Home
Mobile

செப்.14-க்கு அப்புறம் இதுதான்.. BYBASS சார்ஜிங்.. SONY கேமரா.. 7200mAh பேட்டரி.. LCD டிஸ்பிளே.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டில் ஐக்யூ இசட்11எக்ஸ்ஏ (iQOO Z11xa 5G) ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 7200mAh பேட்டரி, 44W சார்ஜிங், சோனி சென்சார் கேமரா, எல்சிடி டிஸ்பிளே உள்ளிட்ட பீச்சர்களுடன் பட்டையை கிளப்பி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் முழு பீச்சர்களை பார்த்துவிட்டு விலை மற்றும் விற்பனை விவரங்களுக்கு செல்லலாம்.

ஐக்யூ இசட்11எக்ஸ்ஏ அம்சங்கள் (iQOO Z11xa 5G Specifications): 6.76 இன்ச் (2344 x 1080 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளேவை இந்த ஐக்யூ இசட்11எக்ஸ்ஏ ஸ்மார்ட்போன் கொடுக்கிறது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. 1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

செப்.14-க்கு அப்புறம் இதுதான்.. BYBASS சார்ஜிங்.. SONY கேமரா.. மாடல்?

மேலும், ஐ கம்போர்ட் (Eye Comfort) மற்றும் புரொடெக்சன் மோட் (Protection Mode) கிடைக்கிறது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொடுத்துள்ளது. மீடியாடெக் டைமன்சிட்டி 7400 டர்போ 5ஜி (MediaTek Dimensity 7400 Turbo 5G) சிப்செட் கொண்ட மாடலாக இந்த ஐக்யூ இசட்11எக்ஸ்ஏ கிடைக்கிறது. அல்ட்ரா கேம் மோட் (Ultra Game Mode) கிடைக்கிறது.

மேலும், ஏஐ சூப்பர் லிங்க் (AI SuperLink), மான்ஸ்டர் கேமிங் மோட் (Monster Gaming Mode) உள்ளது. இதில் ஏஐ கேம் வாய்ஸ் சேஞ்சர், 4டி கேம் வைப்ரேஷன் மற்றும் பைபாஸ் சார்ஜிங் உள்ளிட்ட பீச்சர்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. ஓர்ஜின்ஓஎஸ் 6 (OriginOS 6) மற்றும் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொடுக்கப்பட்டு இருக்கிறது.

2 வருடங்களுக்கு ஓஎஸ் அப்டேட் மற்றும் 4 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்களை கொடுக்கிறது. ஓர்ஜின் ஐலேண்ட், ஏஐ கிரியேஷன் உள்ளிட்ட பீச்சர்கள் கிடைக்கின்றன. சோனி ஐஎம்எக்ஸ்852 (Sony IMX852) சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 2 எம்பி பொக்கெ கேமரா கிடைக்கிறது. 32 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது.

4K வீடியோ ரெக்கார்டிங் செய்து கொள்ளலாம். ஸ்மார்ட் இமேஜ் அசிஸ்டன்ட் (Smart Imaging Assistant), எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Electronic Image Stabilization), டூயல் வியூ வீடியோ (Dual-View Video) உள்ளிட்ட பீச்சர்கள் கொடுக்கப்படுகின்றன. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் (Side-mounted Fingerprint) கிடைக்கிறது.

IP68 ரேட்டிங் மற்றும் IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) கொடுக்கப்பட்டு இருக்கிறது. 44W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 7200mAh பேட்டரி கிடைக்கிறது. 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 6 மணி நேரங்களுக்கு காலிங் பேக்கப் கொடுக்கும். 1600 சார்ஜிங் சைக்கிள்களுக்கு பிறகும் 80 சதவீத பேட்டரி ஹெல்த் கிடைக்கும்.

இந்த ஐக்யூ இசட்11எக்ஸ்ஏ ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.27,499ஆக இருக்கிறது. டைட்டன் பிளாக் (Titan Black) மற்றும் பிரிஸ்மெட்டிக் கிரீன் (Prismatic Green) ஆகிய கலர்களில் கிடைக்க இருக்கிறது. செப்டம்பர் 14ஆம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது. அமேசான் தளத்தில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
iQOO Z11xa 5G With 50MP Camera Launched in India Sale From September 14 Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X