Home
Mobile

ஃபயரு பட்ஜெட்.. ரூ.5,250 கட்.. வெறும் ரூ.21,650 போதும்.. 3D டிஸ்பிளே.. 16GB ரேம்.. 1TB மெமரி.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளமே அதிரும் விதமாக 16ஜிபி ரேம், 1டிபி மெமரி சப்போர்ட், 3டி டிஸ்பிளே, சாம்சங் கேமரா, 4600mAh பேட்டரி போன்ற பிரீமியம் அம்சங்களை கொண்ட ஐக்யூ இசட் ப்ரோ (iQOO Z7 Pro) போனுக்கு ரூ.5000க்கும் மேல் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்யூ இசட் ப்ரோ அம்சங்கள் (iQOO Z7 Pro Specifications): இந்த ஐக்யூ போனில் ஆண்ட்ராய்டு 13 (Android 13) ஓஎஸ் மற்றும் ஃபன்டச் ஓஎஸ் 13 (FunTouch OS 13) கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு மீடியாடெக் டைமன்சிட்டி 7200 எஸ்ஓசி 4என்எம் (MediaTek Dimensity 7200 SoC 4nm) சிப்செட் மற்றும் மாலி ஜி610 ஜிபியு (Mali G610 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது.

ரூ.5250 கட்.. ரூ.21,650 போதும்.. 16GB ரேம்.. 1TB மெமரி.. எந்த மாடல்?

இந்த ப்ரோ மாடலில் 6.78 இன்ச் (2400 × 1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் எச்டிஆர்10பிளஸ் (HDR10+) சப்போர்ட் உள்ளது. அதோடு 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1300 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 300Hz டச் சாம்பிளிங் ரேட் வருகிறது. இதுவொரு 3டி கர்வ்ட் (3D curved) டிஸ்பிளேவாகும்.

இந்த போனில் சாம்சங் ஜிடபுள்யூ3 (Samsung GW3) சென்சாருடன் கூடிய 64 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் சென்சார் கேமரா வருகிறது. அதோடு அரோ லைட் (Aura Light) இடம்பெற்றுள்ளது. அதேபோல 16 எம்பி செல்பீ கேமரா வருகிறது. இதுவொரு ஓஐஎஸ் (OIS) கேமராவாகும்.

இந்த போனில் IP54 தர டஸ்ட் மற்றும் பிளாஷ் ரெசிஸ்டன்ட் வருகிறது. சிங்கிள் பாட்டம் - போர்டெட் ஸ்பீக்கர்கள் (Single Bottom Ported Speakers) மற்றும் இன் - டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், 3.5 எம்எம் ஆடியோ ஜாக், ப்ளூடூத் 5.3 மற்றும் வை-பை 6 போன்ற கனெக்டிவிட்டி அம்சங்கள் வருகின்றன.

இந்த போனில் 66W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 4600mAh பேட்டரி வருகிறது. இந்த போன் ஸ்லிம் டிசைன் கொண்டிருப்பதால், 175 கிராம் எடை மட்டுமே இருக்கிறது. இந்த மாடலில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி ஆகிய 2 வேரியண்ட்கள் உள்ளன. அதோடு 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி (microSD) கார்டு சப்போர்ட் வருகிறது.

8 ஜிபி விர்ச்சுவல் ரேம் சப்போர்ட் உள்ளது. இந்த போனில் ப்ளூ லாகூன் (Blue Lagoon) மற்றும் கிராபைட் மேட் (Graphite Matte) ஆகிய 2 கலர்கள் கிடைக்கின்றன. இந்த போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.26,990ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.27,990ஆகவும் பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த விலையில் முழுதாக ரூ.5,250 உடனடி தள்ளுபடி இப்போது, வழங்கப்படுகிறது. இந்த தள்ளுபடியை ஐசிஐசிஐ வங்கியின் கிரெடிட் கார்டை பயன்படுத்தி பெற்றுக் கொள்ளலாம். ஆகவே, இந்த போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலை வெறும் ரூ.21,650க்கு வாங்கிக்கொள்ள முடியும். இவ்வளவு மலிவான விலையில், 3டி கர்வ்ட் டிஸ்பிளே, 16ஜிபி ரேம், 64 எம்பி சாம்சங் கேமரா போன் கிடைப்பதால், விற்பனையில் சக்கைப்போடு போட வாய்ப்புள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
iQoo Z7 Pro With 16GB RAM, Dimensity 7200 Sale With Discount On Flipkart Check Specifications, Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X