Home
Mobile

இது வேற ரகம்.. கம்மி பட்ஜெட்.. 3D கர்வ்ட் ஸ்கிரீன்.. 16GB ரேம்.. 1TB மெமரி.. OIS கேமரா.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டே வியந்து பார்க்கும்படி 3டி கர்வ்ட் டிஸ்பிளே, 16ஜிபி ரேம், 1டிபி மெமரி சப்போர்ட், 66W சார்ஜிங், 4,600mAh பேட்டரி போன்ற பிரீமியம் அம்சங்களுடன் ஐக்யூ இசட் ப்ரோ (iQOO Z7 Pro) போன் மிட்-ரேஞ்ச் விலையைவிட கம்மியான பட்ஜெட்டில் வருகிறது.

அல்ட்ரா ஸ்லிம் டிசைன், பெஸ்ட் வீடியோ பீல் கொடுக்கும் டிஸ்பிளே, கேமிங் பிரியர்களை கவரும் கிராபிக்ஸ் கார்டு, பட்டையை கிளப்பும் பர்பாமென்ஸ் கொண்ட சிப்செட் போன்ற ஒட்டுமொத்த அம்சங்களும் ஒரே போனில் வேண்டுமானால், உங்களுக்கு ஐக்யூ இசட் ப்ரோ போனே சரியான தேர்வாக இருக்கும். இந்த போனின் முழு அம்சங்கள், அறிமுக தேதி விவரங்கள் பின்வருமாறு.

கம்மி பட்ஜெட்.. 3D ஸ்கிரீன்.. 16GB ரேம்.. 1TB மெமரி.. எந்த மாடல்?

ஐக்யூ இசட் ப்ரோ 5ஜி அம்சங்கள் (iQOO Z7 Pro 5G Specifications): இந்த ஐக்யூ போனில் 6.78 இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு 3டி கர்வ்ட் சூப்பர் விஷன் (3D Curved Supervision) டிஸ்பிளேவாகும்.

இதில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 360Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 1300 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 13 (Android 13) உடன் மீடியாடெக் டைமன்சிட்டி 7200 எஸ்ஓசி 4என்எம் (MediaTek Dimensity 7200 SoC 4nm) என்னும் பிளாக்ஷிப் சிப்செட் வருகிறது.

அதோடு ஐக்யூ மாடல்களில் பயன்படுத்தப்படும் ஃபன்டச் ஓஎஸ் 13 (FunTouch OS 13) கொடுக்கப்பட்டுள்ளது. கேமிங் பிரியர்களை கவரும் விதமாக மாலி ஜி610 ஜிபியு (Mali G610 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. இந்த ஐக்யூ போன் டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்டிருக்கிறது.

ஆகவே, 64 எம்பி (OIS) மெயின் கேமரா + 2 எம்பி டேப்த் கேமரா (Depth Camera) கொடுக்கப்பட்டுள்ளது. 16 எம்பி செல்பீ கேமரா வருகிறது. இந்த போன் மிகவும் ஸ்லிம் டிசைனன் கொண்டிருப்பதால் வெறும் 4,600mAh பேட்டரி மட்டுமே வருகிறது. இந்த பேட்டரிக்கு 66W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, இந்த போன் 7.36 மிமீ அகலம் மட்டுமே இருக்கிறது.

இந்த ஐக்யூ மாடல் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி ஆகிய 2 வேரியண்ட்களில் விற்பனைக்கு வர இருக்கிறது. இதில் 8 ரேம் மாடலில் கூடுதலாக 8 ஜிபி விர்ச்சுவல் ரேம் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு 1 டிபி மைக்ரோஎஸ்டி (microSD) கார்டு சப்போர்ட் வருகிறது.

மேலும், IP54 தர டஸ்ட் மற்றும் பிளாஷ் ரெசிஸ்டன்ட் கொண்டிருக்கிறது. அதோடு இன் - டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), சிங்கிள் பாட்டம் - போர்டெட் ஸ்பீக்கர்கள் (Single Bottom Ported Speakers), 3.5மிமீ ஆடியோ ஜாக், ப்ளூடூத் 5.3, வை-பை 6, டைப் - சி சார்ஜிங் போன்ற அம்சங்களும் வருகின்றன.

இந்த ஐக்யூ இசட் 7 ப்ரோ போன் வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது. அதற்கு அடுத்த வாரத்தில் அமேசான் (Amazon) தளத்தில் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது. இதனிடையே ஐக்யூ நிறுவனம், அந்த போனின் அம்சங்கள் மற்றும் கலர்கள் குறித்த அப்டேட்களை கொடுத்து வருகிறது.

முன்னதாக, ப்ளூ லாகூன் (Blue Lagoon) கலர் அறிமுகம் செய்யப்பட்டது. இப்போது, கிராஃபைட் மேட் (Graphite Matte) என்னும் பிளாக் கலரை அறிமுகம் செய்துள்ளது. இவ்வளவு அம்சங்களை கொண்ட இந்த போனின் விலை ரூ.30,000 பட்ஜெட்டில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், வெறும் ரூ. 25,000 பட்ஜெட்டில் வெளியாகும் என்று ஐக்யூ நிறுவனம் உறுதி செய்துள்ளதாக மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த போனின் அம்சங்கள் மற்றும் டிசைன் மிகவும் பிரீமியமாக இருக்கிறது. குறிப்பாக 3டி கர்வ்ட் டிஸ்பிளே, இந்த விலை பட்டியல் போன்களில் கிடைக்காத ஒன்றாகும். ஆகவே, இந்த போன் விற்பனையில் சக்கைப்போடு போடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
iQoo Z7 Pro Launch on August 31 With 16GB RAM, Dimensity 7200, 3D Curved Display Specifications, Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X