Home
Mobile

கம்மி விலையில் புதிய 5ஜி போனை அறிமுகம் செய்தது iQOO: என்னென்ன அம்சங்கள்?

ஐக்யூ நிறுவனம் புதிய iQOO Z7i ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் தனித்துவமான அம்சங்களுடன் கம்மி விலையில் வெளிவந்துள்ளது. மேலும் இந்த புதிய போன் விரைவில் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

என்னென்ன அம்சங்கள்?

முதலில் இப்போது iQOO Z7i ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம். அதாவது iQOO Z7i ஸ்மார்ட்போன் ஆனது 6.51-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது. பின்பு 1600 x 720 பிக்சல்ஸ், 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த போன் வெளிவந்துள்ளது.

கம்மி விலையில் புதிய 5ஜி போனை அறிமுகம் செய்தது iQOO.!

குறிப்பாக iQOO Z7i ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் மீடியாடெக்Dimensity 6020 7என்எம் பிராசஸர் வசதி உள்ளது. எனவே இந்த பிராசஸர் சிறந்த செயல்திறன் வழங்கும். கேமிங் பயனர்கள் இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம். பின்பு OriginOS சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் இந்த புதிய போன் வெளிவந்துள்ளது.

4ஜிபி/6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டு இந்த iQOO Z7i ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது.

கம்மி விலையில் புதிய 5ஜி போனை அறிமுகம் செய்தது iQOO.!

புதிய iQOO Z7i ஸ்மார்ட்போன் 13எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா வசதியைக் கொண்டுள்ளது. பின்பு எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களைக் கொண்டுள்ள இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். அதேபோல் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த புதிய போன்.

இந்த iQOO Z7i ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது. எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் 15 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி,கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.1, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த புதிய iQOO Z7i ஸ்மார்ட்போன். மேலும் இந்த போனின் எடை 186 கிராம் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த போன் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளது.

கம்மி விலையில் புதிய 5ஜி போனை அறிமுகம் செய்தது iQOO.!

என்ன விலை?

அதாவது புதிய iQOO Z7i ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை 949 yuan (இந்திய மதிப்பில் ரூ.11,310) ஆக உள்ளது. மேலும் இந்த போன் கருப்பு மற்றும் நீல நிறத்தில் வெளிவந்துள்ளது. விரைவில் இந்த போன் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் இந்த போனுக்கு அதிக வரவேற்பு கிடைக்கும்.அதேபோல் இந்நிறுவனம் விரைவில் பல அசத்தலான 5ஜி போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
iQOO Z7i with 5000mAh Battery Launched in India : Price, Specifications : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X