Home
Mobile

ஒன்பிளஸ் சாம்ராஜ்யத்தை ஆட்டிபாக்க iQOO தயாரிப்பு ரெடி! 64எம்பி கேமரா.. பட்ஜெட் விலை.!

ஐக்யூ நிறுவனம் தனது புதிய ஐக்யூ இஸட்7 ப்ரோ 5ஜி (iQOO Z7 Pro 5G) ஸ்மார்ட்போனை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த ஐக்யூ இஸட்7 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது அசத்தலான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

குறிப்பாக ஐக்யூ இஸட்7 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் முன்பே அதன் விலைப் பற்றிய தகவல்கள் இணையத்தில் வெளிவந்துள்ளது. அதாவது இந்த ஐக்யூ இஸட்7 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் ரூ.25,000-விலையில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்பிளஸ் போன்களுக்கு போட்டியாக இந்த ஐக்யூ போன் தரமான அம்சங்களுடன் வெளிவரும். மேலும் இணையத்தில் வெளியான இந்த போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஒன்பிளஸ் சாம்ராஜ்யத்தை ஆட்டிபாக்க iQOO தயாரிப்பு ரெடி!  பட்ஜெட் விலை.!

அதாவது ஐக்யூ இஸட்7 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.78-இன்ச் வளைந்த AMOLED டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 1080 x 2400 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1300 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாகக் கொண்டு இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போனில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் இருப்பதால் வேகமாக இயக்க முடியும்.

மீடியாடெக் டைமன்சிட்டி 7200 சிப்செட் (MediaTek Dimensity 7200 chipset)உடன் இந்த ஐக்யூ இஸட்7 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். எனவே இந்த சாதனத்தை நம்பி வாங்கலாம். பின்பு ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த புத்தம் புதிய ஐக்யூ இஸட்7 ப்ரோ 5ஜி போன் அறிமுகமாகும்.

12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த ஐக்யூ இஸட்7 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த இந்த ஸ்மார்ட்போனில் ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது.

64எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா ஆதரவுடன் இந்த அசத்தலான ஐக்யூ இஸட்7 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவுடன் இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் வெளிவரும். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

4600எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் இந்த ஐக்யூ இஸட்7 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு 67 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் அறிமுகமாகும்.

குறிப்பாக 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, 3.5எம்எம் ஆடியோ ஜாக், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த ஐக்யூ இஸட்7 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன். பின்பு இந்த போன் குறைந்த எடையில் அறிமுகமாகும். குறிப்பாக இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த போன்.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
iQOO Z7 Pro phone to be launched in India soon at Rs 25,000: check specifications : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X