அமேசான் அதிருது.. வெறும் ரூ.20,999 போதும்.. 3D டிஸ்பிளே.. SAMSUNG கேமரா.. 4600mAh பேட்டரி.. எந்த மாடல்?
அமேசான் (Amazon) தளத்தில் ஐக்யூவின் 4ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு 3டி டிஸ்பிளே கொண்ட ஐக்யூ இசட்7 ப்ரோ (iQOO Z7 Pro) போனுக்கும், சோனி கேமரா கொண்ட ஐக்யூ இசட்9 (iQOO Z9) போனுக்கும் நம்ப முடியாத தள்ளுபடி கிடைக்கிறது.
ஐக்யூ இசட்7 ப்ரோ அம்சங்கள், விலை (iQOO Z7 Pro Specifications Price): 6.78 இன்ச் ஃபுல்எச்டி 3டி கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே வருகிறது. எச்டிஆர்10பிளஸ், 1200 நிட்ஸ் பிரைட்னஸ், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 300Hz டச் சாம்பிளிங் ரேட் கொண்டிருக்கிறது. ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7200 4என்எம் சிப் உள்ளது.

ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் பேஸ்டு ஃபன்டச்ஓஎஸ் 13 கொண்டுள்ளது. சாம்சங் ஜிடபுள்யூ சென்சாருடன் 64 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா வருகிறது. 16 எம்பி செல்பீ கொண்டிருக்கிறது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி, 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட 2 மாடல்கள் கிடைக்கிறது.
66W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 4600mAh பேட்டரி உள்ளது. IP52 தர ரெசிஸ்டன்ட், பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர்கள் மற்றும் டைப்-சி ஆடியோ கொண்டிருக்கிறது. அண்டர் டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் வருகிறது. 5ஜி, டூயல் 4ஜி கனெக்டிவிட்டி வருகிறது. ப்ளூ லகூன் மற்றும் கிராஃபைட் மேட் கலர்களில் கிடைக்கிறது.
இந்த ஐக்யூ இசட்7 ப்ரோவின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.23,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மாடலின் விலை ரூ.24,999ஆகவும் இருக்கிறது. இப்போது, அமேசான் தளத்தில் ரூ.3000 உடனடி டிஸ்கவுண்ட் உடன் விற்பனையாகிறது. ஆகவே, 128 ஜிபி மெமரி மாடலை ரூ.20,999 பட்ஜெட்டில் வாங்கலாம்.

ஐக்யூ இசட்9 அம்சங்கள், விலை (iQOO Z9 Specifications Price): 6.67 இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் அமோலெட் டிஸ்பிளே வருகிறது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 360Hz டச் சாம்பிளிங் ரேட், எச்டிஆர்10பிளஸ், 1800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் டிடி ஸ்டார்2 கிளாஸ் பாதுகாப்பு கொண்டிருக்கிறது.
முந்தைய மாடலை போலவே ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7200 4என்எம் சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் பேஸ்டு ஃபன்டச்ஓஎஸ் 14 கொண்டுள்ளது. அதேபோல 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி, 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மட்டுமல்லாமல், 2 டிபிக்கான எஸ்டி கார்டு சப்போர்ட் கொண்டிருக்கிறது.
சோனி ஐஎம்எக்ஸ்882 சென்சார் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா வருகிறது. 16 எம்பி செல்பீ வருகிறது. 44W சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார், IP54 ரெசிஸ்டன்ட் மற்றும் ஸ்ட்ரீயோ ஸ்பீக்கர்கள் வருகின்றன.
கிராபீன் ப்ளூ மற்றும் பிரஷ்டு கிரீன் கலர்களில் கிடைக்கிறது. இந்த போனின் 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.19,999ஆகவும், 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.21,999ஆகவும் இருக்கிறது. இப்போது, அமேசான் தளத்தில் ரூ.2000 டிஸ்கவுண்ட் உடன் விற்பனையாகிறது. ஆகவே, ரூ.17,999 பட்ஜெட்டில் இந்த போனை வாங்கலாம்.
இந்த டிஸ்கவுண்ட்டை பெற எஸ்பிஐ (SBI) மற்றும் ஐசிஐசிஐ (ICICI) பேங்க் கிரெட் கார்டுகளுக்கு வழங்கப்படுகிறது. ஏப்ரல் 9ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரையில் மட்டுமே இந்த டிஸ்கவுண்ட்டை பெற்று கொள்ள முடியும். அதன்பிறகு மீண்டும் பழைய விலைக்கே அந்த போன்கள் விற்பனை செய்யப்படும்.


Click it and Unblock the Notifications