பொளந்து கட்டுது விற்பனை.. வெறும் ரூ.18,990 போதும்.. 3D டிஸ்பிளே.. 66W சார்ஜிங்.. 4600mAh பேட்டரி.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் ஐக்யூ இசட்7 ப்ரோ (iQOO Z7 Pro) ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி கிடைக்கிறது. அல்ட்ரா ஸ்லிம் டிசைனில் 3டி கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே, 64 எம்பி கேமரா, 66W ஃபாஸ்ட் சார்ஜிங் பீச்சர்களை கொடுக்கிறது. இந்த ஐக்யூ இசட்7 ப்ரோ ஸ்மார்ட்போனின் முழு பீச்சர்கள், விலை மற்றும் தள்ளுபடி விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.23,999ஆக இருக்கிறது. ஆனால், பிளிப்கார்ட் தளத்தில் ரூ.19,990 பட்ஜெட்டில் கிடைக்கிறது. இந்த விலை நேரடி விலை குறைப்பு சலுகையாகும். ஆகவே, இதற்கு பேங்க் கார்டுகள் தேவையில்லை. இதுபோக குறிப்பிட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.1,000 உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.

ஆகவே, ரூ.18,990 பஜெட்டில் ஆர்டர் செய்து கொள்ளலாம். ஒரு லிமிடெட் பீரியட் ஆஃபராகும். எப்போது வேண்டுமானாலும் விலை மாறலாம். இந்த மாடலுக்கு அதிக வரவேற்பு இருப்பதால், கிடைக்கும்போதே வாங்கிக் கொள்ளலாம். ப்ளூ லாகூன் (Blue Lagoon) மற்றும் கிராஃபைட் மேட் (Graphite Matte) ஆகிய கலர்களில் இந்த ஐக்யூ இசட்7 ப்ரோ ஆர்டர் செய்ய கிடைக்கிறது.
ஐக்யூ இசட்7 ப்ரோ அம்சங்கள் (iQOO Z7 Pro Specifications): இந்த ஐக்யூ ஸ்மார்ட்போனில் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7200 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7200 4nm) சிப்செட் மற்றும் அந்த சிப்செட்டுக்கு ஏற்ப மாலி ஜி610 ஜிபியு (Mali G610 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. இது கொஞ்சம் பழைய மாடலாக இருப்பதால் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) மட்டுமே இதில் கிடைக்கிறது.
இதே போல ஃபன்டச்ஓஎஸ் 13 (FuntouchOS 13) பெற்றுக் கொள்ளலாம். இந்த சிப்செட் பட்ஜெட்டுக்கு ஏற்ப பக்கா பர்ஃபாமன்ஸ் கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஒட்டுமொத்த 3டி கர்வ்ட் டிஸ்பிளே பிரியர்களையும் தட்டித் தூக்கும்படி பீச்சர்கள் கிடைக்கின்றன. 6.78 இன்ச் (2400 × 1080 பிக்சல்கள்) 3டி கர்வ்ட் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது.
இந்த டிஸ்பிளேவுக்கு ஃபுல்எச்டிபிளஸ் (FHD) ரெசொலூஷன், எச்டிஆர்10பிளஸ் (HDR10+) மற்றும் 1300 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. இதுபோக 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 300Hz டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது. இந்த ஐக்யூ இசட்7 ப்ரோ ஸ்மார்ட்போனில் டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) பேக் செய்யப்பட்டுள்ளது.
ஆகவே, 64 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி பொக்கெ கேமரா கிடைக்கிறது. இந்த மெயின் கேமராவுக்கு சாம்சங் ஜிடபுள்யூ3 (Samsung GW3) சென்சார் மட்டுமல்லாமல் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி (Optical Image Stabilization) டெக்னாலஜி சப்போர்ட்டும் கிடைக்கிறது. மேலும், நைட்போட்டோகிராபிக்காக ஆரா எல்இடி (Aura LED) கொடுக்கிறது.
இந்த ஐக்யூ இசட்7 ப்ரோ ஸ்மார்ட்போனில் 66W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 4600mAh பேட்டரி கிடைக்கிறது. பேட்டரி கேபாசிட்டி கம்மியாக இருப்பதால், வெறும் 175 கிராம் எடை மட்டுமே வருகிறது. அதேபோல 7.36 எம்எம் தடிமன் மட்டுமே வருவதால், அல்ட்ரா ஸ்லிம் லுக் கொடுக்கும். ஆகவே, இதற்கு ஏற்ப பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர்கள் மட்டுமே கிடைக்கிறது.
மேலும், இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), டைப்-சி ஆடியோ (Type-C Audio) கிடைக்கிறது. மெட்டாலிக் லுக்கில் மிடில் ஃபிரேம் கிடைக்கிறது. 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA), டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE), வை-பை 6 (Wi-Fi 6) மற்றும் ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3) போன்ற கனெக்டிவிட்டி பீச்சர்கள் கிடைக்கின்றன. ஜிபிஎஸ் (GPS) உள்ளது.


Click it and Unblock the Notifications








