Home
Mobile

அக்டோபர் 20 உறுதி: தரமான அம்சங்களுடன் வரும் ஐக்யூ இசட் 5எக்ஸ்: எல்லாமே புதுசு!

ஐக்யூ நிறுவனம் சமீபத்தில் ஐக்யூ இசட்5 என்ற புதிய சாதனத்தை அறிமுகம் செய்தது. இந்த சாதனமானது புதிய ஸ்னாப்டிராகன் 778ஜி மூலம் இயங்கும் கேமிங் ஸ்மார்ட்போனாக இருந்தது. விரைவில் கசிவுகள் தகவலின்படி இசட் 5எக்ஸ் எனப்படும் வரிசையில் மற்றொரு மாறுபாட்டை அறிமுகம் செய்ய நிறுவனம் தயாராகி வருவதாக கூறப்படுகிறது. ஐக்யூ இசட்5 எக்ஸ் என்பது 50 எம்பி பிரதான பின்புற கேமராவுடன் மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இது டோன்-டவுன் பதிப்பாகும். சமீபத்தில் நிறுவனம் ஐக்யூ இசட் 5 எக்ஸ்-ன் வருகை குறித்து உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அக்டோபர் 20 ஆம் தேதி ஐக்யூ புது ஸ்மார்ட்போன்

அக்டோபர் 20 ஆம் தேதி ஐக்யூ புது ஸ்மார்ட்போன்

சீன மைக்ரோ பிளாக்கிங் வலைதளமான வெய்போவில் பகிரப்பட்ட பதிவு குறித்து பார்க்கையில், ஐக்யூ அக்டோபர் 20 ஆம் தேதி சீனாவில் இசட் 5 எக்ஸ் அறிமுகப்படுத்துவது உறுதி செய்யப்பட்டுள்ளது. நிறுவனத்தால் பகிரப்பட்ட டீசரின்படி இதன் போஸ்டர் இந்த வெளியீட்டு காலவரிசை வெளிப்படுத்தப்பட்டுள்ளது. டீஸ் செய்யப்பட்ட இசட்5எக்ஸ் சாதனம் ஒற்றை தொனி மேட் டெக்ஸ்சர் நியர் மேற்பரப்பு உடன் வருகிறது. இது ஆரஞ்ச் நிறத்தில் வர்ணம் பூசப்பட்டுள்ளது. இதில் இரண்டு பெரிய சென்சார்கள் மற்றும் எல்இடி ஃபிளாஷ் உடனான செங்குத்து கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.

வாட்டர் டிராப் நாட்ச் மற்றும் பஞ்ச் ஹோல் கட்அவுட் வசதி

வாட்டர் டிராப் நாட்ச் மற்றும் பஞ்ச் ஹோல் கட்அவுட் வசதி

முன்புற பேனலின் காட்சியில் அனைத்து மூலைகளிலும் மெல்லிய முனைகளுடன் வருகிறது. செல்பி கேமராவுக்கு வாட்டர் டிராப் நாட்ச் அல்லது பஞ்ச் ஹோல் கட்அவுட் வசதி இருக்கிறதா என்பதை டீச் படம் உறுதிப்படுத்தவில்லை. இந்த டீசரின் புகைப்படங்களில் எந்த வன்பொருள் விவரங்களையும் வெளியிடவில்லை. ஸ்மார்ட்போன் முன்னதாகவே பல மொபைல் ஆத்தண்டிகேஷன் மற்றும் பெஞ்ச்மார்க் வலைதளங்களின் மூலம் பல முக்கிய அம்சங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

ஐக்யூ இசட் 5 எக்ஸ்: எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்

ஐக்யூ இசட் 5 எக்ஸ்: எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்

இந்த ஸ்மார்ட்போன் கூகுள் ப்ளே கன்சோல், கீக்பெஞ்ச், 3சி மற்றும் டெனா உள்ளிட்ட பல தளங்களில் ஆன்லைனில் காணப்படுகிறது. ஸ்மார்ட்போன் ஆனது 163.95 x 75. X 8.5 டைமன்ஷன் மற்றும் 169 கிராம் எடையுள்ளதாக இருக்கிறது. அதேபோல் ஐக்யூ இசட் 5 எக்ஸ் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் சிப்செட் போல் இன்றி டைமன்சிட்டி 900 செயலி மூலம் இயக்கப்படும் என கூறப்படுகிறது.

5ஜி மூலம் இயக்கப்படும் ஸ்மார்ட்போன்

5ஜி மூலம் இயக்கப்படும் ஸ்மார்ட்போன்

ஐக்யூ இசட் 5 எக்ஸ் ஆனது 5ஜி மூலம் இயக்கப்படும் ஸ்மார்ட்போனாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 6 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி ரேம் விருப்பத்தோடு வரும் என கூறப்படுகிறது. இது இரட்டை சேமிப்பு விருப்பத்தில் வரும் எனவும் 128 ஜிபி உள்சேமிப்பு மற்றும் 256 ஜிபி சேமிப்பாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. ஐக்யூ இசட்5எக்ஸ் தரமான இசட்5 போன்ற எல்சிடி பேனலுக்கு பதிலாக டிஎஃப்டி திரையை பயன்படுத்துவதாகக் கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 6.58 இன்ச் அளவு டிஸ்ப்ளே உடன் வரும் எனவும் 1080 பிக்சல் தீர்மானத்தோடு வரும் எனவும் கூறப்படுகிறது.

50 மெகாபிக்சல் பிரதான கேமரா

50 மெகாபிக்சல் பிரதான கேமரா

ஐக்யூ இசட் 5எக்ஸ் இமேஜிங் அமைப்பு குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 50 மெகாபிக்சல் பிரதான கேமரா, 2 மெகாபிக்சல் ஆழ சென்சார் உள்ளிட்ட இரட்டை சென்சார்கள் உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 44 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தோடு வருகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 4800 எம்ஏஎச் பேட்டரி உடன் வரும் என கூறப்படுகிறது.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி எஸ்ஓசி சிப்செட்

குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி எஸ்ஓசி சிப்செட்

ஐக்யூ இசட்5 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி எஸ்ஓசி மூலம் இயக்கப்படும் எனவும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத டிஸ்ப்ளே உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது மூன்று பின்புற கேமரா அமைப்புடன் வருகிறது. இந்த சாதனம் 44 வாட்ஸ் ஃப்ளாஷ் சார்ஜிங் ஆதரவுடன் 5000 எம்ஏஎச் பேட்டரியோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது இரண்டு சேமிப்பு வகைகளில் வருகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
IQOO Z5x Smartphone Set to Launch on October 20: Expected Specs
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X