Home
Mobile

64எம்பி ரியர் கேமராவுடன் அசத்தலான iQOO Z3 5G ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

ஐக்யூ நிறுவனம் தனது புதிய ஐக்யூ இசட் 3 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. விரைவில் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் இந்த புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஸ்னாப்டிராகன் சிப்செட்,64எம்பி ரியர் கேமரா உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ஐக்யூ இசட் 3 5ஜி ஸ்மார்ட்போன்.

நெபுலா

டீப் பிளாக், நெபுலா மற்றும் கிளவுட் ப்ளூ நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது ஐக்யூ இசட் 3 5ஜி ஸ்மார்ட்போன். இப்போது இந்த சாதனத்தின் விலை மற்றும் பல்வேறு அம்சங்களை சற்று விரிவாகப் பார்பபோம்.

 6.58-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே

6.58-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே

ஐக்யூ இசட் 3 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் 6.58-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1080 x 2408 பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம், 90Hz refresh rate, எச்டிஆர்10 பிளஸ் ஆதரவு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

iQOO UI 1.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 11

iQOO UI 1.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 11

ஐக்யூ இசட் 3 5ஜி ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்னாப்டிராகன் 768ஜி பிராசஸர் வசதி இடம்பெற்றுள்ளது. எனவே இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் iQOO UI 1.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

ஸ்மார்ட்போனில் 6ஜிபி/8ஜிபி

ஐக்யூ இசட் 3 5ஜி ஸ்மார்ட்போனில் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுவெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்தஒரு ஸ்லாட் வழங்கப்படும்.

64எம்பி Samsung ISOCELL GW3 சென்சார்

64எம்பி Samsung ISOCELL GW3 சென்சார்

ஐக்யூ இசட் 3 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி Samsung ISOCELL GW3 சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் இடம்பெற்றுள்ளது. மேலும் வீடியோ கால் வசதிக்கு என்றே 16எம்பி செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

4400எம்ஏஎச் பேட்டரி

4400எம்ஏஎச் பேட்டரி

இந்த புதிய ஸ்மார்ட்போனில் 4400எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 55வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வெளிவரும் இந்த புதிய ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த சாதனத்தின் கைரேகை சென்சார் வசதி இடம்பெற்றுள்ளது.

 ஐக்யூ இசட் 3 5ஜி விலை

ஐக்யூ இசட் 3 5ஜி விலை

இந்திய மதிப்பில்...
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஐக்யூ இசட் 3 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.18,805-ஆக உள்ளது.
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஐக்யூ இசட் 3 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.19,915-ஆக உள்ளது.
8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட ஐக்யூ இசட் 3 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.22,130-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
iQOO Z3 5G Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X