8ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 11 உடன் வெளியாகுமா IQOO Z3: சிறப்பம்சங்கள் குறித்த தகவல்!

|

ஐக்யூ இசட் 3 ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 11 ஆதரவுடன் 1080x2408 பிக்சல் தெளிவுத்திறனை கொண்டு வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் எதிர்பார்க்கப்படும் கூடுதல் அம்சங்களை பார்க்கலாம்.

8ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 11 உடன் வெளியாகுமா IQOO Z3: சிறப்பம்சங்கள்!

ஐக்யூ நிறுவனம் சீனாவில் ஐக்யூ இசட் 3 ஸ்மார்ட்போனை மார்ச் 25 ஆம் தேதி 5ஜி இணைப்புடன் அறிமுகப்படுத்த உள்ளது. தற்போது ஐக்யூ இசட்3 ஸ்மார்ட்போன் கீக்பெஞ்ச் தரப்படுத்தல் தளத்தில் காணப்படுகிறது. ஐக்யூ இசட் 3 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கலாம். ஐக்யூ இசட்3 ஸ்மார்ட்போனானது மாடல் எண் வி2073ஏ என்ற பட்டியல் எண் உடன் கீக்பெஞ்சில் காணப்படுகிறது.

ஐக்யூ இசட்3 ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 765ஜி எஸ்ஓசி மற்றும் அட்ரினோ 620 ஜிபியூ உடன் காணப்படுகிறது. இந்த சிப்செட் 8ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் பிற வேரியண்ட்களிலும் இணைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐக்யூ இசட்3 ஸ்மார்ட்போனின் மென்பொருள் அனுபவம் குறித்து பார்க்கையில், இது ஆண்ட்ராய்டு 11 இயக்க முறை அனுபவத்தை வழங்குகிறது. இந்த ஸ்மார்ட்போனானது மாடல் எண் V2073A உடன் கூகுள் ப்ளே கன்சோலிலும் காணப்படுகிறது. ஐக்யூ இசட் 3 ஸ்மார்ட்போனானது 1080x2408 பிக்சல் தெளிவுத்திறன் உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 55 வாட்ஸ் வேகமான ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் ஸ்னாப்டிராகன் 765ஜி எஸ்ஓசி மூலம் இயக்கப்படும் என கூறப்படுகிறது.

8ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 11 உடன் வெளியாகுமா IQOO Z3: சிறப்பம்சங்கள்!

ஐக்யூ இசட் 3 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகள் குறித்து இன்னும் தகவல் வெளியாகவில்லை. இந்த நிலையில் நிறுவனம் சமீபத்தில் புதிய ஐக்யூ யூ3எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக ஸ்னாப்டிராகன் 480 சிப்செட், டூயல் ரியர் கேமராக்கள், 5000 எம்ஏஎச் பேட்டரி என பல்வேறு ஆதரவுகளுடன் இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. விரைவில் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது ஐக்யூ யூ3எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் பல்வேறு அம்சங்களைப் பார்ப்போம்.

ஐக்யூ யூ3எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் 6.58-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1080 x 2408 பிக்சல் தீர்மானம், 20:07:9 என்ற திரைவிகிதம், 90Hz refresh rate மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

8ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 11 உடன் வெளியாகுமா IQOO Z3: சிறப்பம்சங்கள்!

ஐக்யூ யூ3எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் இரண்டு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பின்பு வீடியோ கால் அழைப்பு வசதிக்கு என்றே 8எம்பி செல்பீ கேமரா ஆதரவு இவற்றுள் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்மார்ட்போனில் 4ஜிபி/6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. அதாவது மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் வழங்கப்படும். 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ஐக்யூ யூ3எக்ஸ் 5ஜி விலை ரூ.13,350-ஆக உள்ளது. 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஐக்யூ யூ3எக்ஸ் 5ஜி விலை ரூ.13,350-ஆக உள்ளது. 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஐக்யூ யூ3எக்ஸ் 5ஜி விலை ரூ.16,700-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
IQOO Z3 May Launching With 8GB RAM, Android 11: Expected Specification

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X