பொளக்குது விற்பனை.. ரூ.19000 பட்ஜெட்ல 64MP கேமரா.. 66W சார்ஜிங்.. 3D டிஸ்பிளே.. 4600mAh பேட்டரி.. எந்த மாடல்?
3டி கர்வ்ட் டிஸ்பிளே மாடலை அடிமட்ட விலைக்கு வாங்குவதற்காக நம்ப முடியாத தள்ளுபடிக்கு காத்திருக்கும் கஸ்டமர்களுக்கு அமேசான் விற்பனையில் (Amazon Sale) பட்டாசான நேரம் வந்துவிட்டது. 3டி கர்வ்ட் டிஸ்பிளே மட்டுமல்லாமல், 7.36 எம்எம் அல்ட்ரா ஸ்லிம் பாடியில் பிரீமியம் லுக் கொடுக்கும் இந்த ஐக்யூ இசட்7 ப்ரோ (iQOO Z7 Pro) போனானது, ரூ.4,250 விலை குறைப்பில் கிடைக்கிறது. இந்த ஐக்யூ இசட்7 ப்ரோ போனின் பீச்சர்கள், அறிமுக விலை மற்றும் டிஸ்கவுண்ட் விலை குறித்த முழு விவரங்களையும் இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ஐக்யூ இசட்7 ப்ரோ அம்சங்கள் (iQOO Z7 Pro Specifications): இந்த ஐக்யூவில் ஃபன்டச்ஓஎஸ் 13 (FuntouchOS 13) பேஸ்டு ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) கொண்ட மீடியாடெக் டைமன்சிட்டி 7200 5ஜி (MediaTek Dimensity 7200 5G) சிப்செட் கிடைக்கிறது. இந்த சிப்செட் மிட்-பிரீமியம் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும். இதற்கு ஏற்ப 8 ஜிபி விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) கிடைக்கிறது.

ஆகவே, 16 ஜிபி ரேம் (8ஜிபி + 8ஜிபி) + 128 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் (8ஜிபி + 8ஜிபி) + 256 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்டகள் மார்கெட்டில் கிடைக்கின்றன. இந்த ஐக்யூ இசட்7 ப்ரோ போனின் டிஸ்பிளேவில் பிரீமியம் லுக் எதிர்பார்க்கலாம். ஏனென்றால், 7.36 மிமீ தடிமன் மட்டுமே கொண்டு பக்கா ஹேண்டி மற்றும் லைட் வெயிட் பீல் கொடுக்கிறது.
டிஸ்பிளே புரொடெக்சன் மட்டும் கிடையாது. இருப்பினும், 6.78 இன்ச் (2400 × 1080 பிக்சல்கள்) 3டி கர்வ்ட் டிஸ்பிளே (3D Curved Display) மற்றும் ஃபுல்எச்டிபிளஸ் (FHD) ரெசொலூஷன் பேக் செய்துள்ளது.
ஓடிடி மற்றும் கேமிங் பிரியர்களுக்கான பிரீமியம் வீடியோ அவுட்புட் கொடுக்க எச்டிஆர்10பிளஸ் (HDR10+) மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் பேக் செய்யப்பட்டுள்ளது.
மேலும், 1300 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 300Hz டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது. ஸ்லிம் பாடி இருப்பதால், 175 கிராம் எடை மட்டுமே கொண்டுள்ளது. இந்த எடைக்கு ஏற்ப 4600mAh பேட்டரி மட்டுமே கிடைக்கிறது. இருப்பினும், இந்த பேட்டரிக்கு 66W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. ஆகவே, சில நிமிடங்கள் 50 சதவீத சார்ஜிங் செய்து கொள்ள முடியும்.
64 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி பொக்கெ கேமரா + நைட் போட்டோகிராபிக்காக ஆரா லைட் (Aura Light) கிடைக்கிறது. இந்த 64 எம்பி கேமராவில் சாம்சங் ஜிடபுள்யூ3 (Samsung GW3) சென்சார் கிடைக்கிறது. 16 எம்பி செல்பீ ஷூட்டரை பார்க்க முடிகிறது. மேட் மற்றும் ப்ளூ ஆகிய கலர்களில் இந்த ஐக்யூ இசட்7 ப்ரோ போனை ஆர்டர் செய்து கொள்ளலாம்.
ஐக்யூ இசட்7 ப்ரோ அமேசான் (iQOO Z7 Pro Amazon): 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலானது, அறிமுகமான போது ரூ.23,999 பட்ஜெட்டில் விற்பனைக்கு வந்தது. ஆனால், இப்போது அமேசான் விற்பனையில் ரூ.20,999 பட்ஜெட்டில் கிடைக்கிறது. இந்த விலையிலும் எச்டிஎப்சி கிரெடிட் கார்டு பயன்படுத்தினால், ரூ.1,250 மதிப்பில் உடனடி டிஸ்கவுண்ட் பெற்று கொள்ளலாம்.
ஆகவே, ரூ.19,749 விலையில் இந்த ஐக்யூ இசட்7 ப்ரோ போனை ஆர்டர் செய்து கொள்ள முடியும். இது ரூ.4,250 விலை குறைப்பில் கிடைப்பதாகும். அதுவே யெஸ் பேங்க் கிரெடிட் கார்டு பயன்படுத்தி ஈஎம்ஐ மூலம் ஆர்டர் செய்தால், ரூ.1000 டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. இந்த டிஸ்கவுண்ட் விலை போக ரூ.19,000 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் சலுகையும் இந்த போனுக்கு கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








