பளிங்கு தோத்துரும்.. பெஸ்ட் வீடியோ பீல்.. 3D கர்வ்ட் டிஸ்பிளே.. 12GB ரேம்.. 1TB மெமரி.. எந்த மாடல்?
ஒட்டுமொத்த கர்வ்ட் டிசைன் போன்களையும் தூக்கிசாப்பிடும் விதமாக, 3டி கர்வ்ட் (3D Curved) அமோலெட் டிஸ்பிளே, 12ஜிபி ரேம், அல்ட்ரா ஸ்லிம் டிசைன் போன்ற பிரம்மிக்க வைக்கும் அம்சங்களுடன் ஐக்யூ இசட் 7 ப்ரோ (iQOO Z7 Pro) போன் வெளியாகயிருக்கிறது.
இந்திய மார்கெட்டில் கர்வ்ட் டிஸ்பிளே போன்களுக்கான வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏனென்றால், ஓடிடி (OTT), கேமிங் (Gaming) போன்றவற்றுக்கு ஸ்மார்ட்போன்களே பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால், ஸ்மார்ட்போன்களின் டிஸ்பிளே மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. சொல்லப்போனால், கர்வ்ட் டிஸ்பிளே போன்களுக்கும் மிகப்பெரிய மார்கெட் உருவாகிவிட்டது என்றே சொல்ல வேண்டும்.

ஆகவே, ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்கள், தங்களது போன்களில் கொடுக்கப்படும் கர்வ்ட் டிஸ்பிளேவில் புதுப்புது தொழில்நுட்பங்களை கொண்டு வரத் தொடங்கிவிட்டன. அந்த வரிசையில், ஐக்யூ நிறுவனம், "டிஸ்பிளே கிங்" என்று பெயரே வைக்கும் விதமாக, 3டி கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே கொண்ட ஐக்யூ இசட் 7 ப்ரோ போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
இந்த போனின் கேமரா, பேட்டரி, ரேம், சிப்செட் போன்ற மற்ற அம்சங்களும் மிகவும் பிரீமியமாக கொடுக்கப்பட்டுள்ளன. இந்த ஐக்யூ இசட் 7 ப்ரோ போன் எப்போது வெளியாகும்? முழு அம்சங்கள் எப்படி இருக்கிறது? இதன் விலை எப்படி இருக்கும்? உள்ளிட்ட விவரங்கள் பின்வருமாறு.
இந்த ஐக்யூ இசட் 7 ப்ரோ போனில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) கொண்ட மீடியாடெக் டைமன்சிட்டி 7200 எஸ்ஓசி (MediaTek Dimensity 7200 SoC) சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு ஃபன்டச் ஓஎஸ் 13 (FunTouch OS 13) வருகிறது. இந்த ஐக்யூ போன் டூயல் ரியர் கேமரா சிஸ்டம் கொண்டுள்ளது.
ஆகவே, 64 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டேப்த் கேமரா வருகிறது. 16 எம்பி செல்பீ கேமரா வருகிறது. இந்த ஐக்யூ இசட் 7 ப்ரோ போன் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி ஆகிய 2 வேரியண்ட்களுடன் வெளியாக இருக்கிறது.
அதோடு 1 டிபி வரை மைக்ரோஎஸ்டி (microSD) கார்டு சப்போர்ட் வருகிறது. இந்த போனின் ஸ்லிம் டிசைனுக்காக 4,600mAh பேட்டரி மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரிக்கு 66W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வருகிறது. இந்த ஐக்யூ இசட் 7 ப்ரோ போன் வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி இந்தியாவில் வெளியாகிறது.
இந்த போனின் விலை ரூ.30,000 பட்ஜெட்டில் நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த போனின் மற்ற அம்சங்கள், முன்னதாக வெளியான ஐக்யூ இசட் 7 5G (iQOO Z7 5G) மாடலின் அம்சங்களை கொண்டிருக்க வாய்ப்புள்ளது. இந்த ஐக்யூ இசட் 7 போன் மாலி - ஜி68 எம்சி4 ஜிபியு (Mali-G68 MC4 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது.
இதில் IP54 தர டஸ்ட் மற்றும் பிளாஷ் ரெசிஸ்டன்ட் வருகிறது. மேலும், இன் - டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), சிங்கிள் பாட்டம் - போர்டெட் ஸ்பீக்கர்கள் (Single Bottom Ported Speakers), 3.5 எம்எம் ஆடியோ ஜாக், ப்ளூடூத் 5.1 கனெக்டிவிட்டி, டைப் - சி சார்ஜிங் போர்ட் போன்ற அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
ஆகவே, பிரம்மாண்டமான கேமரா, கிரிஸ்டல் கிளியர் டிஸ்பிளே குவாலிட்டி, பெஸ்ட் பர்ஃபாமென்ஸ் சிப்செட், கேமிங் பிரியர்களை கவரும் விதமாக கிராபிக்ஸ் கார்டு போன்ற அத்தனை அம்சங்களையும், இந்த ஐக்யூ இசட் 7 ப்ரோ போன் பேக் செய்யும் என்பது உறுதி செய்யப்பட்டு விட்டது. இந்த போன் மிகப்பெரும் வரவேற்பு பெறும் என்பதில் சந்தேகமில்லை.


Click it and Unblock the Notifications








