பட்ஜெட் விலையில் இந்தியாவில் களமிறங்கும் iQOO Z3 5ஜி ஸ்மார்ட்போன்.. என்ன ஸ்பெஷலா இருக்கு இதில்?

|

iQOO Z3 5G விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், நிறுவனம் இதுவரை வரவிருக்கும் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்துவது குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. இப்போது அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னதாக, iQOO Z3 5ஜி ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது. அதுபற்றிய விரிவான தகவலை இப்போது பார்க்கலாம்.

iQOO Z3 5ஜி ஸ்மார்ட்போன்

iQOO Z3 5ஜி ஸ்மார்ட்போன்

iQOO Z3 5ஜி ஸ்மார்ட்போன் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் சுமார் ரூ. 25,000 என்ற ஆரம்ப விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று சமீபத்திய ஒரு அறிக்கை தகவல் தெரிவித்துள்ளது. மேலும் வெளியிடப்பட்டுள்ள தகவலின் படி, ஜூன் 10 முதல் ஜூன் 15 ஆம் தேதிக்குள் இந்தியாவில் இந்த புதிய சாதனத்தை அறிமுகப்படுத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சரியான வெளியீட்டுத் தேதியை நிறுவனம் இன்னும் முடிவு செய்யவில்லை என்று மனிகண்ட்ரோல் வலைப்பக்கம் தெரிவித்துள்ளது.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 768 ஜி சிப்செட்

குவால்காம் ஸ்னாப்டிராகன் 768 ஜி சிப்செட்

iQOO Z3 5ஜி ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 768 ஜி சிப்செட் உடன் வரும் இந்தியாவின் முதல் ஸ்மார்ட்போன் என்பது குறிப்பிடத்தக்கது. இது இந்தியாவில் அமேசான் பிரத்தியேகமாக இருக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. iQOO ஏற்கனவே இந்த சாதனத்தைச் சீனாவில் அறிமுகப்படுத்தியுள்ளது என்பதும் கவனத்திற்கு. சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட iQOO Z3 5ஜி ஸ்மார்ட்போனின் சிறப்பம்ச தகவல்கள் அப்படியே இந்தியச் சந்தையிலும் பின்பற்றப்படும் என்று நம்பப்படுகிறது.

இது செவ்வாய் கிரகம் இல்லை.. நம்முடைய பூமி தான்.! ஆச்சரியத்தில் ஆழ்த்தும் இந்த இடம் எங்கிருக்கிறது தெரியுமா?இது செவ்வாய் கிரகம் இல்லை.. நம்முடைய பூமி தான்.! ஆச்சரியத்தில் ஆழ்த்தும் இந்த இடம் எங்கிருக்கிறது தெரியுமா?

iQOO Z3 5G சிறப்பம்ச தகவல்கள்

iQOO Z3 5G சிறப்பம்ச தகவல்கள்


iQOO Z3 5G ஸ்மார்ட்போன் 6.58 இன்ச் கொண்ட FHD பிளஸ் LCD உடன் 1080 x 2408 தெளிவுத்திறனுடன் கூடிய 20: 9 விகிதம், 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம், 180 ஹெர்ட்ஸ் டச் சாம்பிளிங் விகிதம் மற்றும் எச்டிஆர் 10 பிளஸ் போன்ற மிரட்டலான ஆதரவைக் கொண்ட டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 768 ஜி சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. ஆனால், இதில் எஸ்டி கார்டு ஸ்லாட் ஸ்டோரேஜ்ஜிற்கு இடமில்லை.

கேமரா மற்றும் பேட்டரி விபரம்

கேமரா மற்றும் பேட்டரி விபரம்

கேமராவை பொறுத்தவரையில், இது 64 மெகாபிக்சல் பிரைமரி சென்சார், 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் உடன் கூடிய டிரிபிள் கேமரா அமைப்புடன் வருகிறது. முன்பக்கத்தில், இது 16 மெகாபிக்சல் சென்சாரை வாட்டர் ட்ராப் நாட்ச் உடன் கொண்டுள்ளது. இது Android 11 ஐ அடிப்படையாகக் கொண்ட iQOO UI 1.0 ஐ இயக்குகிறது. மேலும், இது 4400mAh பேட்டரியுடன் 55W பாஸ்ட் சார்ஜிங்குடன் வருகிறது.

இதுதான் பூமியின் அதிசயம்: 1.6 பில்லியன் ஆண்டு பழமையான நீர் கண்டுபிடிப்பு.! செவ்வாய் ரகசியங்களை கட்டவிழ்க்குமா?இதுதான் பூமியின் அதிசயம்: 1.6 பில்லியன் ஆண்டு பழமையான நீர் கண்டுபிடிப்பு.! செவ்வாய் ரகசியங்களை கட்டவிழ்க்குமா?

இணைப்பு விருப்பம்

இணைப்பு விருப்பம்

இது பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் மற்றும் முக அங்கீகார ஆதரவை கொண்டுள்ளது. இணைப்பு முன்னணியில், இந்த புதிய iQOO Z3 5G ஸ்மார்ட்போன் 5 ஜி எஸ்ஏ / என்எஸ்ஏ, டூயல் 4 ஜி வோல்டிஇ, வைஃபை 802.11 ஏசி (2.4 ஜிகாஹெர்ட்ஸ் + 5 ஜிஹெர்ட்ஸ்), புளூடூத் 5.1, ஜிபிஎஸ் / க்ளோனாஸ், யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் ஆகியவற்றை ஆதரிக்கிறது. இந்திய சந்தையில் iQOO நல்ல முன்னேற்றத்தைக் கண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
iQOO Z3 5G will be the first smartphone in India to come with a Qualcomm Snapdragon 768G chipset : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X