குறை ஒன்றுமில்லை, ஒரு டுவிஸ்ட் இருக்கு: பட்ஜெட் விலையில் iQOO Z6x, iQOO Z6!

|

Vivoவின் துணை பிராண்டான iQOO இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. அது iQOO Z6 மற்றும் Z6x ஆகும். iQOO Z6 ஸ்மார்ட்போனானது ஸ்னாப்டிராகன் 778ஜி+ சிப்செட் ஆதரவைக் கொண்டிருக்கிறது. அதேபோல் iQOO Z6x ஸ்மார்ட்போனானது டூயல் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. Z6 சீரிஸ் இன் கீழ் இந்த இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களும் அறிமுகமாகி இருக்கிறது.

மூன்று வேரியண்ட்களில் அறிமுகம்

மூன்று வேரியண்ட்களில் அறிமுகம்

iQOO Z6x ஆனது மூன்று வேரியண்ட்களில் வெளியாகி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் 6GB ரேம் + 128GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை CNY 1,199 என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.இதன் இந்திய விலை மதிப்பு ரூ.14,000 ஆகும்.

அதேபோல் 8GB RAM + 128GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை CNY 1,399 (தோராயமாக ரூ.16,500) எனவும் 8GB RAM + 256GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் விலை CNY 1,599 (தோராயமாக ரூ.19,000) எனவும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

இந்த ஸ்மார்ட்போனானது ப்ளூ ஐஸ், ப்ளாக் மிரர் மற்றும் ப்ளேசிங் ஆரஞ்ச் வண்ண விருப்பங்களில் வெளியாகி இருக்கிறது.

iQOO Z6 விலை விவரங்கள்

iQOO Z6 விலை விவரங்கள்

iQOO Z6 ஸ்மார்ட்போனானது மூன்று வேரியண்ட்களில் வெளியாகி உள்ளது. இதன் 8GB ரேம் + 128GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை CNY 1,699 (தோராயமாக ரூ. 20,000) எனவும் 8GB ரேம் + 256GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை CNY 1,699 (தோராயமாக ரூ. 22,000) எனவும் 12GB ரேம் + 256GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் CNY 2,099 (தோராயமாக ரூ.25,000) எனவும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

இந்த ஸ்மார்ட்போன் மாடலானது கோல்டன் ஆரஞ்ச், இங்க் ஜேட் மற்றும் ஸ்டார் சீ ப்ளூ வண்ண விருப்பங்களில் வெளியாகி இருக்கிறது.

iQOO Z6x சிறப்பம்சங்கள்

iQOO Z6x சிறப்பம்சங்கள்

iQOO Z6x சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போனில் 1080 × 2408 பிக்சல் தீர்மானம் மற்றும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் உடனான 6.58 இன்ச் IPS LCD ஃபுல் HD+ டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது.

இது 400 நிட்ஸ் உச்ச பிரகாச அளவைக் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது ஆக்டோ கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 810 5G சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.

50 எம்பி முதன்மை கேமரா

50 எம்பி முதன்மை கேமரா

இந்த ஸ்மார்ட்போனானது டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கிறது. 50 எம்பி முதன்மை கேமரா மற்றும் 2 எம்பி மேக்ரோ கேமரா லென்ஸ் ஆதரவு உள்ளது. செல்ஃபி ஆதரவுகளுக்கு என ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 8MP கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

44W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு

44W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு

44W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடனான 6000mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு அம்சத்துக்கு என பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் ஆதரவு உள்ளது.

iQOO Z6 சிறப்பம்சங்கள்

iQOO Z6 சிறப்பம்சங்கள்

iQOO Z6 சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போனானது 6.64 இன்ச் LCD டிஸ்ப்ளே ஆதரவைக் கொண்டிருக்கிறது. 120Hz ரெஃப்ரஷிங் ரேட் மற்றும் 240Hz டச் மாதிரி ஆதரவைக் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது ஸ்னாப்டிராகன் 778ஜி+ சிப்செட் ஆதரவைக் கொண்டிருக்கிறது.

8 எம்பி செல்பி கேமரா ஆதரவு

8 எம்பி செல்பி கேமரா ஆதரவு

இந்த ஸ்மார்ட்போனில் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. 64 எம்பி சென்சார், 2 எம்பி டெப்த் சென்சார் மற்றும் 2 எம்பி மேக்ரோ சென்சார் ஆதரவு இருக்கிறது. ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 8 எம்பி செல்பி கேமரா ஆதரவு உள்ளது.

ஆண்ட்ராய்டு 12 ஆதரவு

ஆண்ட்ராய்டு 12 ஆதரவு

80W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் கூடிய 4500mAh எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. OriginOS Ocean உடனான ஆண்ட்ராய்டு 12 ஆதரவு இதில் இருக்கிறது.

இரண்டு ஸ்மார்ட்போன்களும் யூஎஸ்பி டைப்-சி சார்ஜிங் ஆதரவைக் கொண்டிருக்கிறது. இதில் டுவிஸ்ட் என்னவென்றால் இரண்டு ஸ்மார்ட்போன்களும் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

Most Read Articles
Best Mobiles in India

English summary
iQOO Z6x, iQOO Z6 Launched with 6000mAh Battery, 12GB RAM and More

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X