இந்த வருடத்தில் இது மூன்றாவது- ஜூன் 8 அறிமுகமாகும் ஐக்யூ இந்த ஸ்மார்ட்போன்!

|

ஐக்யூ இந்தியாவில் ஐக்யூ இசட்3 ஜூன் 8 ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு அறிமுகம் செய்யப்போவதாக அறிமுகம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது. இந்தியாவில் ஐக்யூ 3 வெளியீட்டு தேதியை ஐக்யூ அறிவித்துள்ளது. இது தற்போது இந்தியாவில் ஜூன் 8 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஐக்யூ பிராண்டின் இந்தாண்டு இந்தியாவில் அறிமுகம் செய்யும் மூன்றாவது ஸ்மார்ட்போன் இதுவாகும். ஸ்மார்ட்போன் பிரத்யேமாக அமேசானில் கிடைக்கும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஸ்னாப்டிராகன் 768ஜி செயலியுடன் அறிமுகம்

ஸ்னாப்டிராகன் 768ஜி செயலியுடன் அறிமுகம்

ஸ்னாப்டிராகன் 768ஜி செயலியுடன் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் ஸ்மார்ட்போன் ஐக்யூ இசட் 3 முதல் ஸ்மார்ட்போன் இதுவாகும் என்பதை நிறுவனம் உறுதிப்படுத்தியது. இந்த ஸ்மார்ட்போன் குறித்து வெளியான தகவலின்படி இதன்விலை ரூ.25,000 ஆக இருக்கும் என தகவல்கள் சுட்டிக்காட்டியுள்ளது. இந்தாண்டின் தொடக்கத்தில் ஸ்மார்ட்போன் முன்னதாகவே சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டதால் சாதனத்தின் விவரக்குறிப்புகள் இந்திய மாறுபாட்டிற்கு ஒத்ததாக இருக்கும் என கூறப்படுகிறது.

ஐக்யூ இசட்3 5ஜி

ஐக்யூ இசட்3 5ஜி

அதேபோல் சீனாவில் ஐக்யூ இசட்3 5ஜி-க்கான விலை குறித்து பார்க்கையில் இதன் 6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்புக்கான இந்திய விலை தோராயமாக ரூ.18,805 ஆக இருக்கிறது. அதேபோல் டாப் எண்ட் வேரியண்ட் ஆன 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு விலை இந்திய மதிப்புப்படி தோராயமாக ரூ.22,130 ஆக இருக்கிறது.

ஐக்யூ இசட்3 5ஜி விவரக்குறிப்புகள்

ஐக்யூ இசட்3 5ஜி விவரக்குறிப்புகள்

ஐக்யூ இசட்3 5ஜி விவரக்குறிப்புகள் குறித்து பார்க்கையில், இது 6.58 இன்ச் முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே உடன் 1080x 2408 பிக்சல்கள் தீர்மான தெளிவுத்திறன் 20: 9 விகித விகிதத்துடன் வருகிறது. அதோடு இந்த ஸ்மார்ட்போன் 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம் மற்றும் 180 ஹெர்ட்ஸ் டச் மாதிரி விகிதத்துடன் வருகிறது. இது எச்டிஆர் 10+ ஆதரவோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 768ஜி செயலி மூலம் 8ஜிபி ரேம் வரை எல்பிடிடிஆர் 4 எக்ஸ் ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்புடன் வருகிறது. மேலும் இதில் மெமரி விரிவாக்க வசதிக்கு மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் வசதி இல்லை என கூறப்படுகிறது.

4400 எம்ஏஎச் பேட்டரி

4400 எம்ஏஎச் பேட்டரி

ஸ்மார்ட்போனானது 4400 எம்ஏஎச் பேட்டரியோடு வருகிறது. மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 55 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி இருக்கிறது. இணைப்பு ஆதரவுகளாக இந்த ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் இணைப்புக்கு 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, ப்ளூடூத் 5.1, யூஎஸ்பி டைப்சி போர்ட் ஆதரவோடு வருகிறது.

64 மெகாபிக்சல் டிரிபிள் ரியர் கேமரா

64 மெகாபிக்சல் டிரிபிள் ரியர் கேமரா

இந்த ஸ்மார்ட்போனானது 64 மெகாபிக்சல் டிரிபிள் ரியர் கேமரா அமைப்போடு வருகிறது. அதோடு தற்போதைய காலத்தில் ஸ்மார்ட்போன் சூடாகிறது என்ற குறை பெரும்பாலான ஸ்மார்ட்போன் பயனர்களிடம் இருக்கிறது. குறிப்பாக தொடர்ச்சியாக வீடியோகேம் விளையாடும் போது ஸ்மார்ட்போன் சூடாகிறது என்ற குறை தொடர்ந்து இருக்கிறது. இதை தடுப்பதற்கான அம்சம் இந்த ஸ்மார்ட்போனில் இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஐந்து அடுக்கு திரவ குளிரூட்டம் அமைப்பை கொண்டுள்ளது இதன் கூடுதல் அம்சமாகும். இது வெப்பநிலையை 10 டிகிரிவரை குறைக்கிறது. இது 4டி ஹாப்டிக் பின்னூட்ட அமைப்புடன் வருகிறது.

File Images

Best Mobiles in India

English summary
IQoo Z3 5G Set to Launch in India on June 8: Specs, Price

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X