எழுதி வச்சிக்கோங்க.. மொத்த OnePlus போன் மார்க்கெட்டும் காலி.. ஏன்னா இந்த போனோட விலை அப்படி.. என்ன மாடல்?
கடந்த மாதம் அறிமுகமான 2 பட்ஜெட்-விலை ஒன்பிளஸ் போன்களின் (நோர்ட் 3 5ஜி மற்றும் நோர்ட் சிஇ 3 5ஜி) மார்கெட்டை காலி செய்யும் விலை மற்றும் அம்சங்களுடன் வருகிற ஆகஸ்ட் 31 ஆம் தேதியன்று ஒரு புதிய ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
நாம் இங்கே பேசுவது ஐக்யூ நிறுவனத்தின் புதிய மிட்-ரேன்ஜ் விலை ஸ்மார்ட்போனான ஐக்யூ இஸட்7 ப்ரோ 5ஜி (iQOO Z7 Pro 5G) மாடலை பற்றித்தான். வருகிற ஆகஸ்ட் 31 ஆம் தேதியன்று அறிமுகம் செய்யப்படவுள்ள இந்த ஸ்மார்ட்போனின் டிசைன், கலர் ஆப்ஷன் மற்றும் அம்சங்கள் குறித்த விவரங்கள் ஒவ்வொன்றாக வெளியான வண்ணம் உள்ளன.

வடிவமைப்பு மற்றும் கலர் ஆப்ஷனை பொறுத்தவரை, ஐக்யூ இஸட்7 ப்ரோ 5ஜி ஆனது ப்ளூ லகூன் (Blue Lagoon) நிறத்தில் அறிமுகம் செய்யப்படும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியான டீஸர் புகைப்படங்களின் (Teaser Photos) வழியாக ப்ளூ லகூன் என்பது.. பெரும்பாலான ஒன்பிளஸ் போன்களில் நாம் பார்த்த ஒரு வகையான வெளிர் நீல நிறமாக (Light Blue Shade) உள்ளது; சுவாரசியமாக இதுவொரு கிரேடியன்ட் ஃபினிஷையும் (Gradient Finish) பெற்றுள்ளது.
மேலும், ப்ளூ லகூன் கலரை வெளிப்படுத்தும் டீஸர் புகைப்படங்கள் வழியாக ஐக்யூ இஸட்7 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் ஒட்டுமொத்த வடிவமைப்பையும் கூட வெளிப்படையாக காணமுடிகிறது. இதன் பேக் பேனில் டூயல்-ரியர் கேமரா செட்டப் (Dual Rear Camera Setup) உள்ளது; கூடவே வட்ட வடிவிலான பிளாஷ் ஒன்றும் உள்ளது.
முன்பக்கத்தை பொறுத்தவரை, இது பஞ்ச்-ஹோல் செல்பீ கேமரா உடனான கர்வ்டு டிஸ்பிளே (Curved Display) டிசைனை கொண்டிருக்கும் என்பது ஏற்கனவே உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதாவது சீனாவில் அறிமுகமான விவோ எஸ்17இ (Vivo S17e) ஸ்மார்ட்போனின் ரீபிராண்டட் வெர்ஷனாக (Rebranded version) இருக்கும் என்பது கிட்டத்தட்ட உறுதிசெய்யப்பட்டுவிட்டது.
தெரியாதவர்களுக்கு, ஐக்யூ என்பது விவோ நிறுவனத்தின் துணை பிராண்ட் (Sub-brand) ஆகும் மற்றும் ரீபிராண்டிங் என்பது இவ்விரு பிராண்டுகளுக்கு இடையே நடக்கும் மிகவும் பொதுவான நடைமுறையாகும். ஷாவ்மீ (Xiaomi) மற்றும் ரெட்மி (Redmi) ஸ்மார்ட்போன்களுக்கு இடையே கூட அவ்வப்போது ரீபிரான்டிங் நடக்கும்.
அம்சங்களை பொறுத்தவரை ஐக்யூ இஸட்7 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.78-இன்ச் FHD+ கர்வ்டு AMOLED டிஸ்பிளேவை 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் சப்போர்ட் உடன் கொண்டிருக்கலாம். இது மீடியாடெக் டைமன்சிட்டி 7200 சிப்செட் (MediaTek Dimensity 7200 SoC) மூலம் இயக்கப்படலாம்.
கேமராக்களை பொறுத்தவரை 64MP + 2MP டூயல் ரியர் கேமரா செட்டப்பையும், முன்பக்கத்தில் 16MP செல்பீ கேமராவையும் கொண்டிருக்கலாம். பேட்டரி மற்றும் சார்ஜிங்கை பொறுத்தவரை, இது 66W பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்துடன் 4,600mAh பேட்டரியை பேக் செய்யலாம்.கடைசியாக இது ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் அடிப்படையிலான ஃபன்டச் ஓஎஸ், வைஃபை 6, ப்ளூடூத் 5.3, இன்-டிஸ்ப்ளே ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் போன்ற அம்சங்களையும் கொண்டிருக்கலாம்.
விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, இந்தியாவில் ஐக்யூ இஸட்7 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது மொத்தம் 3 ஸ்டரோஜ் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்படலாம்: 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ், 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ்.
இதில் பேஸிக் வேரியண்ட் ஆன 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது இந்தியாவில் ரூ.25,000 முதல் ரூ.30,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விலை நிர்ணயம் உண்மையாகும் பட்சத்தில் முறையே ரூ.33,999 மற்றும் ரூ.26,999 க்கு கிடைக்கும் ஒன்பிளஸ் நோர்ட் 3 மற்றும் நோர்ட் சிஇ 3 மாடல்களுக்கு இது கடும் போட்டியாக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்!


Click it and Unblock the Notifications








