Home
Mobile

இந்திய மார்கெட்டே அதிரும் டிஸ்பிளே.. பளிங்கு போல 3டி கர்வ்ட் ஸ்கிரீன்.. 16GB ரேம்.. 1TB மெமரி.. எந்த மாடல்?

இந்திய ஸ்மார்ட்போன் மார்கெட்டே மூக்கில் விரல் வைக்கும்படியான விலையில் 3டி கர்வ்ட் டிஸ்பிளே, 12ஜிபி ரேம், 1 டிபி மெமரி சப்போர்ட், 66W ஃபாஸ்ட் சார்ஜிங், 4,600mAh பேட்டரி அம்சங்கள் மட்டுமல்லாமல், அல்ட்ரா ஸ்லிம் டிசைனில் ஐக்யூ இசட் ப்ரோ போன் வெளியாகிறது.

இந்த போன் எப்போது வெளியாகும்? என்ன விலையில் விற்பனைக்கு வரும்? முழு அம்சங்கள் எப்படி இருக்கும்? உள்ளிட்ட விவரங்கள் பின்வருமாறு. இந்த
ஐக்யூ இசட் ப்ரோ 5ஜி (iQOO Z7 Pro 5G) போனில் 6.78 இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு 3டி கர்வ்ட் சூப்பர் விஷன் (3D Curved Supervision) அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவாகும்.

பளிங்கு போல டிஸ்பிளே.. 16GB ரேம்.. 1TB மெமரி.. எந்த மாடல்?

இந்த டிஸ்பிளேவில் 360Hz டச் சாம்பிளிங் ரேட், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1300 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஐக்யூ போனில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) மற்றும் ஃபன்டச் ஓஎஸ் 13 (FunTouch OS 13) வருகிறது. அதோடு மீடியாடெக் டைமன்சிட்டி 7200 எஸ்ஓசி 4என்எம் (MediaTek Dimensity 7200 SoC 4nm) சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த சிப்செட் பர்ஃபாமென்ஸ், கேமிங் பிரியர்களை வியக்கவைக்கும்படி இருக்கும். அதுமட்டுமல்லாமல், மாலி ஜி610 ஜிபியு (Mali G610 GPU) கிராபிக்ஸ் கார்டு வருவதால், கேமிங் அனுபவம் அடுத்த தரத்தில் இருக்கும். இந்த ஐக்யூ இசட் ப்ரோ போனில் டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) வருகிறது.

அந்த வகையில், 64 எம்பி ஓஐஎஸ் (OIS) மெயின் கேமரா மற்றும் 2 எம்பி டேப்த் கேமரா சென்சார் (Depth Camera Sensor) வருகிறது. எச்டிஆர் சப்போட்டுடன் 16 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. 66W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 4,600mAh பேட்டரி வருகிறது. இந்த போன் வெறும் 7.36 மிமீ அகலம் மட்டுமே கொண்டிருப்பதால், மிகவும் ஸ்லிம் டிசைனில் பின்னியெடுக்கிறது.

இந்த ஐக்யூ இசட் போனில் 8 ஜிபி ரேம் + 8 விர்ச்சுவல் ரேம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, 16 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி ஆகிய 2 மாடல்கள் விற்பனைக்கு வருகின்றன. மேலும் 1 டிபி வரையில் மைக்ரோஎஸ்டி (microSD) கார்டு சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

பிரீமியம் போன்களில் கொடுக்கப்படும், IP54 தர டஸ்ட் மற்றும் பிளாஷ் ரெசிஸ்டன்ட் மற்றும் இன் - டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வருகிறது. இந்த போனில் சிங்கிள் பாட்டம் - போர்டெட் ஸ்பீக்கர்கள் (Single Bottom Ported Speakers) கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், 3.5மிமீ ஆடியோ ஜாக், ப்ளூடூத் 5.3, வை-பை 6, டைப் - சி சார்ஜிங் போர்ட் உள்ளிட்ட கனெக்டிவிட்டி அம்சங்களும் இருக்கின்றன.

இந்த ஐக்யூ இசட் போன் ஆகஸ்ட் 31ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது. அதன்பின்பு அமேசான் (Amazon) தளத்தில் விற்பனைக்கு வருகிறது. இந்த போன்
ப்ளூ லாகூன் (Blue Lagoon) மற்றும் கிராஃபைட் மேட் (Graphite Matte) ஆகிய 2 கலர்களில் விற்பனைக்கு வருகிறது. இவ்வளவு பிரீமியம் அம்சங்களை கொண்ட இந்த போனின் விலை ரூ.30,000 அல்லது ரூ.35,000 ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், ரூ. 25,000 பட்ஜெட்டில் வெளியாகும் என்று கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியாகி வந்தன. இருப்பினும், ஐக்யூ நிறுவனம் அதை உறுதி செய்யாமல் இருந்தது வந்தது. இந்த சூழலில், இன்று (ஆகஸ்ட் 28) ஐக்யூ நிறுவனமே, அதே விலையை உறுதி செய்து ஸ்மார்ட்போன் பிரியர்கள் மட்டுமல்லாமல், இந்திய மார்கெட்டையே மூக்கில் விரல்வைக்கும்படி செய்துள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
iQoo Z7 Pro With 12GB RAM, Dimensity 7200, 4600mAh Battery Price Revealed Check Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X