iQOO Z6 Lite தான் இனி பட்ஜெட் விலையில் பக்காவான 5G ஸ்மார்ட்போன்.! ஏன் தெரியுமா?

|

இந்தியாவில் இன்னும் சிலர் iQoo போன்களை ஏதோவொரு புதிய நிறுவனம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில், iQoo என்பது Vivo நிறுவனத்திற்குச் சொந்தமானது என்பது பலருக்கும் தெரியாத விஷயமாக இருக்கிறது. சிறந்த கேமரா, சிறந்த அம்சங்கள் கொண்ட Vivo போன்கள் இந்தியாவில் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது. விவோ என்ற ஒரு பிரபலமான நிறுவனத்தின் எக்ஸ்க்ளூசிவ் ஆன்லைன் துணை பிராண்ட் ஆகும்.

பட்ஜெட் விலையில் iQOO Z6 Lite 5G போன் அறிமுகமா?

பட்ஜெட் விலையில் iQOO Z6 Lite 5G போன் அறிமுகமா?

சரி, இப்போது iQoo இந்தியாவில் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யவிருக்கும் புதிய ஸ்மார்ட்போன் மாடலை பற்றி தெரிந்துகொள்ளலாம் வாங்க. விவோவின் துணை பிராண்ட் ஆனா iQoo இப்போது இந்தியாவில் பட்ஜெட் விலைக்கும் குறைந்த விலையில் புதிய iQOO Z6 Lite 5G என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்யவுள்ளது. இந்த புதிய iQOO Z6 Lite 5G ஸ்மார்ட்போனை நிறுவனம் வரும் செப்டம்பர் 14 ஆம் தேதி அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது.

அமேசான் தளத்தில் பிரத்தியேகமாக அறிமுகம்

அமேசான் தளத்தில் பிரத்தியேகமாக அறிமுகம்

இந்த புதிய iQOO Z6 Lite 5G ஸ்மார்ட்போன் சாதனம் அமேசான் தளத்தில் பிரத்தியேகமாக அறிமுகம் செய்யப்படும் என்றும், அமேசான் தளம் வழியாக முதலில் இந்த சாதனம் விற்பனைக்கு கிடைக்குமென்றும் நிறுவனம் அறிவித்துள்ளது. இது அமேசான் வழியாக அறிமுகம் செய்யப்படுவதனால், அமேசான் தளத்தில் ஒரு மைக்ரோ சைட் இந்த போனின் வெளியீட்டு தேதியை உட்பட, இந்த ஸ்மார்ட்போனின் சில முக்கிய அம்சங்கள் பற்றிய விபரங்களுடன், போனின் வடிவமைப்பையும் வெளிப்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்க Smartphone ஹேக் செய்யப்பட்டதா என்பதை எப்படி கண்டறிவது? உஷாரா இருக்கனும் மக்களே.!உங்க Smartphone ஹேக் செய்யப்பட்டதா என்பதை எப்படி கண்டறிவது? உஷாரா இருக்கனும் மக்களே.!

புதிய iQOO Z6 Lite 5G ஸ்மார்ட்போனில் என்ன எதிர்பார்க்கலாம்?

புதிய iQOO Z6 Lite 5G ஸ்மார்ட்போனில் என்ன எதிர்பார்க்கலாம்?

அமேசான் பட்டியலின் படி, இந்த புதிய iQOO Z6 Lite 5G ஸ்மார்ட்போன் வாட்டர் டிராப் நாட்ச் உடன், போனின் பின்புறத்தில், டூயல் ரியர் கேமரா அமைப்பை கொண்டிருக்கும் என்பதை அமேசான் தகவல் உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், iQOO Z6 Lite 5G குறைந்த விலையில் 120Hz ஆதரிக்கும் டிஸ்பிளேவை கொண்டிருக்கும் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது ஸ்னாப்டிராகன் சிப்செட் மூலம் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய iQOO Z6 Lite 5G ஸ்மார்ட்போனின் சிறப்பம்சம்

புதிய iQOO Z6 Lite 5G ஸ்மார்ட்போனின் சிறப்பம்சம்

இதன் சரியான சிப்செட் விபரம் வரும் செப்டம்பர் 7 ஆம் தேதி வெளியிடப்படும் என்று நிறுவனம் கூறியுள்ளது. சரி, இந்த புதிய iQOO Z6 Lite 5G ஸ்மார்ட்போனில் நாம் என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம் என்பதை இப்போது பார்க்கலாம். iQOO Z6 Lite 5G ஸ்மார்ட்போன் சாதனம் முழு எச்டி+ கொண்ட 6.58' இன்ச் IPS LCD டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும். இது Qualcomm Snapdragon 680 சிப்செட் உடன் எதிர்பார்க்கப்படுகிறது. இது 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் மாடலாக வெளிவரும்.

கேமரா மற்றும் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு எப்படி இருக்கிறது?

கேமரா மற்றும் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு எப்படி இருக்கிறது?

கேமரா அம்சம் பற்றி பேசுகையில், இது 50MP பிரைமரி சென்சார் மற்றும் 2MP சென்சார் கொண்ட டூயல் கேமரா அமைப்புடன் வரும். முன்பக்கத்தில், இது 8MP கேமராவை கொண்டிருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் சாதனம் 44W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரியை பேக் செய்யும். இது ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான Funtouch OS 12 இல் இயங்கும்.

உறங்கும் போது உங்கள் அருகில் Smartphone-ஐ வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா? உஷார் மக்களே!உறங்கும் போது உங்கள் அருகில் Smartphone-ஐ வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா? உஷார் மக்களே!

இந்த ஸ்மார்ட்போன் என்ன விலையில் எதிர்பார்க்கலாம்?

இந்த ஸ்மார்ட்போன் என்ன விலையில் எதிர்பார்க்கலாம்?

இந்த போனின் விலை பற்றிப் பேசுகையில், இது ரூ.15,000க்குள் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போன் இந்தியாவில் ஜூலை மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட Vivo T1x இன் மறுபெயராகும். கூடுதலாக, iQoo Z6 Lite ஆனது Vivo T1x ஐ விட ரூ.500 முதல் ரூ.700 வரை குறைவாக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. Vivo T1x இந்தியாவில் அடிப்படை 4ஜிபி ரேம் + 64ஜிபி வேரியண்ட் மாடலின் விலை ரூ.11,999 ஆகவும், இதன் 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ.14,999 ஆகவும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
iQOO Z6 Lite 5G Budget Smartphone Launching In India On September 14 2022

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X