Home
Mobile

தூக்கி சாப்பிட்ட பட்ஜெட்.. வெறும் ரூ.18,499 போதும்.. 3D டிஸ்பிளே.. 64MP கேமரா.. 4600mAh பேட்டரி.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டில் இருக்கும் 3டி கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே பிரியர்களை நம்ப முடியாத பட்ஜெட்டில் தட்டித் தூக்கும்படி ஐக்யூ இசட்7 ப்ரோ (iQOO Z7 Pro) போன் விற்பனைக்கு வந்துள்ளது. ஓஐஎஸ் கேமரா, 66W ஃபாஸ்ட் சார்ஜிங், 4600mAh பேட்டரி, மீடியாடெக் டைமன்சிட்டி சிப்செட், 16 ஜிபி ரேம் போன்ற மற்ற பீச்சர்களையும் மிட்-ரேஞ்ச் லெவலுக்கு கொடுக்கும் இந்த ஐக்யூ இசட்7 ப்ரோ போனின் முழு பீச்சர்கள் மற்றும் விலை குறைப்பு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ஐக்யூ இசட்7 ப்ரோ அம்சங்கள் (iQOO Z7 Pro Specifications): இந்த ஐக்யூ போனானது, 1.5 ஆண்டுகள் பழைய மாடலாக இருக்கிறது. ஆகவே, ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) மட்டுமே கிடைக்கிறது. இருப்பினும், 2 வருட ஓஎஸ் அப்டேட் கிடைப்பதால், ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் வரையில் பெற்று கொள்ளலாம். அதேபோல 3 வருட செக்யூரிட்டி அப்டேட் உள்ளது.

தூக்கி சாப்பிட்ட பட்ஜெட்.. வெறும் ரூ.18,499 போதும்.. 3D டிஸ்பிளே!

இந்த ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் மட்டுமே இதில் குறையாக இருக்கிறது. மற்றபடி, டிஸ்பிளே, கேமரா, சிப்செட் மற்றும் பேட்டரி பீச்சர்கள் பின்னிப்பெடல் எடுக்கும்படி இருக்கின்றன. ஆகவே, இந்த ஐக்யூ இசட்7 ப்ரோ போனில் 4என்எம் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7200 எஸ்ஓசி (4nm Octa Core MediaTek Dimensity 7200 SoC) பேக் செய்யப்பட்டுள்ளது.

இந்த பட்ஜெட்டுக்கு ஏற்ப மாலி ஜி610 ஜிபியு (Mali G610 GPU) மற்றும் ஃபன்டச்ஓஎஸ் 13 (FuntouchOS 13) கிடைக்கிறது. இதில் ஃபன்டச்ஓஎஸ் 15 வரையில் அப்டேட்டை பெற்று கொள்ளலாம். முன்பே சொன்னதை போல 6.78 இன்ச் (2400 x 1080 பிக்சல்கள்) 3டி கர்வ்ட் அமோலெட் (3D Curved AMOLED) டிஸ்பிளே மற்றும் 1300 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது.

மேலும், ஃபுல்எச்டிபிளஸ் (FHD) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 300Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் எச்டிஆர்10பிளஸ் (HDR10+) கொடுக்கிறது. இந்த ஐக்யூ இசட்7 ப்ரோ போனில் ஹைபிரிட் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Hybrid Image Stabilization) மற்றும் ஆரா லைட் (Auro Light) கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) கிடைக்கிறது.

தூக்கி சாப்பிட்ட பட்ஜெட்.. வெறும் ரூ.18,499 போதும்.. 3D டிஸ்பிளே!

ஆகவே, ஓஐஎஸ் (OIS) மற்றும் ஈஐஎஸ் (EIS) சப்போர்ட் கொண்ட 64 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. இந்த கேமராவுக்கு சாம்சங் ஜிடபுள்யூ3 (Samsung GW3) சென்சார் மற்றும் 2 எம்பி செகண்டரி கேமரா சப்போர்ட் கிடைக்கிறது. 4K வீடியோ ரெக்கார்டிங், சூப்பர் நைட் மோட் மற்றும் 16 எம்பி செல்பீ ஷூட்டரை இந்த ஐக்யூ இசட்7 ப்ரோ கொடுக்கிறது.

இரண்டு ரேம் வேரியண்ட்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. ஆகவே, 8 ஜிபி ரேம் + 128 ஜிபி வேரியண்ட் மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட் விற்பனைக்கு கிடைக்கிறது. வெறும் 7.36 எம்எம் தடிமன் மட்டுமே வருவதால், 4600mAh பேட்டரி கிடைக்கிறது. இருப்பினும், 66W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொடுத்து இருக்கிறது.

இந்திய மார்கெட்டில் வெளியானபோது, 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.23,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.24,999ஆகவும் இருந்தது. இப்போது, எந்தவித கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு இல்லாமலேயே ரூ.5,500 விலை குறைப்பில் கிடைக்கிறது. ஆகவே, அமேசானில் ரூ.18,499-க்கு கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
iQOO Z7 Pro 5G With 64MP Camera Gets 31 Percent Discount on Amazon Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X