5000 எம்ஏஎச் பேட்டரி, 12ஜிபி ரேம் உடன் ஐக்யூ இசட்5 5ஜி: குறைந்த விலை ஸ்மார்ட்போனின் விற்பனை தேதி இதோ!

|

ஐக்யூ இசட்5 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நிறுவனம் சாதனத்தை சீன சந்தையில் அறிமுகப்படுத்தியது. இந்த ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி எஸ்ஓசி மூலம் இயக்கப்படும் எனவும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத டிஸ்ப்ளே உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது மூன்று பின்புற கேமரா அமைப்புடன் வருகிறது. இந்த சாதனம் 44 வாட்ஸ் ஃப்ளாஷ் சார்ஜிங் ஆதரவுடன் 5000 எம்ஏஎச் பேட்டரியோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது இரண்டு சேமிப்பு வகைகளில் வருகிறது.

இரண்டு சேமிப்பு வேரியண்ட்கள்

இரண்டு சேமிப்பு வேரியண்ட்கள்

ஐக்யூ இசட் 5 ஸ்மார்ட்போனானது இரண்டு சேமிப்பு வகைகளில் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் அக்டோபர் 3 முதல் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்படுகிறது. இந்த முழு விலை மற்றும் அம்சங்கள் குறித்து பார்க்கலாம். ஐக்யூ இசட் 5 ஸ்மார்ட்போனானது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. மேலும் இது 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது.

8 ஜிபி ரேம் மற்றும் 12 ஜிபி ரேம்

8 ஜிபி ரேம் மற்றும் 12 ஜிபி ரேம்

இதன் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.23,990 எனவும் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.26,990 ஆகவும் இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆர்க்டிக் டான் மற்றும் மிஸ்டிக் ஸ்பேஸ் வண்ண விருப்பத்தோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது அக்டோபர் 3 முதல் ஐக்யூ.காம் மற்றும் அமேசான்.காம் மூலம் விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது. எச்டிஎஃப்சி வங்கி டெபிட், இஎம்ஐ பரிவர்த்தனைகள் மற்றும் கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கு ரூ.1500 தள்ளுபடி கிடைக்கும் என தெரிவிக்கப்படுகிறது. ரூ.1500 அமேசான் கூப்பன் தள்ளுபடிகள், ஆறு மாத திரை எக்ஸ்சேஞ்ச் மற்றும் 9 மாதம் வரை நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பங்களோடு வருகிறது.

ஐக்யூ இசட் 5 அம்சங்கள்

ஐக்யூ இசட் 5 அம்சங்கள்

ஐக்யூ இசட் 5 அம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போன் ஆனது 6.67 இன்ச் முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே உடன் வருகிறது. 1,080x2,400 பிக்சல்கள் தீர்மானத்துடன் எல்சிடி டிஸ்ப்ளே ஆதரவோடு வருகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத காட்சி மற்றும் 240 ஹெர்ட்ஸ் டச் மாதிரி விகிதத்துடன் வருகிறது. டிசிஐ-பி3 வண்ண வரம்பு மற்றும் எச்டிஆர் 10 ஆதரவு கொண்ட டிஸ்ப்ளே உடன் வருகிறது. 12 ஜிபி எல்பிடிடிஆர் 5 ரேம் உடன் வருகிறது.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 778 ஜி எஸ்ஓசி

குவால்காம் ஸ்னாப்டிராகன் 778 ஜி எஸ்ஓசி

இந்த ஸ்மார்ட்போனானது குவால்காம் ஸ்னாப்டிராகன் 778 ஜி எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 256 ஜிபி உள்சேமிப்பு ஆதரவோடு வருகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான ஆரிஜின் ஓஎஸ் 1.0 மூலம் இயங்குகிறது. இரட்டை சிம் கார்டு ஸ்லாட் ஆதரவோடு வருகிறது. இது இரட்டை சிம் கார்டு ஸ்லாட் ஆதரவோடு வருகிறது.

64 மெகாபிக்சல் முதன்மை கேமரா

64 மெகாபிக்சல் முதன்மை கேமரா

ஐக்யூ இசட்5 ஸ்மார்ட்போனானது 64 மெகாபிக்சல் முதன்மை கேமரா உடன் மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது 8 மெகாபிக்சல் அல்டா வைட் ஆங்கிள் சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் உடன் வருகிறது. இதன் கேமரா அமைப்பில் இரட்டை பார்வை வீடியோ, சூப்பர் நைட் மோட் மற்றும் போர்ட்ரெய்ட் மோட் வசதியோடு வருகிறது. மேலும் செல்பி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு முன்புறத்தில் 16 மெகாபிக்சல் சென்சார் கேமரா இதில் பொருத்தப்பட்டுள்ளது.

5000 எம்ஏஎச் பேட்டரி

5000 எம்ஏஎச் பேட்டரி

மேலும் ஐக்யூ இசட்5 ஸ்மார்ட்போனில் 44 வாட்ஸ் ஃப்ளாஷ் சார்ஜிங் ஆதரவு மற்றும் வேகமான சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 5000 எம்ஏஎச் பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. ஐக்யூ இசட்5 ஸ்மார்ட்போனில் பாதுகாப்பு அம்சத்துக்கு கைரேகை ஸ்கேனர் மற்றும் ஃபேஸ்வேக் முக அங்கீகார ஆதரவோடு வருகிறது. இணைப்பு விருப்பங்களாக யூஎஸ்பி டைப்சி போர்ட், ப்ளூடூத் வி5.2, ஜிபிஎஸ் உள்ளிட்ட வசதியோடு வருகிறது.

திரவ குளிரூட்டும் அம்சம்

திரவ குளிரூட்டும் அம்சம்

விவோவின் துணை பிராண்டின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த புதிய ஸ்மார்ட்போன் எடை 193 கிராம் ஆக இருக்கிறது. இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால் நீண்ட நேரம் கேமிங் விளையாடும் போது அதன் வெப்பத்தை குறைக்க திரவ குளிரூட்டும் அம்சம் இருக்கிறது. மேலும் இது 4ஜி கேம் வைப்ரேஷன், அல்ட்ரா கேம் மோட் 2.0 மற்றும் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களுடன் வருகிறது.

Best Mobiles in India

English summary
IQOO Z5 Launched in India With 12GB RAM, Snapdragon 778G 5G: Sale Date, Price, Specs

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X