Home
Mobile

48எம்பி கேமரா, 5000எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம்.! பட்ஜெட் விலை.!

விவோ நிறுவனத்தின் துணை நிறுவனமான ஞைழழ நிறுவனம் தனது புதிய ஐக்யூ ஐக்யூ இசட்1x 5ஜி (iQOO Z1x 5G) ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது, விரைவில் அனைத்து நாடுகளிலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் இந்த சாதனத்தின் விலை மற்றும் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

மாடல் 6.57-இன்ச் முழு

iQOO Z1x 5G ஸ்மார்ட்போன் மாடல் 6.57-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 2408 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் HDR10 + ஆதரவு, 96 சதவீதம் என்.டி.எஸ்.சி கலர் கேமட் மற்றும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளுடன் வெளிவந்துள்ளது.

ஆண்ட்ராய்டு 10

இந்த புதிய iQOO Z1x 5G ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 765 5 ஜி ப்ராசஸர் உடன் அட்ரினோ 620 ஜி.பீ.யு ஆதரவும் இடம்பெற்றுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

கிராஃபைட் ஷீட் மற்றும் கூலிங் டர்போ தொழில்நுட்பத்துடன்

மேலும் iQOO Z1x 5G ஸ்மார்ட்போனில் கிராஃபைட் ஷீட் மற்றும் கூலிங் டர்போ தொழில்நுட்பத்துடன் கூடிய liquidcooling tube-வசதியும் இடம்பெற்றுள்ளது, இது 10 டிகிரி செல்சுயிஸ் வரை வெப்பநிலையைக் குறைக்க உதவுகிறது என்று ஐக்யூ நிறுவனம் கூறுகிறது.

 6ஜிபி/8ஜிபி ரேம்

இந்த ஸ்மார்ட்போன் மாடல் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதியை அடிப்படையாக கொண்டுவெளிவந்துள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பொறுத்தப்பட்டுள்ளன.

iQOO Z1x 5G ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார்என மொத்தம் மூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. மேலும் 16எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவுதொழில்நுட்பம் என பல்வேறு வசதிகள் இவற்றுள் அடக்கம்.

ல் 5000எம்ஏஎச் பேட்டரி

iQOO Z1x 5G சாதனத்தில் 5000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 33வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவை கொண்டுள்ளது இந்த சாதனம், நிறுவனத்தின் கூற்றுப்படி இது 30 நிமிடங்களில் ஸ்மார்ட்போனை 52 சதவீதம் வரை சார்ஜ் செய்யும் எனத் தெரவிக்கப்பட்டுள்ளது.

இணைப்பு ஆதரவுகளை கொ

5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை 6 802.11 ax, ப்ளூடூத் 5.1, ஜிபிஎஸ், க்ளோனாஸ், 3.5 மிமீ ஆடியோ ஜாக் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். மேலும் இந்த ஸ்மார்ட்போனின்ஆரம்ப விலை ரூ.17,200-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
iQOO Z1x 5G Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X