ரூ.11,499க்கு அறிமுகமான 5G ஸ்மார்ட்போன்: இந்த அம்சம் கொண்ட உலகின் முதல் போன் இதுதான்!

|

iQOO நிறுவனம் பட்ஜெட் விலையில் ஐக்யூ இசட் 6 லைட் 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. 5ஜி ஆதரவுடன் கூடிய இந்த ஸ்மார்ட்போன் ரூ.10,000 விலைப் பிரிவில் அறிமுகமாகி இருக்கிறது.

குவால்காமின் புதிய ஸ்னாப்டிராகன் 4 ஜென் 1 SoC மூலம் இயக்கப்படுகிறது. இந்த சிப்செட் ஆதரவு கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன் இதுவாகும். இந்த ஸ்மார்ட்போன் இந்த வார இறுதியில் இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கிறது.

120Hz டிஸ்ப்ளே, டூயல் ரியர் கேமரா

120Hz டிஸ்ப்ளே, டூயல் ரியர் கேமரா

iQoo Z6 Lite 5G ஸ்மார்ட்போனானது 120Hz டிஸ்ப்ளேவுடன் வெளியாகி இருக்கிறது. ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் டூயல் ரியர் கேமராக்கள் உள்ளது.

5,000mAh பேட்டரி இதில் பொருத்தப்பட்டுள்ளது. ஐக்யூ இன் இந்த பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனில் சார்ஜர் இடம்பெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

iQoo Z6 Lite 5G: விலை

iQoo Z6 Lite 5G: விலை

iQoo Z6 Lite 5G ஸ்மார்ட்போனானது ரூ.13,999 என்ற விலையில் தொடங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் அமேசான் மற்றும் ஐக்யூ இ-ஸ்டோரில் செப்டம்பர் 14 ஆம் தேதி மதியம் 12:15 மணி முதல் விற்பனைக்கு கிடைக்கும்.

இந்த ஸ்மார்ட்போன் ஸ்டெல்லர் க்ரீன் மற்றும் மிஸ்டிக் நைட் வண்ண விருப்பத்தில் கிடைக்கும்.

கூடுதலாக இந்த ஸ்மார்ட்போனை SBI கார்டு மூலம் வாங்குபவர்களுக்கு ரூ.2500 தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

iQOO Z6 Lite 5G: சிறப்பம்சங்கள்

iQOO Z6 Lite 5G: சிறப்பம்சங்கள்

iQoo Z6 Lite 5G சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இதில் குறிப்பிடத்தக்க அம்சமாக இதன் சிப்செட் இருக்கிறது. இதில் Qualcomm இன் சமீபத்திய பட்ஜெட்-மைய 5G SoC பொருத்தப்பட்டுள்ளது.

அதாவது Qualcomm Snapdragon 4 Gen 1 சிப்செட் மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயக்கப்படுகிறது. இந்த விலைப்பிரிவு ஸ்மார்ட்போனில் பொருத்தப்பட்டிருக்கும் சிறந்த சிப்செட் இதுவாகும்.

இந்த ஸ்மார்ட்போனானது 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டெர்னல் ஸ்டோர் ஆதரவு இருக்கிறது.

50MP பிரதான கேமரா

50MP பிரதான கேமரா

iQOO Z6 Lite 5G ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே ஆனது 120Hz ரெஃப்ரஷிங் ரேட் மற்றும் 240Hz டச் மாதிரி விகிதத்தைக் கொண்டிருக்கிறது.

6.58-இன்ச் ஃபுல் HD+ டிஸ்ப்ளே பொருத்தப்பட்டிருக்கிறது. கேமரா அம்சங்களைப் பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போனில் 50MP பிரதான கேமரா மற்றும் 2MP மேக்ரோ ஸ்னாப்பர் என டூயல் ரியர் கேமரா அமைப்பு உள்ளது.

ஸ்மார்ட்போனின் முன்பக்கத்தில் 8MP செல்பி கேமரா ஆதரவு இருக்கிறது.

18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு

18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு

இதில் பெரிய அளவிலான 5,000mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதை சார்ஜ் செய்வதற்கு 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு இருக்கிறது.

ஆனால் ஸ்மார்ட்போனுடன் சார்ஜர் வழங்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. சார்ஜர் தேவைப்படும் பட்சத்தில் ரூ.399 தனியாக செலுத்தி வாங்க வேண்டும்.

ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் ஆதரவு

ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் ஆதரவு

இந்த ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் மூலம் இயக்கப்படுகிறது. அல்ட்ரா கேம் மோட், ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர், ஏஜி மேட் ஃபினிஷ் என பல இணைப்பு ஆதரவுகள் இதில் இருக்கிறது.

சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் 5ஜி ஆதரவுடன் கிடைக்கக்கூடிய மலிவு விலை ஸ்மார்ட்போன் இது. இந்த ஸ்மார்ட்போனின் ஒவ்வொரு அம்சமும் குறிப்பிடத்தக்க வகையில் இருக்கிறது.

ஐக்யூ இசட்6 லைட் 5ஜி விலை

ஐக்யூ இசட்6 லைட் 5ஜி விலை

ஐக்யூ இசட்6 லைட் 5ஜி ஸ்மார்ட்போனின் விற்பனை செப்டம்பர் 14 ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இதன் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் விலை ரூ.13,999 எனவும் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் விலை ரூ.15,499 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

ஸ்மார்ட்போன் சலுகை மற்றும் தள்ளுபடி

ஸ்மார்ட்போன் சலுகை மற்றும் தள்ளுபடி

SBI கார்ட் மூலம் இந்த ஸ்மார்ட்போனை வாங்கும்பட்சத்தில் ரூ.2500 தள்ளுபடி வழங்கப்படுகிறது.

இதன்மூலம் 4 ஜிபி ரேம் ஸ்மார்ட்போனை ரூ.11,499 எனவும் 6 ஜிபி ரேம் ஸ்மார்ட்போனை ரூ.12,999 எனவும் வாங்கலாம்.

அதேபோல் இதனுடன் சார்ஜர் கிடைக்காது, இந்த ஸ்மார்ட்போன் உடன் காம்போவாக சார்ஜர் வாங்கும்பட்சத்தில் ரூ.399 என சார்ஜரை வாங்கலாம்.

Best Mobiles in India

English summary
iQoo Z6 Lite 5G Launched in India at Budget Price: Specs Details

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X