Home
Mobile

மிரளுது அமேசான்.. அடிமட்ட ரேட்டுல 3D டிஸ்பிளே.. 64MP கேமரா.. 66W சார்ஜிங்.. 4600mAh பேட்டரி.. எந்த மாடல்?

அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையின் ஒரு பகுதியாக அமேசான் நவராத்திரி விற்பனை 2024 (Amazon Navratri Sale 2024) தொடங்கி இருக்கிறது. இந்த விற்பனையில் ஐக்யூ இசட் சீரிஸ் மற்றும் ரியல்மி நார்சோ சீரிஸ் போன்களுக்கு இதுவரையில் கிடைக்காதபடி பேங்க் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. கூடவே கூப்பன் டிஸ்கவுண்ட்டும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த விற்பனையில் அதிகப்படியான டிஸ்கவுண்ட் கிடைக்கும் மாடல்களின் விவரங்கள் இதோ.

ஐக்யூ இசட்7 ப்ரோ 5ஜி அம்சங்கள், விலை (iQOO Z7 Pro 5G Specifications Price): 7.36 மிமீ தடிமனில் அல்ட்ரா ஸ்லிம் பாடி வருகிறது. 6.78 இன்ச் 3டி கர்வ்ட் அமோலெட் (3D Curved AMOLED) டிஸ்பிளே உள்ளது. ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7200 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7200 4nm) சிப்செட் மற்றும் சாம்சங் சென்சாருடன் 64 எம்பி மெயின் கேமரா வருகிறது.

மிரளுது அமேசான்.. அடிமட்ட ரேட்ல 3D டிஸ்பிளே.. 64MP கேமரா.. எந்த போன்?

16 எம்பி செல்பீ ஷூட்டர் உள்ளது. 4600mAh பேட்டரி மற்றும் 66W ஃபாஸ்ட் சார்ஜிங் வருகிறது. இந்த ஐக்யூவின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மாடலின் விலை ரூ.21,999ஆக இருக்கிறது. இப்போது, அமேசான் நவராத்திரி விற்பனையில் ரூ.1500 டிஸ்கவுண்ட் போக ரூ.20,499 பட்ஜெட்டில் கிடைக்கிறது. எஸ்பிஐ கிரெடிட் கார்டுக்கு இந்த டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது.

ஐக்யூ இசட்9எஸ் 5ஜி அம்சங்கள், விலை (iQOO Z9s 5G Specifications Price): 6.77 இன்ச் ஃபுல்எச்டி அமோலெட் (FHD AMOLED) டிஸ்பிளே வருகிறது. ஆக்டா கோர் மீடியாடெக் 7300 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7300 4nm) சிப்செட் மற்றும் கேமரா சோனி ஐஎம்எக்ஸ் 882 (Sony IMX 882) சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா வருகிறது. 16 எம்பி செல்பீ உள்ளது.

5500mAh பேட்டரி மற்றும் 44W ஃபாஸ்ட் சார்ஜிங் வருகிறது. இந்த ஐக்யூ போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.24,998ஆக இருக்கிறது. இருப்பினும், அமேசான் நவராத்திரி விற்பனையில் ரூ.3,000 டிஸ்கவுண்ட் போக வெறும் ரூ.21,998 பட்ஜெட்டில் ஆர்டருக்கு கிடைக்கிறது. எஸ்பிஐ கிரெடிட் கார்டு பயன்படுத்த வேண்டும்.

மிரளுது அமேசான்.. அடிமட்ட ரேட்ல 3D டிஸ்பிளே.. 64MP கேமரா.. எந்த போன்?

ஐக்யூ இசட்9 5ஜி அம்சங்கள், விலை (iQOO Z9 5G Specifications Price): டிடி-ஸ்டார்1 புரொடெக்சன் கொண்ட 6.67 இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் அமோலெட் டிஸ்பிளே வருகிறது. ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7200 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7200 4nm) சிப்செட் மற்றும் சோனி ஐஎம்எக்ஸ்882 (Sony IMX882) சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா வருகிறது.

16 எம்பி செல்பீ கேமரா பேக் செய்யப்பட்டுள்ளது. 5000mAh பேட்டரி மற்றும் 44W ஃபாஸ்ட் சார்ஜிங் வருகிறது. இந்த ஐக்யூ போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.18,499ஆக இருக்கிறது. இப்போது, அமேசான் நவராத்திரி விற்பனையில் ரூ.2,750 டிஸ்கவுண்ட் மற்றும் ரூ.184 கூப்பன் டிஸ்கவுண்ட் போக ரூ.15,564-க்கு கிடைக்கிறது.

ரியல்மி நார்சோ 70எக்ஸ் 5ஜி அம்சங்கள், விலை (Realme NARZO 70x 5G Specifications Price): 6.72 இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் டிஸ்பிளஸ் வருகிறது. ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6100 பிளஸ் 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6100+ 6nm) சிப்செட் மற்றும் 50 எம்பி மெயின் கேமரா வருகிறது. 8 எம்பி செல்பீ கேமரா பேக் செய்யப்பட்டுள்ளது.

5000mAh பேட்டரி மற்றும் 45W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் (SuperVOOC Fast Charging) வருகிறது. இந்த நார்சோ போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.13,498ஆக இருக்கிறது. அமேசான் நவராத்திரி விற்பனையை முன்னிட்டு ரூ.2000 கூப்பன் டிஸ்கவுண்ட் போக ரூ.11,498 விலையில் கிடைக்கிறது. இதற்கு பேங்க் கார்டுகள் வேண்டாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
iQOO Z7 Pro 5G Gets Flat Rs 1500 Discount in Amazon Navratri Sale 2024 Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X