Home
Mobile

உயர்தர அம்சம், சரியான விலை: விரைவில் வர இருக்கும் ஐக்யூ இசட்5!

விவோவின் துணை பிராண்டாக ஐக்யூ இருக்கிறது. ஐக்யூ தற்போது புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த உள்ளது. அது ஐக்யூ இசட் 5 சாதனமாகும், இந்த ஸ்மார்ட்போன் 5ஜி ஆதரவோடு வரும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது செப்டம்பர் மாதம் வெளியாகும் என தெரிவிக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கான டீசர் அமேசான் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. இது அமேசான் மூலம் மட்டுமே கிடைக்கும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் இதன் முக்கிய அம்சங்கள் வெளியாகியுள்ளன. ஐக்யூ இசட்5 இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்யப்பட்டு அமேசானில் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்யூ இசட்5 ஸ்மார்ட்போன்

ஐக்யூ இசட்5 ஸ்மார்ட்போன்

இந்தியாவில் ஐக்யூ இசட்5 ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் செப்டம்பர் 23 ஆம் தேதி சீன சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் என சீன பிராண்ட் தெளிவுப்படுத்தியுள்ளது. இதே நேரத்தில் இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐக்யூ இசட் 5 ஸ்மார்ட்போனின் அடிப்படை மாடல் விலை ரூ.30,000-த்துக்கு குறைவாக இருக்கும் என கூறப்படுகறது. இருப்பினும் விலை குறித்த அறிவிப்பு எதுவும் நிறுவனம் தரப்பில் இல்லை.

ஐக்யூ இசட்5 அம்சங்கள்

ஐக்யூ இசட்5 அம்சங்கள்

ஐக்யூ இசட் 5 ஸ்மார்ட்போன் சிறந்த அம்சங்களுடன் வெளியிடப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஸ்மார்ட்போனானது 240 ஹெர்ட்ஸ் டச் மாதிரி டிஸ்ப்ளே ஆதரவோடு வரும் எனவும் எச்டிஆர் 10 சப்போர்ட் உடன் இருக்கும் எனவும் கூறப்படுகிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் ஆனது 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத காட்சியோடு வரும் எனவும் கூறப்படுகிறது. ஐக்யூ இசட்5 ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே, ஓஎல்இடி டிஸ்ப்ளே உடன் வரும் எனவும் கூறப்படுகிறது.

ஐக்யூ இசட்5 வெளியீட்டு தேதி

ஐக்யூ இசட்5 வெளியீட்டு தேதி

ஐக்யூ இசட்5 வெளியீட்டு தேதி சீனாவில் அறிவிக்கப்பட்டுள்ளதால், சீன சமூக வலைதளங்களில் பல டீசர்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த டீசரின்படி, ஐக்யூ இசட்5 ஸ்மார்ட்போன் ஆனது பஞ்ச் ஹோல் டிஸ்ப்ளேவுடன் வரும் எனவும் இதன் காட்சிக்கு கீழே உளிச்சாயுமோரம் வசதியும் உள்ளது. இது 2.5டி டெம்பர்டு கிளாஸ் உடன் வருகிறது. இது கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பை பெறலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த சாதனத்தின் மிகப்பெரிய அம்சம் இதன் காட்சிதான். இதை கேமிங் மற்றும் ஸ்ட்ரீமிங் என இரண்டுக்கும் சிறந்த காட்சி அனுபவத்தை அளிக்கும் என கூறப்படுகிறது.

8 ஜிபி ரேம், 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு

8 ஜிபி ரேம், 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு

ஐக்யூ இசட் 5 சாதனமானது சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஸ்னாப்டிராகன் 778 எஸ்ஓசி மூலம் இயக்கப்படும் எனவும் இந்த ஸ்மார்ட்போன் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வரும் எனவும் கூறப்படுகிறது. அதேபோல் சில தகவலின்படி இந்த ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம், 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வரும் எனவும் சில தகவல்கள் கூறுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் வயர்லெஸ் சார்ஜர் மற்றும் உயர் ரெஸ் ஆடியோ ஆதரவுடன் கூடிய ஸ்டீரியோ ஸ்பீக்கர்களை கொண்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது.

5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவு

5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவு

ஐக்யூ இசட் 5 ஸ்மார்ட்போனானது யூஎஸ்பி டைப் சி போர்ட் ஆதரவுடன் வரும் எனவும் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது 5000 எம்ஏஎச் பேட்டரியுடன் வரும் எனவும் உறுதி தகவலாக இருக்கிறது. ஐக்யூ இசட் 3 ஸ்மார்ட்போனை போலவே இது வேகமான சார்ஜிங் ஆதரவை கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு இருக்காது எனவும் கூறப்படுகிறது.இவை அனைத்தும் வெளியான தகவலின்படியே தெரிவிக்கப்பட்டது என்றாலும் விரைவில் ஐக்யூ நிறுவனத்திடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Iqoo Z5 Might Launching Soon in India With These Specification
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X