Home
Mobile

64எம்பி ரியர் கேமரா கொண்ட iQOO Z7 5G போனுக்கு அதிரடி தள்ளுபடி: முந்துங்கள்.!

iQOO நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் தனித்துவமான அம்சங்களுடன் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்கிறது. எனவேதான் இந்நிறுவனத்தின் போன்களுக்கு அதிக வரவேற்பு உள்ளது. இந்நிலையில் பிரபலமான iQOO Z7 5G போனுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

iQOO அதிகாரப்பூர்வ இணையதளத்தில் என்ற TJz7500087E4 கூப்பன் குறியீட்டைப் பயன்படுத்தினால் இந்த iQOO Z7 5G போனை தள்ளுபடி விலையில் வாங்க முடியும். அதாவது ரூ.18,999-க்கு விற்பனை செய்யப்பட்ட இந்த iQOO Z7 5G போன் ஆனது தற்போது ரூ.18,499-விலையில் வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது இந்த போனின் அம்சங்களைப் பார்ப்போம்.

64எம்பி ரியர் கேமரா கொண்ட iQOO Z7 5G போனுக்கு அதிரடி தள்ளுபடி.!

நார்வே ப்ளூ மற்றும் பசிபிக் நைட் ஆகிய இரண்டு நிறங்களில் இந்த போன் விற்பனைக்கு வருகிறது. மேலும் 6.38 இன்ச் முழு HD+ AMOLED வசதியை அடிப்படையாகக் கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. பெரிய டிஸ்பிளே என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

அதேபோல் 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1300 நிட்ஸ் ப்ரைட்னஸ், 360 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன்
வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது. அதேபோல் இதன் சிப்செட் வசதிக்கும் அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

iQOO Z7 5G ஸ்மார்ட்போன் மீடியாடெக் Dimensity 920 5G சிப்செட் வசதியை அடிப்படையாகக் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.
எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக உள்ளது. அதேபோல் FunTouch OS 13 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தைக்
கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல். மேலும் இந்த போன் 2 வருட OS அப்டேட்களையும் மூன்று வருட மாதாந்திர செக்யூரிட்டி அப்டேட்களையும்
பெறும்.

64எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த iQOO Z7 5G ஸ்மார்ட்போன். எனவே
இந்த ஸ்மார்ட்போன் உதவுடயுடன் அட்டகாசமான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும்,வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி
கேமராவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

64எம்பி ரியர் கேமரா கொண்ட iQOO Z7 5G போனுக்கு அதிரடி தள்ளுபடி.!

4500 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த iQOO Z7 5G ஸ்மார்ட்போன் மாடல். பின்பு 44 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர்
உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த புத்தம் புதிய ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக இந்த போனை சில நிமிடங்களில் சார்ஜ் செய்துவிட முடியும்.

5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை 6, புளூடூத் 5.3, யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டு வெளிவந்துள்ளது இந்த iQOO Z7 5G
ஸ்மார்ட்போன். பட்ஜெட் விலையில் ஒரு நல்ல 5ஜி போனை வாங்க வேண்டும் என்றால் இந்த iQOO Z7 5G ஸ்மார்ட்போனை வாங்குவது நல்லது.

Best Mobiles in India

English summary
iQOO Z7 5G Price Slashed in India: check out new price : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X