4K ரெசல்யூஷனில் வீடியோ பதிவு செய்யலாம்! இந்தியாவுக்கு வருகிறது புதிய iQOO 5ஜி போன்: அறிமுக தேதி இதுதான்.!
பிரபலமான ஐக்யூ நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு போன்களும் தனித்துவமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவருகிறது. இந்நிலையில் வரும் மார்ச் 21-ம் தேதி இந்தியாவில் iQoo Z7 5G எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது.
குறிப்பாக இந்த iQoo Z7 5G போன் தரமான சிப்செட் மற்றும் தனித்துவமான கேமரா உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த புதிய iQoo Z7 5G ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

iQoo Z7 5G அம்சங்கள்
இந்த iQoo Z7 5G ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் Dimensity 920 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் இந்த புதிய போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.
புதிய iQoo Z7 5G ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் அறிமுகமாகும் என்று கூறப்பட்டுள்ளது. பெரிய டிஸ்பிளே என்பதால் இந்த போனை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த போன் அறிமுகமாகும்.

குறிப்பாக iQoo Z7 5G ஸ்மார்ட்போன் ஆனது 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
4கே வீடியோ பதிவு
64எம்பி ரியர் கேமரா வசதியைக் கொண்டுள்ளது இந்த iQoo Z7 5G ஸ்மார்ட்போன். மேலும் இந்த போனின் உதவியுடன் 4கே வீடியோக்களை பதிவு செய்ய முடியும் என்று கூறப்படுகிறது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா ஆதரவுடன் இந்த போன் அறிமுகமாகும். பின்பு எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.
5000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த iQoo Z7 5G ஸ்மார்ட்போன். எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். பின்பு 44 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.
5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை 6, புளூடூத் 5.3, யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டு இந்த புதிய போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் போர்ட்ரெய்ட், நைட், மேக்ரோ, டைம்-லாப்ஸ் போட்டோகிராபி, ஸ்லோ மோஷன், பனோரமா மற்றும் டூயல்-வியூ வீடியோ உள்ளிட்ட பல கேமரா அம்சங்களை வழங்கும் இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

என்ன விலை?
இணையத்தில் வெளிவந்த தகவலின்படி இந்த புதிய iQoo Z7 5G ஸ்மார்ட்போன் ஆனது ரூ.20,000-க்கு கீழ் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய ஸ்மார்ட்போன் தரமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்பதால் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications








