அறக்க பறக்குது ஆர்டர்.. ரூ.20000 பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 64MP கேமரா.. 66W சார்ஜ்.. 4600mAh பேட்டரி.. எந்த போன்?
அமேசான் தளத்தில் நடக்கும் ஐக்யூ குவெஸ்ட் டேஸ் (iQOO Quest Days) விற்பனையில் 3டி கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே, சாம்சங் சென்சாருடன் 64 எம்பி மெயின் கேமரா, 66W ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் 4600mAh பேட்டரி போன்ற பீச்சர்கள் மட்டுமல்லாமல், பிரீமியம் ஸ்லிம் லுக் கொண்ட ஐக்யூ இசட்7 ப்ரோ 5ஜி (iQOO Z7 Pro 5G) போனுக்கு நம்ப முடியாத டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. இந்த ஐக்யூ இசட்7 ப்ரோவின் முழு பீச்சர்கள் மற்றும் விலை விவரங்கள் இதோ.
கர்வ்ட் டிஸ்பிளே போன்களில் பட்டையை கிளப்பும் கேமரா பீச்சர்களை கொண்ட மாடலாக இந்த ஐக்யூ இசட்7 ப்ரோ இருக்கிறது. ஏனென்றால், சாம்சங் சென்சார் மட்டுமல்லாமல், ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி வருகிறது. ஆகவே, 3டி கர்வ்ட் செக்மெண்ட்டில் பட்ஜெட்டில் இந்த போன் பக்கா ஆப்ஷனாக இருக்கும்.

ஐக்யூ இசட்7 ப்ரோ 5ஜி அம்சங்கள் (iQOO Z7 Pro 5G Specifications): இந்த ஐக்யூவில் ஆரா லைட் (Aura Light) கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) வருகிறது. ஆகவே, சாம்சங் ஜிடபிள்யூ சென்சார் (Samsung GW3 Sensor) மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) டெக்னாலஜி கொண்ட 64 எம்பி மெயின் கேமரா வருகிறது.
இந்த கேமராவுடன் 2 எம்பி டெப்த் சென்சார் வருகிறது. இந்த மெயின் கேமராவில் ஸ்போர்ட்ஸ் மோட் (Sports Mode), 9X லைட்-எமிட்டிங் ஏரியா (Light-Emitting Area) சப்போர்ட் வருகிறது. வழக்கமான நைட் மோட் (Night Mode), போர்ட்ராய்டு மோட் (Portrait Mode) போன்ற பீச்சர்கள் வருகின்றன. பொக்கெ (Bokeh) சப்போர்ட் உள்ளது.
இந்த ஐக்யூ இசட்7 ப்ரோ 5ஜி போனில் 16 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. பிரீமியம் டிஸ்பிளே பீச்சர்களில் தட்டித்தூக்கி இருக்கிறது. ஃபுல்எச்டி (FHD) ரெசொலூஷன் கொண்ட 6.78 இன்ச் (2400 × 1080 பிக்சல்கள்) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு 1300 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட 3டி கர்வ்ட் அமோலெட் (3D Curved AMOLED) மாடலாகும்.

மேலும், எச்டிஆர்10பிளஸ் (HDR10+), 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 300Hz டச் சாம்பிளிங் ரேட் கொண்டிருக்கிறது. கர்வ்ட் டிஸ்பிளே கொண்டிருப்பதால், அல்ட்ரா ஸ்லிம் லுக்கில் 7.36 மிமீ தடிமன் மட்டுமே கொண்டிருக்கிறது. 175 கிராம் எடை உள்ளது. 8 ஜிபி ரேம் + 8 ஜிபிக்கான விர்ச்சுவல் ரேம் சப்போர்ட் இந்த போனில் இருக்கிறது.
ஆகவே, 16 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்களை ஆர்டர் செய்து கொள்ளலாம். 4600mAh பேட்டரி மற்றும் 66W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. டைப்-சி ஆடியோ மற்றும் பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர் (Bottom-ported Speaker) வருகின்றன.
இந்த ஐக்யூ மாடலை ப்ளூ லகூன் மற்றும் கிராஃபைட் மேட் ஆகிய 2 கலர்களில் ஆர்டர் செய்து கொள்ள முடியும். இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டபோது, 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.23,999ஆக இருந்தது. ஆனால், இப்போது அமேசான் விற்பனையில் (Amazon Sale) ரூ.22,999 பட்ஜெட்டில் கிடைக்கிறது.
இந்த பட்ஜெட்டிலும் இப்போது ஐக்யூ குவெஸ்ட் டேஸ் விற்பனையை முன்னிட்டு ரூ.2000 உடனடி டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. எஸ்பிஐ கிரெடிட் கார்டு பயன்படுத்தி இந்த டிஸ்கவுண்டை பெற்று கொள்ளலாம். வரும் ஜூலை 9ஆம் தேதி வரையில் மட்டுமே இந்த பேங்க் டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








