே வாரத்தில் மற்ற நாடுகளில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. ஆகவே, இந்த மாதத்தில் ஐக்யூ இசட் 8 போன் இந்தியாவில் வெளியாக வாய்ப்புள்ளது. இந்த போனின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ. 19,350ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.20,490ஆகவும், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.24,000ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரூ.20,000 பட்ஜெட்டில் 12 ஜிபி ரேம், 5000mAh பேட்டரி போன் கிடைப்பதால், விற்பனையில் நல்ல வரவேற்பு பெற அதிக வாய்ப்புள்ளது.

இந்த போனோடு ஐக்யூ இசட் 8 எக்ஸ் (iQOO Z8x) போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 50 எம்பி கேமரா, 6000mAh பேட்டரி, ஃபுல்எச்டிபிளஸ் டிஸ்பிளே மற்றும் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட மாடலின் விலை ரூ.16,155ஆக நிர்ணம் செய்யப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
iQOO Z8 With 12GB RAM, Dimensity 8200, 6000mAh Battery Sale From September 7 Specifications, Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X