ஆர்டர் பிச்சிக்குது.. வெறும் ரூ.22749 போதும்.. 3D டிஸ்பிளே.. 16GB ரேம்.. OIS கேமரா.. 66W சார்ஜிங்.. எந்த போன்?
அமேசான் விற்பனையில் பிரம்மாண்ட டிஸ்கவுண்ட்டில் ரூ.25,000 பட்ஜெட்டை விட மலிவான விலைக்கு கிடைக்கும் டாப் 3 ஸ்மார்ட்போன்களை பற்றி இங்கே தெரிந்து கொள்ளுங்கள். இதில் ஐக்யூ இசட்7 ப்ரோ, ரியல்மி 11 ப்ரோ மற்றும் ரெட்மி 12 ப்ரோ போன்கள் இடம்பெற்றுள்ளன.
ஐக்யூ இசட் ப்ரோ 5ஜி அம்சங்கள் மற்றும் விலை (iQOO Z7 Pro 5G Specifications, Price): இந்த ஐக்யூ போன் 6.78 இன்ச் 3டி கர்வ்ட் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு 13 (Android 13) கொண்ட மீடியாடெக் டைமன்சிட்டி 7200 எஸ்ஓசி 4என்எம் (MediaTek Dimensity 7200 SoC 4nm) சிப்செட் வருகிறது.

இந்த போனில் 64 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டேப்த் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. 16 எம்பி செல்பீ கேமரா வருகிறது. 66W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 4,600mAh பேட்டரி வருகிறது. இந்த போனில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி ஆகிய 2 வேரியண்ட்கள் உள்ளன. 8 ஜிபி விர்ச்சுல் ரேம் உள்ளது.
இந்த போனின் 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.23,999ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.24,999ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த விலையில், அமேசான் தளத்தில் ரூ.2,250 தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த தள்ளுபடியை ஐசிஐசிஐ பேங்க் கிரெடிட் கார்டு பயன்படுத்தி பெற்றுக்கொள்ளலாம்.
ரியல்மி 11 ப்ரோ அம்சங்கள் மற்றும் விலை (Realme 11 Pro Specifications, Price): இந்த போன் 6.7 இன்ச் (2412×1080 pixels) கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7050 6என்எம் சிப்செட் மற்றும் மாலி-ஜி68 எம்சி4 ஜிபியு கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது.

8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி, 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி ஆகிய 3 வேரியண்ட்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. இந்த போனில் 100 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா வருகிறது. அதோடு 16 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த போனின் 8 ஜிபி + 256 ஜிபி மாடலின் விலை ரூ.23,849 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்போது, அமேசான் (Amazon) தளத்தில் ஐசிஐசிஐ பேங்க் கிரெடிட் கார்டுக்கு ரூ.1000 தள்ளுபடி கொடுக்கப்படுகிறது. ஆகவே, இந்த மாடலை வெறும் ரூ.22,849க்கு வாங்கிக் கொள்ள முடியும்.
ரெட்மி நோட் 12 ப்ரோ அம்சங்கள் மற்றும் விலை (Redmi Note 12 Pro Specifications, Price): இந்த போன் 6.67 இன்ச் ஓஎல்இடி டிஸ்பிளே (OLED) கொண்டுள்ளது. அதோடு கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 1080 6என்எம் சிப்செட் கொண்டுள்ளது.
சோன் ஐஎம்766 சென்சார் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா வருகிறது. 67W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போனின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மாடலின் விலை ரூ.22,280ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இப்போது, இந்த விலையில் அமேசான் தளத்தில் ஐசிஐசிஐ பேங்க் கார்டுகளுக்கு ரூ.1000 தள்ளுபடி கொடுக்கப்படுகிறது. ஆகவே, இந்த மாடலை வெறும் ரூ.21,280க்கு வாங்கிக்கொள்ள முடியும். ரூ.25,000 பட்ஜெட்டுக்குள் நல்ல ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும் என்றால், இந்த மூன்று மாடல்களே டாப் 3 இடத்தை பிடித்துள்ளன என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








