இது சரியான வாய்ப்பு- அமேசானில் அதிரடி விலையில் iQOO Z3 5G ஸ்மார்ட்போன்!

|

ஐக்யூ நிறுவனத்தின் இடைநிலை ஸ்மார்ட்போனாக iQOO Z3 5G ஸ்மார்ட்போன் இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் மூன்று வேரியண்ட் விருப்பங்களில் வருகிறது. தற்போது இந்த ஸ்மார்ட்போனை கவர்ச்சிகரமான விலையில் வாங்கலாம். அமேசான் இந்தியா தளத்தில் ஸ்மார்ட்போன் மேம்படுத்தல் தின விற்பனையை அறிவித்துள்ளது.

இது சரியான வாய்ப்பு- அமேசானில் அதிரடி விலையில் iQOO Z3 5G ஸ்மார்ட்போன்

இந்த சலுகையில் ஸ்மார்ட்போனை குறைந்த விலையில் பெறலாம். ஐக்யூ இசட்3 5ஜி ஸ்மார்ட்போன் விலை ரூ.19,990 ஆக இருந்தது. தற்போது இந்த ஸ்மார்ட்போன் கவர்ச்சிகரமான விலையாக ரூ.18490 ஆக அமேசான் இந்தியா ஸ்மார்ட்போன் அப்க்ரேட் தின விற்பனையில் கிடைக்கிறது.

அமேசான் இந்தியா ஸ்மார்ட்போன் மேம்படுத்தல் தின விற்பனையில் பல்வேறு ப்ரீமியம் ரக ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கிடைக்கும் ஐக்யூ இசட் 3 5ஜி ஸ்மார்ட்போன் விலை மற்றும் அம்சங்கள் குறித்து பார்க்கலாம். ஐக்யூ ஸ்மார்ட்போனின் இடை நிலை ஸ்மார்ட்போனாக இது இருக்கிறது.

iQOO Z3 5G விலை

iQOO Z3 5G விலை குறித்து பார்க்கையில், அமேசான் தள அறிவிப்பில் இந்த ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.20,990 ஆகவும் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.22990 ஆக இருக்கிறது.

இது சரியான வாய்ப்பு- அமேசானில் அதிரடி விலையில் iQOO Z3 5G ஸ்மார்ட்போன்

மேலும் இந்த ஸ்மார்ட்போன் விலை குறித்து பார்க்கையில் எஸ்பிஐ கிரெடிட் கார்ட் மூலம் இரண்டு வேரியண்ட் ஸ்மார்ட்போனுக்கும் ரூ.1500 உடனடி தள்ளுபடி கிடைக்கிறது. அதேபோல் ரூ.2000 கூடுதல் பரிமாற்ற சலுகையாக இருக்கிறது. ஐக்யூ இசட் 3 5ஜி ஸ்மார்ட்போன் இரண்டு வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது. அது ஏஸ் பிளாக் மற்றும் சைபர் ப்ளூ வண்ணமாகும்.

ஐக்யூ இசட்3 5ஜி அம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போன் 6.58 இன்ச் முழு எச்டி ப்ளஸ் எல்சிடி டிஸ்ப்ளே 2400 × 1080 பிக்சல்கள் தீர்மானத்தோடு வருகிறது. மேலும் இது 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் வருகிறது. அட்ரினோ 620 ஜிபீயூ, 4 எக்ஸ் ரேம் உடன் வருகிறது. மேலும் 1டிபி வரை மெமரி விரிவாக்கக்கூடிய மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் வசதி இருக்கிறது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 768ஜி எஸ்ஓசி வசதியும் இந்த ஸ்மார்ட்போனில் இருக்கிறது. கூடுதலாக இந்த ஸ்மார்ட்போனில் திரவ குளிரூட்டும் வசதி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான ஓஎஸ் மூலம் இயக்கப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 4400 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதை சார்ஜ் செய்ய 55 வாட்ஸ் வேகமான சார்ஜிங் ஆதரவு இருக்கிறது.

ஐக்யூ இசட் 3 ஸ்மார்ட்போனில் 64 எம்பி முதன்மை கேமரா பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இதில் 8 எம்பி அல்ட்ரா வைட் லென்ஸ் மற்றும் 2 எம்பி ஆழ சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. இதில் மொத்தம் மூன்று பின்புற கேமரா இருக்கிறது. முன்புறத்தில் 16 எம்பி செல்பி கேமரா வசதி இருக்கிறது. பாதுகாப்பு அம்சத்திற்கு இதில் பக்கவாட்டில் கைரேகை சென்சார் இருக்கிறது.

இதில் மொத்தம் ஐந்து அடுக்கு திரவ குளிரூட்டும் வசதி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனை 19 நிமிடங்களில் 50% சார்ஜ் செய்யலாம். மேலும் இதில் வேகமான சார்ஜ் செய்யும் ஆதரவு, 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே வசதி இருக்கிறது. எது எல்சிடி காட்சி ஆதரவோடு வருகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Iqoo Z3 5G Smartphone Now Available on Amazon at Rs.18,490: Is Worth to Buy

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X