iQOO Z3 போனின் ரேம், ஸ்டோரேஜ் மற்றும் சிறப்பம்ச விபரங்கள்.. நல்ல போனா இருக்கும் போலயே..

|

IQOO நிறுவனம் Z3 அதன் iQOO Z3 ஸ்மார்ட்போன் மாடலை இரண்டு மாதங்களுக்கு முன்பு சீனாவில் அறிமுகம் செய்திருந்து. அதனைத் தொடர்ந்து தற்பொழுது இந்த புதிய iQOO Z3 ஸ்மார்ட்போன் மாடலை வரும் ஜூன் 8 ஆம் தேதி இந்தியாவில் வெளியிட நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து அறிமுகத்திற்கு முன்னதாக இந்த ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்களைப் பற்றி புதிய கசிவு வெளியாகியுள்ளது. இதில் iQOO Z3 ரேம், சேமிப்பு மற்றும் வண்ண மாறுபாட்டு விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய சந்தைக்கான iQOO Z3 விபரம்

இந்திய சந்தைக்கான iQOO Z3 விபரம்

டிவிட்டரில் adGadgetsdata மூலம் செல்லும் டிப்ஸ்டர் டெபயன் ராய், iQOO Z3 இந்தியன் வேரியண்ட்டில் ஒரு ட்வீட்டை வெளியிட்டுள்ளார். IQOO Z3 இந்தியாவில் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் என இரண்டு வேரியண்ட்களில் வெளிவரும் என்று அவர் கூறியுள்ளார். IQOO பின்னர் மலிவான 6 ஜிபி + 128 ஜிபி மாறுபாட்டை அறிமுகப்படுத்தக்கூடும் என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார். கசிவின் படி, iQOO Z3 போன் நெபுலா மற்றும் ஏஸ் பிளாக் ஆகிய இரண்டு வண்ண வகைகளில் வெளியாகும்.

iQOO Z3 விவரக்குறிப்புகள்

iQOO Z3 விவரக்குறிப்புகள்

IQOO Z3 இன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 768G சிப்செட் உடன் அறிமுகம் செய்யப்படும் என்று iQOO இந்தியாவின் டீஸர்கள் வெளிப்படுத்துகின்றன, இது இந்திய சந்தையில் இந்த சிப்செட்டை வைத்து வெளியாகும் முதல் ஸ்மார்ட்போன் சாதனம் ஆகும். இந்த சாதனம் பின்புறத்தில் 64 எம்.பி முதன்மை கேமராவை 4K அம்சத்துடன் 60 எஃப்.பி.எஸ் வீடியோ பதிவு செய்யும் அம்சத்துடன் கொண்டுவருகிறது. IQOO Z3 55W சார்ஜிங் வேகத்தைக் கொண்டிருக்கும் என்பதையும் டீஸர்கள் காட்டுகின்றது.

300 அடிக்கு மேல் வளர்ந்து வரும் பூமியின் திடீர் பள்ளம்.. இது சாதாரணம் இல்லை என்று எச்சரிக்கை; ஏன் தெரியுமா?300 அடிக்கு மேல் வளர்ந்து வரும் பூமியின் திடீர் பள்ளம்.. இது சாதாரணம் இல்லை என்று எச்சரிக்கை; ஏன் தெரியுமா?

ட்ரிபிள் கேமரா அமைப்பு விபரம்

ட்ரிபிள் கேமரா அமைப்பு விபரம்

இருப்பினும் நமக்குத் தெரிந்து தகவலை வைத்து பார்க்கையில், iQOO Z3 ஸ்மார்ட்போன் 6.58 இன்ச் கொண்ட டிஸ்பிளேவுடன் வெளிவர வாய்ப்புள்ளது. முன்பே சொன்னது போல் இந்த ஸ்மார்ட்போன் சாதனம் குவால்காம் ஸ்னாப்டிராகன் 768G சிப்செட் உடன் அறிமுகமாகும். இந்த iQOO Z3 ஸ்மார்ட்போன் 64 எம்பி + 8 எம்பி + 2 எம்பி கொண்ட ட்ரிபிள் கேமரா அமைப்பை கொண்டிருக்கும். இதில் 16 எம்பி செல்பி கேமராவும் வழங்கப்பட்டிருக்கும். அதேபோல், இந்த சாதனம் 19 நிமிடத்தில் 50% சார்ஜ் செய்யும் 55W பாஸ்ட் சார்ஜிங் அம்சத்துடன் 4400 எம்ஏஎச் பேட்டரியை கொண்டு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

iQOO Z3 5ஜி விலை என்ன இருக்கும்?

iQOO Z3 5ஜி விலை என்ன இருக்கும்?

அதேபோல் சீனாவில் ஐக்யூ இசட்3 5ஜி-க்கான விலை குறித்து பார்க்கையில் இதன் 6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்புக்கான இந்திய விலை தோராயமாக ரூ.18,805 ஆக இருக்கிறது. அதேபோல் டாப் எண்ட் வேரியண்ட் ஆன 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு விலை இந்திய மதிப்புப்படி தோராயமாக ரூ.22,130 ஆக இருக்கிறது. அமேசான் இந்தியாவில் iQOO Z3 பட்டியலிட்டுள்ளது, இது தொலைபேசி இ-காமர்ஸ் தளத்திலிருந்து விற்பனைக்கு வரும் என்பதை உறுதிப்படுத்துகிறது.

Best Mobiles in India

Read more about:
English summary
iQOO Z3 Indian variant RAM, storage, and colour details leaked ahead of official launch : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X