Home
Mobile

தீப்பறக்கும் டிஸ்கவுண்ட்.. வெறும் ரூ.21,499 போதும்.. 16GB ரேம்.. 64MP கேமரா.. 3D டிஸ்பிளே.. எந்த மாடல்?

அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையில் (Amazon Great Indian Festival Sale) ஐக்யூ மாடல்களுக்கு பிரம்மாண்ட தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் 16ஜிபி ரேம், 64எம்பி கேமரா, கர்வ்ட் டிஸ்பிளே கொண்ட ஐக்யூ இசட் 7 ப்ரோ போனே கவனம் பெற்றுள்ளது.

ஐக்யூ இசட் 7 ப்ரோ அம்சங்கள் (iQOO Z7 Pro Specifications): இந்த போனில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.78 இன்ச் ஃபுல்எச்டி டிஸ்பிளே வருகிறது. இதுவொரு 3டி கர்வ்ட் அமோலெட் (3D Curved AMOLED) மாடலாகும். இந்த டிஸ்பிளேவில் எச்டிஆர்10+, 1300 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 300Hz டச் சாம்பிளிங் ரேட் வருகிறது.

ரூ.21,499 போதும்.. 16GB ரேம்.. 64MP கேமரா.. 3D டிஸ்பிளே.. எந்த மாடல்?

இந்த ஐக்யூ ப்ரோ மாடலில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7200 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7200 4nm) சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது. கேமிங் பிரியர்களுக்கான மாலி - ஜி610 எம்சி4 ஜிபியு (Mali - G610 MC4 GPU) கிராபிக்ஸ் கார்டு சப்போர்ட் உள்ளது.

சாம்சங் ஜிடபுள்யூ3 (Samsung GW3) சென்சாருடன் 64 எம்பி மெயின் கேமரா வருகிறது. அதோடு 2 எம்பி டேப்த் சென்சார் கேமரா வருகிறது. ஆரா லைட் (Aura Light) இடம்பெற்றுள்ளது. 16 எம்பி செல்பீ கேமரா வருகிறது. இந்த ஐக்யூ ப்ரோ மாடலில் 66W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 4,600mAh பேட்டரி வருகிறது.

இந்த போனில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி ஆகிய 2 வேரியண்ட்கள் உள்ளன. இதன் 8 ஜிபி ரேம் மாடலில் கூடுதலாக 8 ஜிபி விர்ச்சுவல் ரேம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஐக்யூ போன் ப்ளூ லாகூன் (Blue Lagoon) மற்றும் கிராபைட் மேட் (Graphite Matte) ஆகிய 2 கலர்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த ஐக்யூ போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.23,999ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல 8 ஜிபி ரேம் + 268 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.24,999 ஆக இருக்கிறது. இப்போது, அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையை முன்னிட்டு வெறும் ரூ.21,499க்கு விற்பனை செய்யப்பட இருக்கிறது.

இதேபோல மற்ற ஐக்யூ மாடல்களுக்கும் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், ரூ.34,999 விலைக் கொண்ட ஐக்யூ நியோ 7 ப்ரோ மாடல் ரூ.30,999க்கும், ரூ.18,999 விலைக் கொண்ட ஐக்யூ இசட் எஸ் மாடல் ரூ.15,999க்கும், ரூ.13,999 விலைக் கொண்ட ஐக்யூ இசட்6 லைட் மாடல் வெறும் ரூ.11,749க்கும் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

அதேபோல ரூ.27,999 விலைக் கொண்ட ஐக்யூ நியோ 7 5ஜி போன் ரூ.25,999க்கும், ரூ. 42,999 விலைக் கொண்ட பீரிமியம் மாடலான ஐக்யூ 9 போன் வெறும் ரூ.27,990க்கும் விற்பனைக்கு வர இருக்கிறது. மேலும், ரூ.59,999 விலைக் கொண்ட ஐக்யூ 11 மாடல் ரூ.47,999க்கும், ரூ.64,990 விலைக் கொண்ட ஐக்யூ 9 ப்ரோ மாடல் வெறும் ரூ.37,990க்கும் விற்பனைக்கு வரவிருக்கிறது.

இந்த விலை ஸ்பெஷல் டிஸ்கவுண்ட் மற்றும் பேங்க் ஆஃபர்கள் மூலம் வழங்கப்பட இருக்கிறது. நாளை (அக்டோபர் 8) அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனை தொடங்குகிறது. அப்போதே, மேற்கூறிய விலையில் ஐக்யூ மாடல்கள் விற்பனைக்கு வரும். இந்த மாடல்களுக்கு பிளிப்கார்ட் பிக் பில்லியன் விற்பனையிலும், தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
iQoo Z7 Pro Gets Discount During Amazon Great Indian Festival Sale Check Specifications, Price, Offer
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X