Home
Mobile

iQOO களமிறங்கும் புதிய 5ஜி போன்.. 8000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 12ஜிபி ரேம்.. எந்த மாடல்?

ஐக்யூ நிறுவனம் தனது புதிய ஐக்யூ இசட்12 லைட் 5ஜி (iQOO Z12 Lite 5G) ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த ஸ்மார்ட்போன் IMEI Database தளத்தில் காணப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் வரும் வாரங்களில் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. மேலும் ஐக்யூ இசட்12 லைட் 5ஜி போனின் முக்கிய விவரக்குறிப்புகள் ஆன்லைனில் கசிந்துள்ளது. இது குறித்த தகவல்களை இப்போது பார்க்கலாம்.

ஐக்யூ இசட்12 லைட் 5ஜி அம்சங்கள் (iQOO Z12 Lite 5G Specifications): 6.77-இன்ச் ஃபுல் எச்டி டிஸ்பிளே உடன் புதிய ஐக்யூ இசட்12 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

iQOO களமிறங்கும் புதிய 5ஜி போன்.. 8000எம்ஏஎச் பேட்டரி.. எந்த மாடல்?

சக்திவாய்ந்த மீடியாடெக் டைமன்சிட்டி 7400 சிப்செட் (MediaTek Dimensity 7400 chipset) உடன் புதிய ஐக்யூ இசட்12 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் கேமிங் ஆப்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்த முடியும்.

அதேபோல் 12ஜிபி வரை ரேம் மற்றும் 256ஜிபி வரை மெமரி ஆதரவுடன் ஐக்யூ இசட்12 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.

50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி செகண்டரி கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது புதிய ஐக்யூ இசட்12 லைட் 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் தெளிவான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவுடன் இந்த புதிய ஐக்யூ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த புதிய போனில் உள்ளன.

சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) ஆதரவுடன் ஐக்யூ இசட்12 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். அதேபோல் IP65 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) ஆதரவும் இந்த புதிய போனில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்(Stereo speakers) உள்ளிட்ட பல்வேறு சிறப்பான வசதிகள் இந்த ஐக்யூ இசட்12 லைட் 5ஜி ஸ்மார்ட்போனில் உள்ளன. அதேபோல் ஆண்ட்ராய்டு 16 இயங்குதள வசதியுடன் இந்த புதிய ஐக்யூ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

8000எம்ஏஎச் பேட்டரி உடன் ஐக்யூ இசட்12 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 33W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

5ஜி, 4ஜி, வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் ஐக்யூ இசட்12 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
iQOO Z12 Lite 5G Spotted on IMEI Database: Key Specifications Leaked
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X