Home
Mobile

பிசிறு தட்டும் டிஸ்பிளே.. மிரட்டியெடுக்கும் ஸ்லிம் டிசைன்.. 12GB ரேம்.. 66W சார்ஜிங் வேற.. எந்த மாடல்?

இந்திய ஸ்மார்ட்போன் பிரியர்கள் மத்தியில் மிகப்பெரும் எதிர்பார்ப்பை கிளப்பிவிட்ட ஐக்யூ (iQOO) நிறுவனத்தின் ஐக்யூ இசட்7 ப்ரோ 5ஜி (iQOO Z7 Pro 5G) போனின் வெளியீட்டு தேதி உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்த போனின் முழு அம்சங்கள், விலை குறித்த விவரங்கள் இதோ.

ஐக்யூ நிறுவனத்தின் ஐக்யூ இசட் 7 5ஜி (iQOO Z7 5G) போன் கடந்த மார்ச் மாதம் வெளியாகி விற்பனையில் சக்கைப் போடு போட்டது. இந்த போனின் டிஸ்பிளே மற்றும் சிப்செட் பர்பாமென்ஸ் பெரிதும் பேசப்பட்டது. இதனால், ஐக்யூ நிறுவனம், அந்த போனின் அப்டேட்டட் வெர்ஷனாக இசட்7 ப்ரோ 5ஜி போனை களமிறக்க திட்டமிட்டது.

மிரட்டும் ஸ்லிம் டிசைன்.. 12GB ரேம்.. 66W சார்ஜிங்.. எந்த மாடல்?

இதுகுறித்த அறிவிப்பை சமீபத்தில் ஐக்யூ நிறுவனம் வெளியிட்டது. அப்போதில், இருந்தே ஐக்யூ இசட்7 ப்ரோ 5ஜி போன், எப்போது வெளியாகும் என்று ஸ்மார்ட்போன் பிரியர்கள், ஆவலுடன் காத்திருந்து வருகின்றனர். அந்த போனின் டிஸ்பிளேவும், டிசைனுமே அதற்கு காரணம் இருக்கிறது. இந்த போன் குறித்த அறிவிப்பு வெளியானபோது, அதன் போட்டோக்களும் வெளியிடப்பட்டன.

அதில் பட்டாசான கர்வ்ட் டிஸ்பிளே மற்றும் மிகவும் ஸ்லிமான டிசைனை பார்த்த ஸ்மார்ட்போன் பிரியர்கள் திக்குமுக்காடி போய்விட்டனர். இந்த சூழலில் அந்த போனின், இந்திய வெளியீட்டு தேதியை ஐக்யூ நிறுவனமே உறுதி செய்துள்ளது. இந்த போனின் அம்சங்கள் பல முறை கசிந்துள்ளன. அவற்றை, இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ஐக்யூ இசட் 7 ப்ரோ அம்சங்கள் (iQOO Z7 Pro 5G specifications): இந்த ஐக்யூ போன் 6.78 இன்ச் ஃபுல்எச்டி பிளஸ் (FHD+) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 360Hz டச் சாம்பிளிங் ரேட் வருகிறது. அதோடு எச்டிஆர்10 பிளஸ் மற்றும் 1300 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்டிருக்கிறது.

இதுவொரு கர்வ்ட் டிசைன் டிஸ்பிளே கொண்ட போனாகும். இந்த ஐக்யூ போனில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) மற்றும் ஃபன்டச் ஓஎஸ் 13 (FunTouch OS 13) கொண்ட மீடியாடெக் டைமன்சிட்டி 7200 எஸ்ஓசி (MediaTek Dimensity 7200 SoC) சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போன் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி ஆகிய 2 வேரியண்ட்களில் விற்பனைக்கு வருகிறது.

அதோடு 1 டிபி வரை மைக்ரோஎஸ்டி (microSD) கார்டு சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போன் டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது. அந்த வகையில், 64 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டேப்த் சென்சார் கொண்டிருக்கிறது. 16 எம்பி செல்பீ கேமரா வருகிறது. இந்த போன் 66W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட 4,600mAh பேட்டரி கொண்டுள்ளது.

இந்த போனின் மற்ற அம்சங்கள், ஐக்யூ இசட் 7 5ஜி போனில் கொடுக்கப்பட்டது போல் இருக்க அதிக வாய்ப்புள்ளது. ஆகவே, அந்த போனின் அம்சங்களை இப்போது, தெரிந்துகொள்வது நல்லது. ஐக்யூ இசட் 7 போனில் கேமிங் பிரியர்களை கவரும் வண்ணம் மாலி - ஜி68 எம்சி4 ஜிபியு (Mali-G68 MC4 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது.

இன் - டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), IP54 தர டஸ்ட் மற்றும் பிளாஷ் ரெசிஸ்டன்ட், 3.5 எம்எம் ஆடியோ ஜாக், சிங்கிள் பாட்டம் - போர்டெட் ஸ்பீக்கர்கள், டைப் - டி சார்ஜிங் போர்ட், ப்ளூடூத் 5.1 கனெக்டிவிட்டி உள்ளிட்ட அம்சங்கள் வருகின்றன. இந்த புதிய ஐக்யூ இசட் 7 ப்ரோ போனின் விலையை பொறுத்தவரையில் ரூ.30,000 முதல் ரூ.35,000 பட்ஜெட்டில் விற்பனைக்கு வர வாய்ப்புள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
iQOO Z7 Pro 5G With Dimensity 7200 To Launch On August 31 in India Expected Price, Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X