Home
Mobile

மிரண்டு போவீங்க.. பட்ஜெட் கம்மி.. ஆனால், 3D டிஸ்பிளே.. 12GB ரேம்.. 1TB மெமரி.. 64MP கேமரா.. எந்த மாடல்?

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 போனுக்கு நிகரான அம்சங்கள் மட்டுமல்லாமல், அந்த போனையே பின்னுக்கு தள்ளும்படி 3டி கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே கொண்ட போனாக ஐக்யூ (iQOO) நிறுவனத்தின் ஐக்யூ இசட் 7 ப்ரோ (iQOO Z7 Pro) போன் வெளியாகயிருக்கிறது.

அதுமட்டுமல்லால், 12 ஜிபி ரேம், மீடியாடெக் டைமன்சிட்டி 7200 சிப்செட், 66W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் மாலி ஜி610 ஜிபியு கிராபிக்ஸ் கார்டு போன்ற பிரீமியம் அம்சங்களையும் கொண்டிருக்கிறது. இப்போது, இந்த போனின் விலையே மார்கெட்டை வியக்க வைத்திருக்கிறது.

வெறும் ரூ. 25,000 பட்ஜெட்டில் இந்த ஐக்யூ இசட் 7 ப்ரோ போன் இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த விலை மிகப்பெரும் எதிர்பார்ப்பை கிளப்பி விட்டுள்ளது என்றே சொல்ல வேண்டும். இந்த போன் எப்போது வெளியாகும்? மற்ற அம்சங்கள் எப்படி? உள்ளிட்ட விவரங்கள் பின்வருமாறு.

3D டிஸ்பிளே.. 12GB ரேம்.. 1TB மெமரி.. 64MP கேமரா.. எந்த மாடல்?

ஐக்யூ இசட் ப்ரோ 5ஜி அம்சங்கள் (iQOO Z7 Pro 5G Specifications): இந்த ஐக்யூ போன் 6.78 இன்ச் ஃபுல்எச்டி பிளஸ் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது. அதோடு 360Hz டச் சாம்பிளிங் ரேட் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஐக்யூ போனில் ஆண்ட்ராய்டு 13 (Android 13) கொண்ட மீடியாடெக் டைமன்சிட்டி 7200 எஸ்ஓசி 4என்எம் (MediaTek Dimensity 7200 SoC 4nm) சிப்செட் வருகிறது. அதோடு மாலி ஜி610 ஜிபியு (Mali G610 GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் ஃபன்டச் ஓஎஸ் 13 (FunTouch OS 13) கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த போன் டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது. அந்த வகையில், 64 எம்பி மெயின் கேமரா மற்றும் 2 எம்பி டேப்த் கேமரா (Depth Camera) வருகிறது. 16 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போன் மிகவும் ஸ்லிம் டிசைனில் உருவாக்கப்பட்டுள்ளதால், 4,600mAh பேட்டரி மட்டுமே கொண்டுள்ளளது.

அதற்கு 66W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வருகிறது. இந்த ஐக்யூ போன் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி ஆகிய 2 மாடல்களில் வெளியாக இருக்கிறது. மேலும், 1 டிபி மைக்ரோஎஸ்டி (microSD) கார்டு சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த போனில் IP54 தர டஸ்ட் மற்றும் பிளாஷ் ரெசிஸ்டன்ட், சிங்கிள் பாட்டம் - போர்டெட் ஸ்பீக்கர்கள் (Single Bottom Ported Speakers), இன் - டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), 3.5 எம்எம் ஆடியோ ஜாக், ப்ளூடூத் 5.3 மற்றும் வை-பை 6 கனெக்டிவிட்டி, டைப் - சி சார்ஜிங் போர்ட் போன்ற அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த போன் 7.36 மிமீ தடிமன் மற்றும் கிளாஸ் பேக் பேனல் கொண்டுள்ளது. இந்த ஐக்யூ இசட் 7 ப்ரோ போன் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வெளியாகிறது. இதனிடையே அந்த போனின் விலை ரூ. 30,000 பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்படும் என்று தகவல்கள் கசிந்தன. ஆனால், இப்போது ஐக்யூ நிறுவனமே விலையை உறுதி செய்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

அதில், இந்த போன் ரூ. 25,000 பட்ஜெட்டில் வெளியாகும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. சொல்லப்போனால், ஒன்பிளஸ் நோர்ட் சிஇ3 போனின் பெரும்பாலான அம்சங்கள் மட்டுமல்லாமல், அதை விட பக்காவான கர்வ்ட் டிசைனையும் இந்த போன் கொண்டிருக்கிறது. ஆகவே, இந்த ஐக்யூ போன் மிகப்பெரும் வரவேற்பை பெறும் என்பதில் சந்தேகமில்லை.

More from GizBot

Best Mobiles in India

English summary
iQoo Z7 Pro With 12GB RAM, Dimensity 7200, 4600mAh Battery Launch on August 31 Specifications, Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X